Tamil News  /  Entertainment  /  Putham Puthu Paattu Vantha Thandavakone Is The Disturbing Breeze Of Thangar Bachchan

20 years Thendral: “புத்தம் புது பாட்டு வந்தா தாண்டவ கோனே” தங்கர் பச்சனின் கலங்கடித்த தென்றல்

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 06, 2024 06:45 AM IST

தமிழ் திரைப்பட உலகில் 34 ஆண்டுகளாக சிறந்த ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், இயக்குநர், கருத்துரையாளர் என்ற பன்முகத்தன்மை கொண்ட தங்கர்பச்சான் தனது "அழகி" திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்கிய படம்தான் '"தென்றல்.

தங்கர் பச்சனின் கலங்கடித்த தென்றல்
தங்கர் பச்சனின் கலங்கடித்த தென்றல்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் திரைப்பட உலகில் 34 ஆண்டுகளாக சிறந்த ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், இயக்குநர், கருத்துரையாளர் என்ற பன்முகத்தன்மை கொண்ட தங்கர்பச்சான் தனது "அழகி" திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்கிய படம்தான் '"தென்றல்.

இந்த படத்தில் முற்போக்கு சிந்தனை உடைய எழுத்தாளர் நலங்கிள்ளியாக பார்த்திபன், தாமரைச்செல்வியாக உமாவும், சுந்தரியாக சுவாதியும், கிள்ளி வளவனாக அரவிந்த் பச்சனும், வெங்கட்ராம ஐயராக மதன்பாப்பும் சுந்தர காந்த் ஆக ரமேஷ் கண்ணாவும், ராகவா லாரன்ஸ் ஆகியோர் களமாடியிருக்கிறார்கள்.

திரைப்படம் துவங்கும் போதே கல்லறை ஒன்றில் தலை வைத்து சார்ந்த படி கதையை பின்னோக்கி பிளாஸ்பேக் காட்சிகளாக 1989 காலகட்டத்துக்கு நம்மை அழைத்து செல்கிறது. மத்திய அரசு விருது வழங்கும் விழாவில் குடியரசு தலைவர் முன்பாக விருது பெறுவதற்கு தேர்வாகி சென்ற எழுத்தாளர் நலங்கிள்ளி காவிரி நீர் பிரச்சினை யில் தமிழ் மக்களின் வாழ்க்கை நிலையை மனதில் வைத்து தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி விருதையும் பெற மறுக்கும் போதே அவரின் கதாபாத்திர வடிவமைப்பு நமக்கு புரிந்து கொள்ள முடிகிறது. 

இவருடைய எழுத்துக்களுக்கு தீவிர ரசிகையாக தாமரைச்செல்வி என்ற பாத்திரத்தில் உமா நலங்கிள்ளியை மனதில் நேசிக்கவும் செய்கிறார். நலங்கிள்ளி வீட்டில் உள்ள பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு பால் வியாபாரம் செய்து கொண்டு அந்த பகுதியில் தாமரை வசிக்கிறார். நலங்கிள்ளி யோடு எப்போதும் முரண்படும் ஐயர் பாத்திரத்தில் மதன்பாப் அமர்க்கள படுத்துகிறார். உள்ளூர் பிரச்சினை ஒன்றில் மாட்டி நலங்கிள்ளி சிறைக்கு செல்லும் போது அங்கு மரண தண்டனை கைதி லாரன்ஸை சந்திக்கிறார். அந்த இடத்தில் பறையிசை கலைஞர் வாழ்வியலை விவரிக்கும் இடமாக இயக்குநர் அமைத்திருப்பார்.

தாமரைக்கும் நலங்கிள்ளிக்கும் எப்படி தொடர்பு ஏற்படுகிறது. தாமரைக்கு மகனாக பிறக்கும் வளவனின் தந்தை யார் போன்ற கேள்விகளுக்கு விடை தேடி செல்கிறது கதை. ஒரு முற்போக்கு எழுத்தாளர் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து காட்சிகள் என்று வரிசையில் நகரும். தாமரை இறக்கும் தருவாயில் மகன் வளனிடம் தந்தை யார் என்பதை எடுத்துரைப்பார். இதுதான் தென்றல் சொல்ல வந்த கதை.

இந்த படத்தின் இசை அமைப்பாளர் வித்யா சாகர். |"அடி தோழி" "ஆழக்கடலு"

"பச்சை கிளி"

"பத்ரகோட்டை "

"வானவில்லின் வண்ணம்"

ஏய் பெண்னே"

"புத்தம் புது பாட்டு" என்று பாடல்கள் அனைத்தும் அருமை. அதிலும் வைரமுத்து எழுதி புஸ்பவனம் குப்புசாமி குழுவினர், எஸ்.பி.பி. பாடிய புத்தம் புது பாட்டு வந்தா தாண்டவ கோனே என் ரத்தம் எல்லாம் தீ பிடிக்கும் தாண்டவகோனே" என்ற நாட்டுப்புற பாடல் பறையிசையில் பட்டையை கிளப்பும். திரையரங்குகளில் இந்த பாடல் இடியாய் முழங்கும். இன்று வரை ஏராளமான மேடைகளை அந்த பாடல் அலங்கரித்துதான் வருகிறது.

தங்கர்பச்சான் இந்த படத்தை இயக்கியதோடு ஒளிப்பதிவும் செய்துள்ளார். இவரின் படங்களில் சமூக கருத்துக்களை, மனித உணர்வுகளை முன்னிறுத்தி தனி நபர்களுக்கும் பொருந்தும் விதமாய் அமைத்திருப்பார். வணிக நோக்கம் சாராமல் நல்ல கதைகளை மட்டும் நமக்கு காட்டுவதில் மும்முரமாக இருப்பார். அந்த வகையில் தென்றல் திரைப்படமும் சாதியம் சார்ந்த பிரச்சினை முதல் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை வரைக்கும் பேசி இருப்பார். தென்றல் வர்க்கமும் பேசி இருக்கிறது. நம்மை வருடவும் செய்திருக்கிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.