அல்லு அர்ஜுனிடம் போலீசார் நீண்ட நேரம் விசாரணை.. சரிவை சந்திக்கும் புஷ்பா 2 வசூல்! உலக அளவில் புதியதொரு மைல்கல்
சந்திய திரையரங்கம் கூட்ட நெரிசல் சம்பவத்தால் புஷ்பா 2 படத்தின் வசூல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் அல்லு அர்ஜுனிடம் போலீசார் நீண்ட நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்
இந்த மாதம் வெளியான பான் இந்தியா படமாக புஷ்பா 2 இருந்து. இதன் பின்னர் எந்த பெரிய படங்களும் இதுவரை வெளியாகவில்லை. இதற்கிடையே தமிழில் சூது கவ்வும் 2, விடுதலை 2 ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது. சூதுகவ்வும் 2 பெரிதாக வரவேற்பை பெறாத நிலையில், விடுதலை 2 கலவலையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இந்த சூழ்நிலையில், ஹைதராபாத் சந்தியா திரையரங்கம் கூட்ட நெரசலில் பெண் இறந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் புஷ்பா 2 படத்தின் வசூல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு வாரத்திலேயே இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ. 1000 கோடியை தாண்டிய படம் என்ற சாதனையை புஷ்பா 2 பெற்றது. இதையடுத்து படத்தின் வசூல் கடந்த சில நாள்களாக குறைந்துள்ளது.
புஷ்பா 2 பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
புஷ்பா 2 படம் வெளியாகி இன்றுடன் 20 நாள்கள் ஆகியுள்ளது. இதையடுத்து பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை வெளிப்படுத்தும் Sacnilk.com இன் சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் பாக்ஸ் ஆபிஸில் படம் ரூ.1080 கோடியைத் தாண்டியுள்ளது.
புஷ்பா 2 ரிலீஸ் ஆகி 20 நாள்களுக்குப் பிறகு இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ. 1089.51 கோடி வசூலித்துள்ளது. படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியான நிலையில், மூன்றாவது செவ்வாய் அன்று படத்தின் ஒரு நாள் வசூல் ஆரம்ப மதிப்பீடுகளின்படி ரூ. 14.25 கோடியாக உள்ளது.
புஷ்பா 2 அதன் முதல் வார முடிவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 725.8 கோடி வசூலித்தது. இதன் இரண்டாவது வார வசூல் ரூ. 264.8 கோடியாக இருந்தது.
உலகம் முழுவதும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், உலக பாக்ஸ் ஆபிஸில் ரூ. 1,500 கோடியை தாண்டியதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் பாகுபலி சீரிஸ் படங்களுக்கு பின் புதியதொரு மைல்கல்லை எட்டிய படமாக புஷ்பா 2 மாறியுள்ளது.
சந்தியா திரையரங்கம் கூட்ட நெரிசல் சர்ச்சை
புஷ்பா 2 திரைப்படம் வெளியாவதற்கு முந்தைய நாள் இரவில், ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் திரையிடப்பட்ட படத்தின் பிரீமியர் காட்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஒரு நாள் சிறை வாசத்துக்கு பின்னர் ஜாமினில் வெளியே வந்தார்.
இந்த விவகாரம் மீண்டும் தெலங்கானா சட்டப்பேரவையில் விஸ்வரூபம் எடுத்த நிலையில் அர்ஜுனின் வீடு அடித்து நொறுக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பத்தை அவர் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். நடிகரின் வீடு இப்போது வெள்ளைத் தாள்களாலும், முன்பக்கத்திலிருந்து நீண்ட வெள்ளைத் திரைகளாலும் மூடப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜுனிடம் போலீசார் விசாரணை
ஹைதராபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில், தெலங்கானா அமைச்சர் கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி முன்னிலையில் புஷ்பா 2 தயாரிப்பாளர்கள், நவீன் எர்னேனி மற்றும் ரவிசங்கர் ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் காசோலையை வழங்கினர்.
இந்த வழக்கு தொடர்பாக அவருக்கு அனுப்பப்பட்ட சம்மனின் ஒரு பகுதியாக நடிகர் அல்லு அர்ஜுன் ஹைதராபாத் காவல்துறையில் ஆஜரானார். இதன் பின்னர் சிக்கட்பள்ளி காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடைபெற்றது.
டாபிக்ஸ்