கிறிஸ்டோபர் நோலனின் படத்துக்கு டஃப் கொடுக்கும் வைல்டு ஃபயர் புஷ்பா 2.. வட அமெரிக்க பாக்ஸ் ஆபிஸ் வசூல் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கிறிஸ்டோபர் நோலனின் படத்துக்கு டஃப் கொடுக்கும் வைல்டு ஃபயர் புஷ்பா 2.. வட அமெரிக்க பாக்ஸ் ஆபிஸ் வசூல் தெரியுமா?

கிறிஸ்டோபர் நோலனின் படத்துக்கு டஃப் கொடுக்கும் வைல்டு ஃபயர் புஷ்பா 2.. வட அமெரிக்க பாக்ஸ் ஆபிஸ் வசூல் தெரியுமா?

Marimuthu M HT Tamil
Dec 08, 2024 04:36 PM IST

- கிறிஸ்டோபர் நோலனின் படத்துக்கு டஃப் கொடுக்கும் வைல்டு ஃபயர் புஷ்பா 2.. வட அமெரிக்க பாக்ஸ் ஆபிஸ் வசூல் தெரியுமா?

கிறிஸ்டோபர் நோலனின் படத்துக்கு டஃப் கொடுக்கும் வைல்டு ஃபயர் புஷ்பா 2.. வட அமெரிக்க பாக்ஸ் ஆபிஸ் வசூல் தெரியுமா?
கிறிஸ்டோபர் நோலனின் படத்துக்கு டஃப் கொடுக்கும் வைல்டு ஃபயர் புஷ்பா 2.. வட அமெரிக்க பாக்ஸ் ஆபிஸ் வசூல் தெரியுமா?

அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியானதிலிருந்து, இது இந்திய பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை செய்துள்ளது.

புஷ்பா 2 படத்தின் கதை என்ன?

புஷ்ப ராஜ் (அல்லு அர்ஜுன்) சிவப்பு சந்தன சிண்டிகேட் சாம்ராஜ்யத்தின் மறுக்க முடியாத தலைவராக மாறுகிறார். தனக்கென ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்கிறார். எஸ்.பி. பன்வர் சிங் ஷெகாவத் (ஃபஹத் ஃபாசில்) ஒவ்வொரு முறையும் புஷ்பாவின் சிவப்பு சந்தன மரத்தை சட்டவிரோதமாக கொண்டு செல்வதை தடுக்க முயற்சிக்கிறார்.

ஸ்ரீவள்ளி (ராஷ்மிகா மந்தனா) புஷ்பா முதலமைச்சருடன் ஒரு புகைப்படம் எடுப்பதைப் பார்க்க விரும்புகிறார். ஆனால் முதலமைச்சர் புஷ்பா ராஜை ஒரு கடத்தல்காரர் என்று கூறி அவருடன் புகைப்படம் எடுக்க மறுக்கிறார். முதலமைச்சரை நீக்கிவிட்டு சித்தப்பாவை (ராவ் ரமேஷ்) அந்த பதவியில் அமர வைக்க புஷ்பா முடிவு செய்கிறார்.

அதே வேளயைில் வெளிநாடு செல்லும் சிவப்பு சந்தன கட்டைகளை, பன்வர் சிங் ஷெகாவத் பிடிக்க முயற்சிக்கிறார். அது நடந்தால், புஷ்பாவின் சாம்ராஜ்யத்திற்கு ஆபத்து. இந்த இரு பிரச்னைகளை எப்படி சமாளித்தார் புஷ்பராஜ்? அதன் பிறகு என்ன நடந்தது?

இந்த சவாலில் புஷ்பா வெற்றி பெற்றாரா? புஷ்பாவின் பேரத்தை தடுக்க பன்வர் சிங் ஷெகாவத் என்ன செய்தார்? புஷ்பா அவரை எப்படி வீழ்த்தினார்? புஷ்பாவின் கனவு எப்படி நனவாகியது? தனது மூத்த சகோதரரின் மகளை காப்பாற்ற மத்திய அமைச்சர் பிரதாப் ரெட்டியுடன் (ஜெகபதி பாபு) புஷ்பா ஏன் சண்டையிட்டார்? இதுதான் புஷ்பா 2 படத்தின் கதை.

புஷ்பா 2 எத்தனை மொழிகளில் ரிலீஸ்:

இந்தப் படம் 2021ஆம் ஆண்டு வெளியான ’’புஷ்பா: தி ரைஸ்’’ படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இந்நிலையில் புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. அமெரிக்காவில் மட்டும் டிசம்பர் 4ஆம் தேதி வெளியானது.

