Pushpa 2 Box Office: பணத்தை அரித்து எடுக்கும் அல்லு.. வேட்டியை மடித்துக்கட்டி நிற்கும் அமீர்கான்! - புஷ்பா 2 வசூல்?
Pushpa 2 Box Office: Sacnilk.com தளம் வெளியிட்ட தகவல்களின் படி, 42 நாட்களில், உலகளவில், புஷ்பா 2 திரைப்படம் 1729.5 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது என்று கூறியிருக்கிறது. - புஷ்பா 2 வசூல் எவ்வளவு தெரியுமா?

Pushpa 2 Box Office: பணத்தை அரித்து எடுக்கும் அல்லு.. வேட்டியை மடித்துக்கட்டி நிற்கும் அமீர்கான்! - புஷ்பா 2 வசூல்?
அல்லு அர்ஜூன் நடிப்பில், இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், கடந்த டிசம்பர் 5ம் தேதி வெளியான திரைப்படம் புஷ்பா 2. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்தத்திரைப்படத்தில் நேற்றிலிருந்து கூடுதலாக 20 நிமிடத்திற்கு காட்சிகள் சேர்க்கப்பட்டு திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்திய அளவில் எவ்வளவு வசூல்?
நேற்றோடு திரைப்படம் வெளியாகி 43 நாட்கள் ஆன நிலையில், அதனுடைய வசூல் விபரங்களைப் இங்கே பார்க்கலாம். 43 ஆம் நாள் வசூலை பொருத்தவரை வசூலானது, 42 ஆம் நாள் வசூலை விட கிட்டத்தட்ட 33.33 சதவீதம் குறைவு ஆகும். ஆம், நேற்றைய தினம் புஷ்பா 2 திரைப்படம் இந்தியாவில் வெறும் 0.65 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது; மொத்தமாக இந்தியாவில் புஷ்பா 2 திரைப்படம் 1224. 65 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.