தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pushpa The Rule: ராஷ்மிகாவின் பிறந்த நாள்: பச்சை மற்றும் தங்கக் கலரில் ஜொலிக்கும் ராஷ்மிகா.. சுண்டி இழுக்கும் ஸ்ரீவள்ளி

Pushpa The Rule: ராஷ்மிகாவின் பிறந்த நாள்: பச்சை மற்றும் தங்கக் கலரில் ஜொலிக்கும் ராஷ்மிகா.. சுண்டி இழுக்கும் ஸ்ரீவள்ளி

Marimuthu M HT Tamil
Apr 05, 2024 02:26 PM IST

Pushpa The Rule: ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளை ஒட்டி ஸ்ரீவள்ளி போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

புஷ்பா தி ரூல் படத்தில் ஸ்ரீவள்ளியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
புஷ்பா தி ரூல் படத்தில் ஸ்ரீவள்ளியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

கர்நாடகாவில் விராஜ்பேட்டில் சுமன் மந்தனா மற்றும் மதன் மந்தனா தம்பதியினருக்கு 1996ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி, மகளாகப் பிறந்தவர், நடிகை ராஷ்மிகா மந்தனா.

ஆரம்பத்தில் கன்னடப் படங்களில் நடித்த ராஷ்மிகா மந்தனா, தற்போது தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிப் படங்களிலும் நடித்து இந்திய அளவில் பெரிய ஸ்டாராக உருவெடுத்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்த அனிமல் படம், இந்திய அளவில் மிகப்பெரிய ஹிட்டாகி, ராஷ்மிகாவுக்கு பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது.

இப்படத்துக்குப் பின், ராஷ்மிகா மந்தனாவை இந்திய அளவில் ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை, 43 மில்லியனாக உயர்ந்தது.

இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா, முன்பே ஹிட்டடித்த புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். அதற்கு புஷ்பா 2 - தி ரூல் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

‘’புஷ்பா தி ரைஸ்'' படத்தின் முதல் பாகத்தில், ராஷ்மிகா மந்தனாவின் ஃபெர்மான்ஸ், அவரை இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘’புஷ்பா 2- தி ரூல்’’படத்திலும் நடிக்கவைத்துள்ளது. 

இந்நிலையில் சமீபத்தில், புஷ்பா 2 தி ரூல் படத்தின் படப்பிடிப்புத்தளத்தில் நடிகை ராஷ்மிகா, சிவப்பு நிறச்சேலையில் இருக்கும் போட்டோ வைரல் ஆனது. 

இந்நிலையில் இன்று ராஷ்மிகாவின் 28ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது புகைப்படம் ஒன்றை தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்தப் போஸ்டரில் ராஷ்மிகா மந்தனா, பச்சை நிறப்பட்டு மற்றும் தங்க நிறத்திலான உடையணிந்து நெக்லஸ்களை அணிந்துள்ளார். 

மேலும், ஒரு பாடலில் செய்யும் அசைவுகள்போல, கண்ணில் கை வைத்து அழகாக போஸ் கொடுத்திருக்கிறார், ராஷ்மிகா மந்தனா. இந்த ஸ்டில்லில் முன்னணி நட்சத்திரம் அல்லு அர்ஜூன் இல்லை. 

புதிய போஸ்டர்:

புதிய போஸ்டர் குறித்து பேசிய ரசிகர் ஒருவர், ‘’ஒவ்வொரு போஸ்டரும் ஒரு வைரம்" என்று எக்ஸ் தளத்தில் கருத்து ஒன்றினைப் பதிவிட்டுள்ளார். "ஸ்ரீவள்ளி போஸ்டர், புஷ்பாவின் முதல் பாகத்திலிருந்து மிகவும் சுவாரஸ்யமாகவும் வித்தியாசமாகவும் தெரிகிறது. வரும் ஏப்ரல் 8ஆம் தேதி ‘’புஷ்பா 2: தி ரூல்'' டீசருக்காக வெறித்தனமாக காத்திருக்கிறேன்'' எழுதியிருக்கிறார். 

மேலும் ஒரு ரசிகர் எழுதியதாவது, "மீண்டும் ஒரு முறை அருமையான மற்றும் திறமையான நடிகை ராஷ்மிகா மேடத்துக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். நிச்சயமாக நீங்கள் வரவிருக்கும் நாட்களில் அதிக வெற்றியைப் பெறுவீர்கள். கடவுள் உங்களுக்கு என்றென்றும் நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் மகிழ்ச்சியை ஆசீர்வதிப்பார்’’ என்பது குறிப்பிடத்தக்கது. 

ராஷ்மிகா கடைசியாக பாலிவுட் திரைப்படமான ’’அனிமல்’’ படத்தில் ரன்பீர் கபூருடன் நடித்திருந்தார். இதை சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கியிருந்தார். இப்படத்தில் ரன்பீரின் மனைவியாக மிகவும் நெருக்கமான காட்சிகளில் ராஷ்மிகா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புஷ்பா 2: தி ரூல் படம் எத்தகையது:

புஷ்பா 2: தி ரூல் படத்தில் ஹீரோ அல்லு அர்ஜுன் இன்ஸ்டாகிராமில்," புஷ்பா இரட்டிப்பு நெருப்புடன் வருகிறார். புஷ்பா 2 தி ரூல் டீசர் ஏப்ரல் 8-ம் தேதி வெளியாகிறது’’ எனச் சுட்டிக்காட்டியுள்ளார். 

இப்படம் ஆகஸ்ட் 15, 2024 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து சுகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் பஹத் பாசில் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முன்னதாக, அல்லு அர்ஜூன், புஷ்பா முதல் பாகத்தில் நடித்ததற்காக தேசிய திரைப்பட விருதைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்