Pushpa 2 The Rule OTT: தங்க உண்டியலை பறித்தது யார்?.. ‘புஷ்பா ஆட்சி தொடக்கம்..’ -புஷ்பா 2 ஓடிடி ரிலீஸ் எங்கே?
Pushpa 2 The Rule OTT: டிசம்பர் 5, 2024 அன்று வெளியான புஷ்பா 2 படத்தின் நீளம் 3 மணிநேரம் 20 நிமிடம் இருந்த நிலையில், கூடுதலாக 20 நிமிட காட்சிகள் சேர்க்கப்பட்டு 3 மணிநேரம் 40 நிமிடம் கொண்ட ரீலோடட் வெர்ஷன் ஜனவரி 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. - புஷ்பா 2 ஓடிடி ரிலீஸ் விபரம்

Pushpa 2 The Rule OTT: புஷ்பா 2 தி ரூல் ரீலோடட் ஓடிடி வெளியீடு: இயக்குநர் சுகுமாரின் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த புஷ்பா 2: தி ரூல் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
ஆம், இதனை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் உறுதிபடுத்தி இருக்கிறது. அந்தப்பதிவில், ‘புஷ்பாவின் ஆட்சி தொடங்கப் போகிறது. புஷ்பா 2 படத்தின் ரீலோடட் வெர்ஷனுடன் கூடுதலாக 23 நிமிட காட்சிகள் சேர்க்கப்பட்ட புஷ்பா 2 திரைப்படம் மிக விரைவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகும்’ என்று குறிப்பிட்டு இருக்கிறது.
கூடுதல் 23 நிமிடம்
முன்னதாக, டிசம்பர் 5, 2024 அன்று வெளியான புஷ்பா 2 படத்தின் நீளம் 3 மணிநேரம் 20 நிமிடம் இருந்த நிலையில், கூடுதலாக 20 நிமிட காட்சிகள் சேர்க்கப்பட்டு 3 மணிநேரம் 40 நிமிடம் கொண்ட ரீலோடட் வெர்ஷன் ஜனவரி 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போது அதனுடன் கூடுதலாக 23 நிமிடங்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ஓடிடியில் வெளியாகும் புஷ்பா 2 படத்தின் நீளம் 3 மணி 44 நிமிடங்களாக இருக்கும் என்று தெரிய வந்திருக்கிறது.
படத்தின் வெளியீட்டு தேதியை ஓடிடி தளம் இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், வருகிற வியாழன் (30 -01-2025) அன்று வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது. முன்னதாக, புஷ்பா 2 திரைப்படம் பற்றிய ஓடிடி வதந்திகள் சோசியல் மீடியாவில் உலாவிய போது, படக்குழு சார்பில், ‘56 நாட்களுக்குப் பிறகே புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று அறிவித்து இருந்தது. அதன்படி பார்க்கும் போது, ஜனவரி 30ம் தேதி புஷ்பா 2 திரைப்படம், அதன் 56 வது நிறைவு செய்யும். புஷ்பா 2 திரைப்படம் 52 நாட்களில் இந்தியாவில் ரூ.1,467.80 கோடியும், உலகம் முழுவதும் ரூ.1,738.45 கோடியும் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புஷ்பா 2 படம் செய்த சாதனைகள்
அல்லு அர்ஜுன் கெரியரில், படம் வெளியான அன்றைய தினமே 100 கோடி வசூலித்த படமாக மாறி இருக்கும் புஷ்பா 2, ராஷ்மிகா மற்றும் பகத் பாசில், சுகுமார் ஆகியோரது கெரியரிலும், அதே சாதனையை படைத்து இருக்கிறது.
தலா 50 கோடி..
படம் வெளியான அன்றைய தினம், ஹிந்தியில் 72 கோடியும் தெலுங்கில் 92 கோடியும் புஷ்பா 2 திரைப்படம் வசூல் செய்து இருக்கிறது. இதற்கு முன்னதாக தெலுங்கில், ஆர் ஆர் ஆர் திரைப்படம் படம் வெளியான அன்றைய தினம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
ஆனால், இந்தியாவில் இதற்கு முன்னதாக வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் ஓபனிங் டே வசூலை புஷ்பா 2 திரைப்படம் முறியடித்து விட்டது.
ஹிந்தியில் இதற்கு முன்னதாக ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தின் ஓபனிங் டே வசூலை முறியடித்து, புஷ்பா 2 திரைப்படம் 72 கோடி வசூல் செய்து இருக்கிறது.
அதேபோல கன்னடத்தில் உருவாகி வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட கேஜிஎப் 2 திரைப்படத்தின் ஓப்பனிங் கலெக்ஷனான 53 கோடியை விட அதிகமாக வசூல் செய்து, டப் செய்து வெளியிடப்பட்ட படங்களின் அதிக வசூல் செய்த படமாக புஷ்பா 2 திரைப்படம் மாறி இருக்கிறது. பாகுபலி, ஆர் ஆர் ஆர், கே ஜி எஃப் 2 திரைப்படங்கள் மூன்று நாட்களில் 400 கோடியே கடந்து வசூல் சாதனை புரிந்தன. ஆனால் புஷ்பா 2 நாட்களிலேயே 400 கோடியை தாண்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்