'நான் இப்படி எல்லாம் படம் எடுத்தா எப்போவோ சினிமாவ விட்டு போயிருப்பேன்' ஷாக் கொடுத்த புஷ்பா டைரக்டர் சுகுமார்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'நான் இப்படி எல்லாம் படம் எடுத்தா எப்போவோ சினிமாவ விட்டு போயிருப்பேன்' ஷாக் கொடுத்த புஷ்பா டைரக்டர் சுகுமார்

'நான் இப்படி எல்லாம் படம் எடுத்தா எப்போவோ சினிமாவ விட்டு போயிருப்பேன்' ஷாக் கொடுத்த புஷ்பா டைரக்டர் சுகுமார்

Malavica Natarajan HT Tamil
Published Jun 05, 2025 12:02 PM IST

நடிகரும் இயக்குநருமான உபேந்திரா போன்ற க்ளாசிக் திரைப்படங்களை நான் இயக்கியிருந்தால், இப்போது ஓய்வு எடுத்து சந்தோஷமாக இருந்திருப்பேன் என்று புஷ்பா பட இயக்குநர் சுகுமார் கூறியுள்ளார்.

'நான் இப்படி எல்லாம் படம் எடுத்தா எப்போவோ சினிமாவ விட்டு போயிருப்பேன்' ஷாக் கொடுத்த புஷ்பா டைரக்டர் சுகுமார்
'நான் இப்படி எல்லாம் படம் எடுத்தா எப்போவோ சினிமாவ விட்டு போயிருப்பேன்' ஷாக் கொடுத்த புஷ்பா டைரக்டர் சுகுமார்

சீதா பயணம் டீசர் ரிலீஸ்

ஹைதராபாத்தில் சமீபத்தில் அர்ஜுன் சர்ஜா இயக்கியுள்ள ‘சீதா பயணம்’ திரைப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவில் நடிகர் உபேந்திரா மற்றும் சுகுமார் இருவரும் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் உபேந்திரா பற்றி சுகுமார் நிறைய நல்ல விஷயங்களைப் பேசியுள்ளார்.

அற்புதமான கிளாசிக் படம்

‘உபேந்திரா போன்ற ஒரு வித்தியாசமான இயக்குநர் இந்தியாவில் வேறு யாருமே இல்லை. ஒரு இயக்குநர் ‘A’, ‘UI’, ஓம் மற்றும் ‘உபேந்திரா’ போன்ற படங்களை இயக்கியிருந்தால் அவர் ஓய்வு எடுத்துவிடலாம். நானும் அப்படிப்பட்ட படங்களை இயக்கியிருந்தால் நிச்சயமாக ஓய்வு எடுத்து இருப்பேன். அந்தளவுக்கு அற்புதமான க்ளாசிக் படங்கள்.

உபேந்திரா தான் காரணம்

ஒவ்வொரு இயக்குநரும் அவரிடம் இருந்து உத்வேகம் பெற்றுள்ளனர். இன்று என்னுடைய படங்கள் வித்தியாசமாக இருந்தால் அதற்கு உபேந்திராவின் படங்களே காரணம். அந்த மூன்று படங்களில் இருந்து நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். அங்கிருந்து நிறைய விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன்’ என்றார்.

வணிக ரீதியில் வெற்றி

சுகுமாரின் பேச்சுக்கு பதிலளித்த உபேந்திரா, ‘நான் மட்டும் இல்லை, பல இயக்குநர்கள் சுகுமாரின் ரசிகர்கள். ஒரு கதையை வித்தியாசமாகவும் வணிக ரீதியாகவும் எப்படி சொல்ல வேண்டும் என்பதை அவர் காட்டியுள்ளார்’ என்றார்.

ஆக்ஷன் கிங்

மேலும், அர்ஜுன் சர்ஜா பற்றி பேசிய உபேந்திரா, ‘நான் பள்ளியில் படிக்கும் போதே அர்ஜுன் சர்ஜா கர்நாடகாவில் ‘ஆக்‌ஷன் கிங்’ என்று பிரபலமாக இருந்தார். கராத்தேயில் மிகவும் பிரபலமாக இருந்தார். இந்தியாவில் உள்ள பிரூஸ் லீ போன்றவர். இரண்டு மூன்று படங்கள் ஹிட் ஆன பிறகு ஒரு வருடம் கூட செய்தி இல்லை.

எனக்கு வாய்ப்பு கொடுத்தவர்

அவர் தமிழில் பெரிய ஆக்‌ஷன் ஸ்டாராக இருந்தார். அப்போதே அவர் பான் இந்தியா ஸ்டாராக இருந்தார். நான் கல்லூரியில் படிக்கும் போதே எனக்கு வசனம் எழுத அவர் வாய்ப்பு கொடுத்தார். அவர் எனக்கு மிகப்பெரிய உத்வேகம். அவரோடு இந்த மேடையை பகிர்ந்து கொள்வது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. எனக்கு அப்படி ஒரு வாய்ப்பை அவர் கொடுத்தார். அதே போல என் அண்ணனின் மகனுக்கு இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கொடுத்தார்’ என்றார்.

சீதா பயணம் படம்

‘சீதா பயணம்’ படத்தில் உபேந்திராவின் அண்ணனின் மகன் நிர்ஜன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அர்ஜுன் சர்ஜாவின் மகள் ஐஸ்வர்யா நடித்துள்ளார். இந்த படம் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. ‘சீதா பயணம்’ படத்தை அர்ஜுன் சர்ஜா இயக்குவது மட்டுமல்லாமல், தனது ஸ்ரீராம் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், சத்யராஜ் போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். நீண்ட நாட்களுக்கு பின் அர்ஜூன் இயக்கத்தில் கவனம் செலுத்தி இருப்பதால் இந்தப் படத்தின் மீது அவரது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். அர்ஜூன் முனஅனதாகா 2018 ஆம் ஆண்டில் தனது மகள் ஐஸ்வர்யாவை வைத்து "சொல்லிவிடவா" என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.