Pushpa 2: அடிமட்ட வசூல்.. கடையை சாத்தும் புஷ்பராஜ்.. அமீர்கானிடம் தோற்ற அல்லு; -வசூல் விபரம் இங்கே!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pushpa 2: அடிமட்ட வசூல்.. கடையை சாத்தும் புஷ்பராஜ்.. அமீர்கானிடம் தோற்ற அல்லு; -வசூல் விபரம் இங்கே!

Pushpa 2: அடிமட்ட வசூல்.. கடையை சாத்தும் புஷ்பராஜ்.. அமீர்கானிடம் தோற்ற அல்லு; -வசூல் விபரம் இங்கே!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 15, 2025 02:27 PM IST

Pushpa 2: அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் டங்கல் திரைப்படத்தின் 2000 கோடி வசூலை முறியடிக்குமா என்று படக்குழு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கு சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாக இருக்கின்றன -வசூல் விபரம் இங்கே!

Pushpa 2: அடிமட்ட வசூல்.. கடையை சாத்தும் புஷ்பராஜ்.. அமீர்கானிடம் தோற்ற அல்லு; -வசூல் விபரம் இங்கே!
Pushpa 2: அடிமட்ட வசூல்.. கடையை சாத்தும் புஷ்பராஜ்.. அமீர்கானிடம் தோற்ற அல்லு; -வசூல் விபரம் இங்கே!

அதளபாதாளத்தில் அல்லு அர்ஜூன்

ஆம், 6 வது திங்கள் கிழமை புஷ்பா 2 திரைப்படம் வெறும் 1 கோடி ரூபாய் மட்டும் வசூல் செய்திருக்கிறது. ஆம், தெலுங்கில் ரூ.24 லட்சமும், ஹிந்தியில் ரூ.75 லட்சமும், தமிழில் ரூ.1 லட்சமும் வசூலித்தது.

புஷ்பா 2 திரைப்படம் அதன் தொடக்க வாரத்தில் 725.8 கோடி ரூபாய் வசூல் செய்தது. அதன் பின்னர் புதிய திரைப்படங்கள் வெளியான போதும், புஷ்பா 2 திரைப்படம் வசூலில் பெரும் ஆதிக்கம் செலுத்தியது.

வசூல் விபரம்

இரண்டாவது வாரத்தில் புஷ்பா படம் ரூ 264.8 கோடியை ஈட்டியது; ஆனால் அதன் மூன்றாவது வாரத்தில் சரிவைச் சந்தித்தது; உலகளவில் 1,831 கோடி வசூல் செய்து, இதற்கு முன்னதாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற பாகுபலி திரைப்படத்தின் வசூலை முறியடித்தது. தற்போது டங்கல் திரைப்படத்தின் 2000 கோடி வசூலை முறியடிக்குமா என்று படக்குழு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் புஷ்பா 2 திரைப்படத்தில் கூடுதலாக 20 நிமிட காட்சிகள் சேர்க்கப்பட்டு, திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புஷ்பா 2 படம் செய்த சாதனைகள்

அல்லு அர்ஜுன் கெரியரில், படம் வெளியான அன்றைய தினமே 100 கோடி வசூலித்த படமாக மாறி இருக்கும் புஷ்பா 2, ராஷ்மிகா மற்றும் பகத் பாசில், சுகுமார் ஆகியோரது கெரியரிலும், அதே சாதனையை படைத்து இருக்கிறது.

தலா 50 கோடி..

படம் வெளியான அன்றைய தினம், ஹிந்தியில் 72 கோடியும் தெலுங்கில் 92 கோடியும் புஷ்பா 2 திரைப்படம் வசூல் செய்து இருக்கிறது. இதற்கு முன்னதாக தெலுங்கில், ஆர் ஆர் ஆர் திரைப்படம் படம் வெளியான அன்றைய தினம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

ஆனால், இந்தியாவில் இதற்கு முன்னதாக வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் ஓபனிங் டே வசூலை புஷ்பா 2 திரைப்படம் முறியடித்து விட்டது.

ஹிந்தியில் இதற்கு முன்னதாக ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தின் ஓபனிங் டே வசூலை முறியடித்து, புஷ்பா 2 திரைப்படம் 72 கோடி வசூல் செய்து இருக்கிறது.

அதேபோல கன்னடத்தில் உருவாகி வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட கேஜிஎப் 2 திரைப்படத்தின் ஓப்பனிங் கலெக்ஷனான 53 கோடியை விட அதிகமாக வசூல் செய்து, டப் செய்து வெளியிடப்பட்ட படங்களின் அதிக வசூல் செய்த படமாக புஷ்பா 2 திரைப்படம் மாறி இருக்கிறது. பாகுபலி, ஆர் ஆர் ஆர், கே ஜி எஃப் 2 திரைப்படங்கள் மூன்று நாட்களில் 400 கோடியே கடந்து வசூல் சாதனை புரிந்தன. ஆனால் புஷ்பா 2 நாட்களிலேயே 400 கோடியை தாண்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.