சக்கரத்தில் சிக்கிய புஷ்பா 2.. தங்கல் வசூலை முறியடிக்க வாய்ப்பு இருக்கா இல்லையா? - எவ்வளவு கோடிகள் தேவை?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சக்கரத்தில் சிக்கிய புஷ்பா 2.. தங்கல் வசூலை முறியடிக்க வாய்ப்பு இருக்கா இல்லையா? - எவ்வளவு கோடிகள் தேவை?

சக்கரத்தில் சிக்கிய புஷ்பா 2.. தங்கல் வசூலை முறியடிக்க வாய்ப்பு இருக்கா இல்லையா? - எவ்வளவு கோடிகள் தேவை?

Kalyani Pandiyan S HT Tamil
Jan 07, 2025 06:02 PM IST

தங்கல் வசூலை முறியடிக்க வாய்ப்பு இருக்கா இல்லையா? - எவ்வளவு கோடிகள் தேவை? என்பதை இங்கே பார்க்கலாம்.

சக்கரத்தில் சிக்கிய புஷ்பா 2.. தங்கல் வசூலை முறியடிக்க வாய்ப்பு இருக்கா இல்லையா? - எவ்வளவு கோடிகள் தேவை?
சக்கரத்தில் சிக்கிய புஷ்பா 2.. தங்கல் வசூலை முறியடிக்க வாய்ப்பு இருக்கா இல்லையா? - எவ்வளவு கோடிகள் தேவை?

புஷ்பா 2 பாக்ஸ் ஆஃபிஸ் வசூல்

பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்களை வெளியிடும் Sacnilk தளம் வெளியிட்ட தகவல்களின் படி, புஷ்பா 2 திரைப்படம் 33 வது நாளில் ரூ2.5 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருக்கிறது. இந்த வசூலானது 65.28 சதவீத சரிவை குறிக்கிறது. இந்தியாவில் மொத்தமாக 1441 கோடி ரூபாயை வசூல் செய்திருக்கும் புஷ்பா 2 திரைப்படம் இந்தியாவில் அதிகம் வசூல் திரைப்படம் என்ற சாதனையை படைத்து இருக்கிறது. இதில், தெலுங்கில் ரூ.335.41 கோடியும், ஹிந்தியில் ரூ.793.2 கோடியும், தமிழில் ரூ.58.21 கோடியும், கன்னடத்தில் ரூ.7.73 கோடியும், மலையாளத்தில் ரூ.14.15 கோடியும் இந்தப்படம் வசூல் செய்திருக்கிறது.

32 நாட்களில் உலகளவில் புஷ்பா 2 திரைப்படம் 1831 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது; முன்னதாக பாகுபலி 2 திரைப்படம் உலகளவில் 1788 கோடி வசூல் செய்திருந்தது; அமீர்கான் நடித்த தங்கல் திரைப்படம் 2070 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. இந்திய திரைப்பட வசூலில் முதலிடத்தில் இருக்கும் தங்கல் திரைப்படத்தின் வசூலை புஷ்பா 2 திரைப்படம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு இன்னும் 239 கோடி ரூபாய் தேவை என்பது தெரிய வந்திருக்கிறது.

நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களை அல்லு அர்ஜுன் சந்தித்தார்

டிசம்பர் 4 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் புஷ்பா 2: தி ரூல் படத்தின் முதல் காட்சியின் போது, அல்லு அர்ஜுனின் திடீர் வருகையால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது மகன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரை அல்லு அர்ஜூன் இன்று அங்கு சென்று சந்தித்தார்.

புஷ்பா 2 படம் செய்த சாதனைகள்

அல்லு அர்ஜுன் கெரியரில், படம் வெளியான அன்றைய தினமே 100 கோடி வசூலித்த படமாக மாறி இருக்கும் புஷ்பா 2, ராஷ்மிகா மற்றும் பகத் பாசில், சுகுமார் ஆகியோரது கெரியரிலும், அதே சாதனையை படைத்து இருக்கிறது.

தலா 50 கோடி..

படம் வெளியான அன்றைய தினம், ஹிந்தியில் 72 கோடியும் தெலுங்கில் 92 கோடியும் புஷ்பா 2 திரைப்படம் வசூல் செய்து இருக்கிறது. இதற்கு முன்னதாக தெலுங்கில், ஆர் ஆர் ஆர் திரைப்படம் படம் வெளியான அன்றைய தினம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

ஆனால், இந்தியாவில் இதற்கு முன்னதாக வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் ஓபனிங் டே வசூலை புஷ்பா 2 திரைப்படம் முறியடித்து விட்டது.

ஹிந்தியில் இதற்கு முன்னதாக ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தின் ஓபனிங் டே வசூலை முறியடித்து, புஷ்பா 2 திரைப்படம் 72 கோடி வசூல் செய்து இருக்கிறது.

அதேபோல கன்னடத்தில் உருவாகி வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட கேஜிஎப் 2 திரைப்படத்தின் ஓப்பனிங் கலெக்ஷனான 53 கோடியை விட அதிகமாக வசூல் செய்து, டப் செய்து வெளியிடப்பட்ட படங்களின் அதிக வசூல் செய்த படமாக புஷ்பா 2 திரைப்படம் மாறி இருக்கிறது. பாகுபலி, ஆர் ஆர் ஆர், கே ஜி எஃப் 2 திரைப்படங்கள் மூன்று நாட்களில் 400 கோடியே கடந்து வசூல் சாதனை புரிந்தன. ஆனால் புஷ்பா 2 நாட்களிலேயே 400 கோடியை தாண்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.