கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரம்.. பற்றி எரியும் தெலங்கானா.. குடும்பத்திற்கு பெருந்தொகை தரும் தயாரிப்பு நிறுவனம்!
அந்தச் சிறுவன் பற்றி ஒவ்வொரு சில மணிநேரங்களுக்கும் ஒருமுறை அப்டேட் கேட்டுட்டு இருக்கேன். அவனுடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுட்டு இருக்கிறதா தகவல் வருகிறது. அது தான் நான் சந்தோஷப்படுற ஒரு விஷயம்.
அல்லு அர்ஜூனை பார்க்க வந்த ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி ரேவதி என்ற பெண்ணும், அவரது மகனும் உயிரிழந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு புஷ்பா படத்தின் தயாரிப்பு நிறுவனம் உதவ முன் வந்திருக்கிறது.
புஷ்பா 2 தி ரூல் சிறப்புக்காட்சியைப் பார்க்க அல்லு அர்ஜுன் திரையரங்குக்கு வந்திருந்தார். எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் வந்த காரணத்தால், அவரைப் பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் குவிந்தார்கள். இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜூனை தெலங்கானா போலீஸார் அதிரடியாக கைதுசெய்தனர்.
நீதிமன்றம் அவருக்கு 14 நாட்கள் காவல் விதித்த நிலையில், அதனைத்தொடர்ந்து அல்லு அர்ஜூன் சிக்கடபள்ளி ஜெயிலுக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அல்லு அர்ஜுன் தரப்பில் இருந்து தெலங்கானா உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கினார். ஆனாலும் அவர் சிறை விதிகளின் படி, அல்லு அர்ஜூன் இரவு சிறையில் அடைக்கப்பட்டார்.அடுத்த நாள் காலை அவர் விடுதலை செய்யப்பட்டார்.
தெலுங்கு திரையுலகின் மிக முக்கியமான நடிகர் இப்படி கைது செய்யப்பட்டது நாடெங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிரிழந்த ரேவதியின் குடும்பத்திற்கு அல்லு அர்ஜூன் 25 லட்சம் வழங்குவதாக அறிவித்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி சிகிச்சைப் பெற்று வந்த ரேவதியின் மகன் உயிரிழந்தான். ஒரு சினிமா பிரபலத்தை பார்க்க வந்து இரண்டு உயிர்கள், பறிபோனது நாடெங்கிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டதிற்கு பலரும் அரசை எதிர்த்து குரல் எழுப்பிய நிலையில், தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இந்த விவகாரம் குறித்து சட்ட சபையில் பேசினார்.
அவர் பேசும் போது, ‘சினிமா பிரமுகர் ஒருவர்(அல்லு அர்ஜூன்) ஒரு நாள் சிறைக்குச் சென்றதற்கு, திரையுலக நபர்கள் அனைவரும் அவரைப் பார்க்க அவரது வீட்டிற்குச் சென்றனர். என்னைத் திட்டுறாங்க. என்ன சபாநாயகர் அவர்களே, அந்த சினிமா பிரமுகருக்கு கால் போச்சா, கண் போச்சா, கை போச்சா, கிட்னி போச்சா என்ன ஆச்சு. ஒன்றும் ஆகவில்லை. ஆனால், சினிமா பிரமுகரை ஒவ்வொரு திரைப்பிரபலங்கள் சென்று விசாரிக்கின்றனர்.
ஆனால், அந்த சினிமா பிரமுகரில் ஒருவர் கூட மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கூட்டநெரிசலில் பாதிக்கப்பட்ட அந்த குழந்தையைச் சென்று பார்க்கவில்லை. இதனால் சினிமாவில் இருப்பவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை’ என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சாடியிருந்தார்.
விளக்கமளித்த அல்லு அர்ஜூன்
இதற்கு விளக்கமளித்த அல்லு அர்ஜூன், ‘இது ஒரு விபத்து. இது யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. நிஜமாகவே அந்த ஃபேமிலிக்கு நடந்தது மிக மிக துரதிர்ஷ்டம். நான் ரொம்ப வேதனைப்படுறேன்னு சொல்றேன்.
அந்தச் சிறுவன் பற்றி ஒவ்வொரு சில மணிநேரங்களுக்கும் ஒருமுறை அப்டேட் கேட்டுட்டு இருக்கேன். அவனுடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுட்டு இருக்கிறதா தகவல் வருகிறது. அது தான் நான் சந்தோஷப்படுற ஒரு விஷயம்.
இருபது வருஷமாக என்னை நீங்கள் பார்க்கிறீர்கள் தானே. நான் என்றைக்காவது அப்படி செய்திருக்கிறேனா?. அதனால் இந்த அணுகுமுறை ரொம்ப வேதனையைத் தருது. குறிப்பாக, என் கேரக்டர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் வேதனையைத் தருது. யார் யாரோ இறந்ததை எல்லாம் நான் போய் விசாரிக்கும்போது எனது சொந்த ரசிகை இறந்ததை விசாரிக்காமல் இருப்பேனா’ என அல்லு அர்ஜூன் பேசினார். முன்னதாக புஷ்பா 2 படத்தை இயக்கிய சுகுமாரும் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு 5 லட்சம் வழங்கி இருந்தார்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்