Pushpa 2 Box Office: புஷ்பாவை தூக்கி சாப்பிட்ட கேம் சேஞ்சர்.. புஷ் ஆன புஷ்பா கலெக்ஷன்.. புஷ்பா 2 பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pushpa 2 Box Office: புஷ்பாவை தூக்கி சாப்பிட்ட கேம் சேஞ்சர்.. புஷ் ஆன புஷ்பா கலெக்ஷன்.. புஷ்பா 2 பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Pushpa 2 Box Office: புஷ்பாவை தூக்கி சாப்பிட்ட கேம் சேஞ்சர்.. புஷ் ஆன புஷ்பா கலெக்ஷன்.. புஷ்பா 2 பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Malavica Natarajan HT Tamil
Jan 11, 2025 06:38 AM IST

Pushpa 2 Box Office: ராம் சரணின் கேம் சேஞ்சர் படம் நேற்று வெளியானதால் அல்லு அர்ஜூனின் புஷ்பா படத்தின் வசூல் அதிகளவு சரிவைக் கண்டுள்ளது.

Pushpa 2 Box Office: புஷ்பாவை தூக்கி சாப்பிட்ட கேம் சேஞ்சர்.. புஷ் ஆன புஷ்பா கலெக்ஷன்.. புஷ்பா 2 பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!
Pushpa 2 Box Office: புஷ்பாவை தூக்கி சாப்பிட்ட கேம் சேஞ்சர்.. புஷ் ஆன புஷ்பா கலெக்ஷன்.. புஷ்பா 2 பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

இதுவரை எந்த ஒரு இந்தியப் படத்திற்கும் இல்லாத அளவிற்கான ஓபனிங் கிடைத்து, இரண்டு மொழிகளில் ஒரே நாளில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்த முதல் படம் என்ற பெருமையையும் பெற்றது.

ஆனால், தற்போது சாதாரண வசூல் பெறுவதற்கே திணறி வருகிறது.

புஷ்பா 2 பாக்ஸ் ஆபிஸ் வசூல்

பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்களை வெளிப்படுத்தும் Sacnilk.com கூற்றுப்படி, படி, புஷ்பா 2 ரிலீசான 37வது நாளில் இந்தியாவில் மட்டும் ரூ. 1488.35 கோடி வசூலித்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உலக அளவில் வெளியிடப்பட்ட புஷ்பா திரைப்படம் 37வது நாளான நேற்று சுமார் ரூ.1718.35 கோடி வசூலை ஈட்டியுள்ளது.

புத்தாண்டிற்கு பின் புஷ்பா 2 படத்தின் வசூல் குறைந்து வரும் நிலையில், நேற்று ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியானது. இதனால், புஷ்பா படத்தின் வசூல் சர்ரென இறங்கியது. 

வழக்கமாக இந்தி மற்றும் தெலுங்கு மொழியில் ஒரு கோடி ரூபாய் வசூலையாவது எட்டும் புஷ்பா நேற்று அதற்கும் குறைவாக லட்சங்களில் தான் வசூல் பெற்றுள்ளது.

புஷ்பா 2 ரீலோடட்

இந்தியா முழுவதும் வசூல் மலையை குவித்து வரும் புஷ்பா 2: தி ரூல் படத்தின் ரீலோடட் வெர்ஷன் எனப்படும் 20 நிமிட கூடுதல் காட்சிகள் ஜனவரி 11 முதல் படத்தில் சேர்க்கப்பட்டு தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என படக்குழு சமீபத்தில் அறிவித்தது. 

இந்நிலையில், தற்போது புஷ்பா 2 ரீலோடட் பதிப்பு வெளியாக கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக படக்குழு எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் "தொழில்நுட்பக் காரணங்களால், புஷ்பா 2: தி ரூல் ரீலோடட் படத்தின் வெளியீடு தள்ளிப்போகிறது எனக் கூறியது.

புஷ்பா 2

சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா 2 படத்தில் அர்ஜுன் புஷ்பா ராஜ் என்ற பாத்திரத்தில் மீண்டும் நடிக்கிறார், அவர் இப்படத்தில் செம்மரக் கடத்தல் கும்பலின் தலைவராக மாறியுள்ளார். புஷ்பாவின் மனைவியான ஸ்ரீ வள்ளியாக ராஷ்மிகா நடித்துள்ளார். மேலும் இதில் மலையாள நடிகர் ஃபஹத் நடித்த போலீஸ் அதிகாரி பன்வர் சிங் ஷெகாவத் கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக இருந்தது. மேலும் இந்த திரைப்படத்தின் மூன்றாம் பாகமான புஷ்பா 3: தி ராம்பேஜ் என்ற பெயரிடப்பட்டு இந்த அறிவிப்போடு கதை முடிகிறது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.