தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pushpa2firstsingle: ’நீ தாடி நீவும் அழகைப் பார்க்க கூடி நிற்கும் ஊரு’; டீயை கீழே ஊற்றாமல் ஆடிய அல்லு அர்ஜூன்

Pushpa2FirstSingle: ’நீ தாடி நீவும் அழகைப் பார்க்க கூடி நிற்கும் ஊரு’; டீயை கீழே ஊற்றாமல் ஆடிய அல்லு அர்ஜூன்

Marimuthu M HT Tamil
May 01, 2024 05:55 PM IST

Pushpa2FirstSingle: புஷ்பா 2: தி ரூல் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது.

புஷ்பா 2: தி ரூல் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ்
புஷ்பா 2: தி ரூல் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா 2: தி ரூல் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை தமிழில் விவேகா எழுதியுள்ளார்.

புஷ்பா 1:

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த 'புஷ்பா' முதல் பாகம் டிசம்பர் 17, 2021அன்று வெளியிடப்பட்டது. ஆந்திராவின் திருப்பதி வனப்பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபடும், புஷ்பா என்கிற புஷ்பராஜின் எழுச்சியைப் பற்றி, இப்படம் காட்சியமைக்கப்பட்டது. 250 கோடி ரூபாய் முதலீடுசெய்து எடுக்கப்பட்ட இப்படம், பாக்ஸ் ஆபிஸில், 360 கோடி வசூல்செய்து சாதனைப் படைத்தது. மேலும் இப்படத்தில் நடித்ததற்காக அல்லு அர்ஜூனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அதன்பிறகு அல்லு அர்ஜூன் கதையம்சம் உள்ள படத்தில் நடிப்பதற்காக வேறு எந்தப் படத்திலும் நடிக்க கவனம் செலுத்தவில்லை. முழுக்க 'புஷ்பா 2' படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

புஷ்பா 2 திரைப்பட நடிகர்கள்:

புஷ்பா 2 திரைப்படத்தினை, புஷ்பா 1 படத்தை இயக்கிய சுகுமாரே எழுதி இயக்குகிறார். படத்திற்கான வசனத்தை ஸ்ரீகாந்த் விசா எழுதியுள்ளார். ‘’புஷ்பா 2: தி ரூல்'' படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் மீண்டும் நடித்துள்ளனர். இதில் அல்லு அர்ஜூன் ’புஷ்பராஜ்’ என்னும் கதாபாத்திரத்திலும், ராஷ்மிகா மந்தனா ’ஸ்ரீவள்ளி’ என்னும் கதாபாத்திரத்திலும் மற்றும் ஃபஹத் பாசில், பன்வர் சிங் ஷெகாவத் ஆகிய கதாபாத்திரத்திலும் மீண்டும் நடிக்கின்றனர்.

புஷ்பா 2 எத்தனை மொழிகளில் ரிலீஸ்:

இந்தப் படம் 2021ஆம் ஆண்டு வெளியான ’’புஷ்பா: தி ரைஸ்’’ படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இப்படம் இந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. குறிப்பாக, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டுமல்லாது, ரஷ்ய, ஜப்பானிய மற்றும் சீன மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்படவுள்ளது.

புஷ்பா படத்தின் தயாரிப்பாளர்கள் சமீபத்தில் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளில் ஒரு சிறப்பு டீஸரை வெளியிட்டனர். அதில் அவர் ஜதாரா என்னும் பழங்குடியினர் கெட்டப்பில் காணப்பட்டார். இது ரசிகர்கள் பலரை ஈர்த்தது.

புஷ்பா 2 படத்தின் இசை:

அதன் முன்னோட்டமாக தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்த பாடலின் 20 விநாடி கிளிப் படக்குழுவினர் வெளியிட்டனர். இந்நிலையில் படத்தின் முதல் பாடலான ’’புஷ்பா.. புஷ்பா’’ பாடல் மே 1ஆம் தேதியான இன்று மாலை 5:04 மணிக்கு தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடா, மலையாளம் மற்றும் பெங்காலி மொழிகளில் வெளியாகும் எனப் படத்தின் தயாரிப்புக் குழுவான, மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

புஷ்பா 2 படத்தின் பாடல்களை தெலுங்கில் சந்திரபோஸ் எழுத, தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். புஷ்பா 2 படத்தின் பாடல்களை டி- சீரிஸ் வாங்கியுள்ளது.

புஷ்பா 2வின் சில உரிமைகள்:

படத்தின் விநியோக வட இந்திய விநியோக உரிமையை ஏ.ஏ. பிலிம்ஸ் நிறுவனம் ரூ.200 கோடியில் வாங்கியுள்ளது.

படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனமும்,சாட்டிலைட் உரிமையை ஸ்டார் மா நிறுவனமும் வாங்கியுள்ளது.

புஷ்பா 2வின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டி, ஒடிசாவின் மல்கங்கிரி, விஜயவாடா நெடுஞ்சாலை, விசாகப்பட்டினத்தின் யாகந்தி கோயிலில் சில காட்சிகள் படமாக்கப்பட்டன.இப்படத்திற்காக மொத்தமாக ரூ.500 கோடி ரூபாய் செலவில் இப்படம் உருவாகியுள்ளது.

புஷ்பா 2 பட ஃபர்ஸ்ட் சிங்கிள்:

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா 2: தி ரூல் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை தமிழில் விவேகா எழுதியுள்ளார். இவர் ஏற்கனவே ’ஊ சொல்றீயா மாமா’ பாடலை எழுதி பிரபலம் ஆனவர்.

இந்நிலையில், ‘’நீ தாடி நீவும் அழகைப் பார்க்க கூடி நிற்கும் ஊரு,

நீ தோள தூக்கி நடந்தால் தூள் பறக்கும் பாரு;

உன் உயரம் சொல்ல ஆகாயத்த மேல தள்ள வேணும்;

உன் ஆழம் சொல்ல கடலைத் தோண்டி செல்ல வேணும்’’ என நாயகன் வழிபாட்டுப் பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது. இப்பாடலை நகஷ் ஆஸிஸ், தீபக் ப்ளூ ஆகியோர் இணைந்து தமிழில் பாடியுள்ளனர்.

‘’ புஷ்பா 2'' படத்தின் முதல் பாடல் தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி ஆகிய மொழிகளிலும் வெளியாகியுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்