Pushpa 2 box office: ஓடிடியில் ஓஹோ வரவேற்பு.. திரையரங்கு வசூல் பாதிக்கப்பட்டதா? இல்லையா? - புஷ்பா 2 வசூல் எவ்வளவு?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pushpa 2 Box Office: ஓடிடியில் ஓஹோ வரவேற்பு.. திரையரங்கு வசூல் பாதிக்கப்பட்டதா? இல்லையா? - புஷ்பா 2 வசூல் எவ்வளவு?

Pushpa 2 box office: ஓடிடியில் ஓஹோ வரவேற்பு.. திரையரங்கு வசூல் பாதிக்கப்பட்டதா? இல்லையா? - புஷ்பா 2 வசூல் எவ்வளவு?

Kalyani Pandiyan S HT Tamil
Feb 02, 2025 11:50 AM IST

Pushpa 2 box office: ஹிந்தியில் இதற்கு முன்னதாக ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தின் ஓபனிங் டே வசூலை முறியடித்து, புஷ்பா 2 திரைப்படம் 72 கோடி வசூல் செய்து இருக்கிறது. - புஷ்பா 2 வசூல் எவ்வளவு?

Pushpa 2 box office: ஓடிடியில் ஓஹோ வரவேற்பு.. திரையங்கு வசூல் பாதிக்கப்பட்டதா? இல்லையா? - புஷ்பா 2 வசூல் எவ்வளவு?
Pushpa 2 box office: ஓடிடியில் ஓஹோ வரவேற்பு.. திரையங்கு வசூல் பாதிக்கப்பட்டதா? இல்லையா? - புஷ்பா 2 வசூல் எவ்வளவு?

புஷ்பா 2 வசூல் எவ்வளவு?

Sacnilk தளம் வெளியிட்ட தகவல்களின் படி பார்க்கும் போது, 59 வது நாளில் புஷ்பா 2 திரைப்படம் இந்தியாவில் 10 லட்சம் ரூபாயை வசூல் செய்திருக்கிறது. மொத்தமாக இந்தியாவில் இதுவரை புஷ்பா 2 திரைப்படம் 1233. 60 கோடி வசூல் செய்திருக்கிறது. மொத்தமாக 8 வாரத்தில் புஷ்பா 2 திரைப்படம் 2. 85 கோடியாக கணக்கிடப்பட்டு இருக்கும் நிலையில், 9 வது வாரம் இந்த வசூல் இன்னும் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, டிசம்பர் 5, 2024 அன்று வெளியான புஷ்பா 2 படத்தின் நீளம் 3 மணிநேரம் 20 நிமிடம் இருந்த நிலையில், கூடுதலாக 20 நிமிட காட்சிகள் சேர்க்கப்பட்டு 3 மணிநேரம் 40 நிமிடம் கொண்ட ரீலோடட் வெர்ஷன் ஜனவரி 11ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியானது. தற்போது அதனுடன் கூடுதலாக 23 நிமிடங்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ஓடிடியில் வெளியாகும் புஷ்பா 2 படத்தின் நீளம் 3 மணி 44 நிமிடங்களாக இருக்கிறது.

புஷ்பா 2 படம் செய்த சாதனைகள்

அல்லு அர்ஜுன் கெரியரில், படம் வெளியான அன்றைய தினமே 100 கோடி வசூலித்த படமாக மாறி இருக்கும் புஷ்பா 2, ராஷ்மிகா மற்றும் பகத் பாசில், சுகுமார் ஆகியோரது கெரியரிலும், அதே சாதனையை படைத்து இருக்கிறது.

தலா 50 கோடி..

படம் வெளியான அன்றைய தினம், ஹிந்தியில் 72 கோடியும் தெலுங்கில் 92 கோடியும் புஷ்பா 2 திரைப்படம் வசூல் செய்து இருக்கிறது. இதற்கு முன்னதாக தெலுங்கில், ஆர் ஆர் ஆர் திரைப்படம் படம் வெளியான அன்றைய தினம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

ஆனால், இந்தியாவில் இதற்கு முன்னதாக வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் ஓபனிங் டே வசூலை புஷ்பா 2 திரைப்படம் முறியடித்து விட்டது.

ஹிந்தியில் இதற்கு முன்னதாக ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தின் ஓபனிங் டே வசூலை முறியடித்து, புஷ்பா 2 திரைப்படம் 72 கோடி வசூல் செய்து இருக்கிறது.

அதேபோல கன்னடத்தில் உருவாகி வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட கேஜிஎப் 2 திரைப்படத்தின் ஓப்பனிங் கலெக்ஷனான 53 கோடியை விட அதிகமாக வசூல் செய்து, டப் செய்து வெளியிடப்பட்ட படங்களின் அதிக வசூல் செய்த படமாக புஷ்பா 2 திரைப்படம் மாறி இருக்கிறது. பாகுபலி, ஆர் ஆர் ஆர், கே ஜி எஃப் 2 திரைப்படங்கள் மூன்று நாட்களில் 400 கோடியே கடந்து வசூல் சாதனை புரிந்தன. ஆனால் புஷ்பா 2 நாட்களிலேயே 400 கோடியை தாண்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.