என்ன பிரச்சனை வந்தாலும் நான் தான் நம்பர் 1.. சொல்லி அடிக்கும் புஷ்பா 2.. நியூ இயரில் குவிந்த வசூல்..
புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி 28 நாட்களைக் கடந்தும் தியேட்டர்களில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், நேற்று நியூ இயர் விடுமுறை நாளில் வசூல் எகிறி உள்ளது

தெலுங்கு சினிமாவின் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியிருக்கும் புஷ்பா 2 திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் ரூ. 294 கோடி வசூலித்து, ஓபனிங் நாளில் அதிக வசூலை பெற்ற படம் என்ற புதியதொரு சாதனை புரிந்துள்ளது. இதுவரை எந்த ஒரு இந்தியப் படத்திற்கும் இல்லாத அளவிற்கான ஓபனிங் கிடைத்து, இரண்டு மொழிகளில் ஒரே நாளில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்த முதல் படம் என்ற பெருமையையும் பெற்றது.
புஷ்பா 2 பாக்ஸ் ஆபிஸ் வசூல்
பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்களை வெளிப்படுத்தும் Sacnilk.com கூற்றுப்படி, படி, புஷ்பா 2 ரிலீசான 28வது நாளில் இந்தியாவில் மட்டும் ரூ 1397 கோடி வசூலித்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நேற்று புத்தாண்டு பண்டிகை விடுமுறையால் ஒரே நாளில் வசூல் அதிகரித்துள்ளது. அதன்படி அதிகபட்சமாக நேற்று ஒருநாள் மட்டும் தெலுங்கில் ரூ. 3.15 கோடியும் இந்தியில் 9.5 ோ
மேலும், உலக அளவில் வெளியிடப்பட்ட புஷ்பா திரைப்படம் 26வது நாளான நேற்று சுமார் ரூ.1639 கோடி வசூலை ஈட்டியுள்ளது. புஷ்பா 2 திரைப்படம் வார இறுதி நாள்களில் அதிகப்படியான வசூல்களைக் குவித்து வருகிறது.
