‘பிரபலமா இருக்குறது ஒரு குத்தமா?; சொர்க்கத்துக்கு போய் ஸ்ரீதேவியை கைது பண்ணுங்க.. அல்லுக்காக நாம போரடனும்’-ராம் கோபால்
சொர்க்கத்துக்கு போய் ஸ்ரீதேவியை கைது பண்ணுங்க.. அல்லுக்காக நாம போரடனும்’ என்று இயக்குநர் ராம் கோபால் வர்மா எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
அல்லு அர்ஜூனுக்கு ஆதரவாக பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.
அந்த பதிவில், ‘எல்லா நடிகர்களும் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டதற்கு எதிராக எதிராக போராட வேண்டும். ஒருவர் திரைப்பட நடிகராகவோ அல்லது அரசியல் வாதியோ இருக்கும் பட்சத்தில், அவர் பிரபலமாக இருப்பது என்ன அவ்வளவு பெரிய குற்றமா?
ஸ்ரீதேவி க்ஷனா க்ஷணம் படத்திற்கான ஷூட்டிங் வந்திருந்த போது அவரை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் குவிந்தார்கள். லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்த அந்த கூட்டத்தில் கிட்டத்தட்ட 3 பேர் உயிரிழந்தனர். அதற்கு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தெலங்கானா போலீஸ் சொர்க்கத்திற்கு சென்று ஸ்ரீதேவியை கைது செய்ய முடியுமா?’ என்று பதிவிட்டு இருக்கிறார்.
முன்னதாக, புஷ்பா 2 தி ரூல் முதல் காட்சியைப் பார்க்க அல்லு அர்ஜுன் திரையரங்குக்கு வந்தபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், அல்லு அர்ஜூனை தெலங்கானா போலீஸார் அதிரடியாக கைதுசெய்தனர் அதனைத்தொடர்ந்து அல்லு அர்ஜூன் சிக்கடபள்ளி ஜெயிலுக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அல்லு அர்ஜுன். தரப்பில் இருந்து உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கினார். ஆனாலும் அவர் நேற்று இரவு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் தற்போது விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்.
நடந்தது என்ன?:
உலகெங்கும் புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸானது. அதில் குறிப்பாக தெலங்கானாவில் ரசிகர்களுக்காக டிசம்பர் 4ஆம் தேதி இரவு 10 மணிக்கு படத்துக்கான பிரிமீயர் ஷோக்கள் போடப்பட்டன. அதனால், அந்த காட்சியைப் பார்க்க அல்லு அர்ஜுன் தனது குடும்ப உறுப்பினர்களுடன் 4ஆம் தேதி இரவு 10 மணிக்கு படம் பார்க்க ஹைதராபாத்தில் ஆர்.டி.சி. கிராஸ் ரோட்ஸில் உள்ள சந்தியா தியேட்டருக்கு வந்தார். இதனை அவர் யாரிடமும் தெரிவிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் அங்கு அல்லு அர்ஜுனை பார்க்க ரசிகர்கள் கூட்டம் குவிந்து நெரிசல் ஏற்பட்டது.
அதில் ஹைதராபாத்தின் எல்.பி.நகரில் வசிக்கும் ரேவதி என்கிற இளம்பெண், டிசம்பர் 4 ஆம் தேதி, படம்பார்க்க சந்தியா தியேட்டருக்கு வந்திருந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். மேலும், அவரது மகன் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். போலீசார் சிபிஆர் சிகிச்சை செய்து சிறுவனை மீட்டனர்.
அல்லு அர்ஜுன் மீது எழுந்த குற்றச்சாட்டுகள்:
அல்லு அர்ஜுன் வருவது குறித்து முன்கூட்டியே தகவல் இல்லாததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த சம்பவம் தொடர்பாக தியேட்டர் உரிமையாளர் மற்றும் மேலாளர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அல்லு அர்ஜுனை டிசம்பர் 13ஆம் தேதி காலையில் அவரது இல்லத்தில் போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் இதுவரை கைது செய்தனர்.
என்னென்ன பிரிவுகளில் வழக்குப்பதிவு:
அல்லு அர்ஜுன் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிஎன்எஸ் பிரிவுகள் 105, 118 (1) மற்றும் 3 (1) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததற்காக அவரை கைது செய்வதாக ஹைதராபாத் போலீசார் தெரிவித்தனர்.
வாக்குவாதத்தில் ஈடுபட்ட அல்லு அர்ஜுன்:
அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டபோது சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. வீட்டின் முதல் மாடியில் உள்ள அல்லு அர்ஜுனை நெருங்கிய அதிரடிப் படையினர், ஹைதராபாத் சிக்கடபள்ளி போலீசார் அவரை கைது செய்வதாக தகவல் அறிந்ததும் அதிர்ச்சியடைந்தனர்.
படுக்கை அறையில் இருந்த அல்லு அர்ஜுனை போலீசார் கைது செய்தனர். வீட்டில் ஷார்ட்ஸ் அணிந்திருந்த அல்லு அர்ஜூனை லிப்டில் இருந்து கீழே இறங்கிய போலீஸார், பின்னர் அவரது ஆடைகளை மாற்ற பணித்தனர். அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் அல்லு அர்ஜுனின் தந்தை அரவிந்த் சம்பவ இடத்திற்கு விரைந்தார். மேலும், சந்தியா தியேட்டரில் நடந்த இந்த சம்பவத்திற்கு அல்லு அர்ஜுன் தான் காரணம் என்று போலீசார் விளக்கம் அளித்தனர்.
அதன்பின், அல்லு அர்ஜுன் மற்றும் அவரது தந்தையும் போலீஸ் வாகனத்தில் சென்றனர். தெலங்கானா நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கிய போதும் சிறை விதிகளை காரணம் காட்டி, அவர் அன்றைய தினம் இரவு சிறையில் வைக்கப்பட்டார். காலையில் அவர் விடுதலை செய்யப்பட்டார். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ரேவதியின் மகனும் உயிரிழந்தார்.
டாபிக்ஸ்