புஷ்பா திரைப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டுமல்லாது, ரஷ்ய, ஜப்பானிய மற்றும் சீன மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிட்டடித்த புஷ்பா 2 தி ரூல் பாடல்கள்:

இந்நிலையில் புஷ்பா படத்தின் தயாரிப்பாளர்கள் ஏப்ரல் 8ஆம் தேதி அல்லு அர்ஜூனின் பிறந்தநாளில் ஒரு சிறப்பு டீஸரை வெளியிட்டனர். அதில் அல்லு அர்ஜூன் ’ஜதாரா’ என்னும் தெலுங்கு பழங்குடியினர் கெட்டப்பில் காணப்பட்டார். அதேபோல், ’புஷ்பா புஷ்பா புஷ்பராஜ்’ என்னும் முதல் சிங்கிள் பாடலும் வெளியானது. அதனைத்தொடர்ந்து புஷ்பா 2 படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடலும் வெளியானது. அப்பாடலை தமிழில் கவிஞர் விவேகா எழுதியுள்ளார். ’’சூடான தீ கங்கு மாதிரி.. இருப்பானே என் சாமி.. பார்க்கத்தான் பாறை.. உள்ளேயே வேற..’’என அனைத்து மக்களுக்கும் புரியும்படி எளிய தமிழில் கவிஞர் விவேகா எழுதியுள்ளார். இப்பாடல்கள் இரண்டும் சமூகவலைதளங்களில் ஹிட்டாகின.

அதைத்தொடர்ந்து சமீபத்தில் நடிகை ஸ்ரீலீலாவுடன், ’சப்புன்னு அறைவேன்டா’ என்னும் பாடலில் அல்லு அர்ஜூன் ஆடிய பாடல் வைரல் ஆகி வந்தது. இந்நிலையில் டிசம்பர் ஒன்றாம் தேதி மாலையில், வந்துச்சே பீலிங்ஸ்.. வந்துச்சே பீலிங்ஸ்.. வண்டிய வண்டியா வந்துச்சு பீலிங்ஸ் என்னும் பாடல் ரிலீஸ் ஆனது. இந்தப் பாடலையும் தேவிஸ்ரீபிரசாத்தின் ஆஸ்தான கவிஞரான விவேகா எழுதியிருக்கிறார். இப்பாடலும் ராஷ்மிகா மற்றும் அல்லு அர்ஜூனின் நடன அசைவுகளால் வெகு சீக்கிரமாக ட்ரெண்ட் ஆகியது.

புஷ்பா 2 வெர்சஸ் இன்டர்ஸ்டெல்லர்:

பாக்ஸ் ஆபிஸ் மோஜோ வெளியிட்ட அறிக்கையின்படி, புஷ்பா 2 தி ரூல் முதல் ரிலீஸ் ஆன சில நாட்களில் வட அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் கிறிஸ்டோபர் நோலனின் மிகவும் பாராட்டப்பட்ட ஹாலிவுட் படமான இன்டர்ஸ்டெல்லர் திரைப்படத்தின் வசூலை முறியடித்தது என்கின்றனர்.

புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் முதல்நாளில் மட்டும் 294 கோடி ரூபாய் வசூலை ஈட்டியதாக படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. குறிப்பாக இந்தி மொழிபேசும் மாநிலங்களில் மட்டும் 72 கோடியும், வட அமெரிக்காவில் 4.48 மில்லியன் டாலரை முதல் நாளில் புஷ்பா 2 கலெக்ட் செய்துள்ளது. அதேபோல், தமிழ்நாட்டில் ரூ.11 கோடி புஷ்பா 2 வசூலித்துள்ளது.

புஷ்பா 2: தி ரூல் திரைப்படம், தற்போது மோனா 2, விக்கட் மற்றும் கிளாடியேட்டர் 2-க்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் வசூலைப்பெற்றுள்ளது. வட அமெரிக்காவில் 1,245 திரையரங்குகளில் திரையரங்குகளில் வெளியாகி 17,00,000 டாலர்களை வசூலித்துள்ளது. இது இரண்டு நாட்களுக்குப் பிந்தைய பாக்ஸ் ஆபிஸ் அப்டேட் ஆகும்.

அதே மதிப்பீட்டில், இன்டர்ஸ்டெல்லர் புஷ்பா 2: தி ரூலுக்கு பின்னால் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 165 திரையரங்குகளில் ஐமேக்ஸில் ரீ-ரிலீஸ் பெற்ற பிறகு இரண்டு நாட்களில் 13,70,000 டாலர்களை இன்டர்ஸ்டெல்லர் பெற்றுள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.