Pushpa 2 OTT: 'புஷ்பான்னா ஃபயர் இல்ல.. வேர்ல்டு ஃபயர்'.. ஓடிடி ட்ரெண்டிங்கிலும் சம்பவம் செய்யும் புஷ்பா..
மிகப்பெரிய வசூலைப் பெற்று சாதனை படைத்த புஷ்பா 2 திரைப்படம், உலகளவில் ஸ்ட்ரீமிங்கில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த விவரங்கள் இதோ…

புஷ்பா 2: தி ரூல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று பல சாதனைகளைப் படைத்துள்ளது. ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்த இந்த திரைப்படம், பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்தது.
2024 டிசம்பர் 5 ஆம் தேதி வெளியான இந்தப் படம், தொடக்கத்திலிருந்தே சிறப்பாக ஓடி, இந்தியாவில் அதிக வசூலைப் பெற்றது உட்பட பல சாதனைகளைப் படைத்தது. இப்போது ஓடிடியிலும் புஷ்பா 2 திரைப்படம் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி உலகளவில் தனது திறமையை வெளிப்படுத்துகிறது.
உலகளவில் ட்ரெண்டிங்
புஷ்பா 2 திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் உலகளாவிய ட்ரெண்டிங் லிஸ்டில் முதல் பத்து இடங்களுக்குள் வந்துள்ளது. தற்போது (பிப்ரவரி 1) நெட்ஃபிளிக்ஸ் உலகளாவிய திரைப்படங்களின் பட்டியலில் ஏழாவது இடத்தில் புஷ்பா 2 ட்ரெண்டாகி வருகிறது. மிகப்பெரிய பார்வையாளர்களைக் கொண்டு சாதனை படைத்து வருகிறது. இந்திய ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் புஷ்பா 2 தனது ஆதிக்கத்தைச் செலுத்துகிறது.
ஜனவரி 30 ஆம் தேதி புஷ்பா 2 திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமிங்கிற்கு வந்தது. கூடுதல் காட்சிகளைக் கொண்ட ரீலோடெட் பதிப்பு ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
21 நாடுகளில் முதல் பத்து இடத்தில்
புஷ்பா 2 திரைப்படம் தற்போது உலகளவில் 21 நாடுகளில் நெட்ஃபிளிக்ஸ் திரைப்படங்களின் முதல் பத்து இடங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இந்தியாவுடன், பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் தற்போது முதலிடத்தில் உள்ளது. மொத்தமாக 21 நாடுகளில் முதல் பத்து இடங்களில் ட்ரெண்டாகி வருகிறது. புஷ்பான்னா ஃபயர்ன்னு நெனச்சீங்களா.. புஷ்ப்பான்னா வேர்ல்டு ஃபயர் என்று இந்தப் படத்தில் வசனம் இருப்பது போல, உலகளவிலான ஓடிடி ஸ்ட்ரீமிங்கில் இந்தப் படம் தீயாய் இருக்கிறது.
புஷ்பா 2 ஸ்ட்ரீமிங் உரிமை
புஷ்பா 2 நெட்ஃபிளிக்ஸ் ஸ்ட்ரீமிங் விளம்பரத்திற்காக அல்லு அர்ஜுன் ஒரு சிறப்பு விளம்பரத்தையும் வெளியிட்டுள்ளார். மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள இந்தத் திரைப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமங்களை நெட்ஃபிளிக்ஸ் சுமார் ரூ.275 கோடி என்ற சாதனைத் தொகைக்குப் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. அந்த அளவிற்கு இந்தப் படம் பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறது.
புஷ்பா 2 விமர்சனம்
புஷ்பா 2 திரைப்படத்தை சுகுமார், மிகப்பெரிய அளவில் ஆக்ஷன் திரைப்படமாக இயக்கியுள்ளார். முதல் பாகத்தில் ஏற்பட்ட எதிர்பார்ப்புகளைப் 2ம் பாகத்தில் பூர்த்தி செய்துள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். அத்துடன் புஷ்பா ராஜ் கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுன் மீண்டும் அசத்தியுள்ளார். ஆக்ஷன், ஸ்டைலுடன் அசத்தியுள்ளார். இதனால் தொடக்கத்திலிருந்தே இந்தப் படம் அசத்தியது. தெலுங்கில் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் மிகப்பெரிய வசூலைப் பெற்றது என விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.
புஷ்பா 2 படக்குழு
புஷ்பா 2 திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுடன் ஸ்ரீவல்லி கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் ரஷ்மிகா மந்தனா. இந்தப் படத்தில் ஃபாஹத் பாசில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜகபதி பாபு, ராவ் ரமேஷ், ஜகதீஷ், சுனில், அனசுயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பாடல்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையில் பெரும்பாலான பகுதியை சாம் சி.எஸ். அமைத்துள்ளார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பேனரின் கீழ் நவீன், ரவிசங்கர் தயாரித்துள்ளனர்.
புஷ்பா 2 வசூல்
புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் ரூ.1850 கோடி வசூலைக் கடந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தங்கல் படத்திற்குப் பிறகு அதிக வசூலைப் பெற்ற இந்தியத் திரைப்படமாகத் திகழ்கிறது. இந்தியாவில் அதிக வசூலைப் பெற்ற திரைப்படமாக சாதனை படைத்துள்ளது. பாலிவுட்டில் சர்வகால சாதனையைப் படைத்துள்ளது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்