சர்ச்சைக்கு மத்தியில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 ரூ.1070 கோடியை தாண்டியது.. 19ஆம் நாளில் எவ்வளவு வசூல் செய்தது?
சுகுமாரின் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் நடித்த புஷ்பா 2: தி ரூல் பாக்ஸ் ஆபிஸில் 19 நாளில் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
புஷ்பா 2: தி ரூல் படத்திற்கு இதுவரை எந்த ஒரு இந்தியப் படத்திற்கும் இல்லாத அளவிற்கான ஓபனிங் கிடைத்தது. மேலும் புஷ்பா 2 படமே இதுவரை அதிக வசூல் செய்த படமாகும். இரண்டு மொழிகளில் ஒரே நாளில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்த முதல் படம் என்ற பெருமையையும் பெற்றது.
ரிலீசுக்கு முந்தைய நாள் திரையிடப்பட்ட ப்ரிவியூ, முதல் நாள் காட்சிகள் என அனைத்தும் சேர்த்து இவ்வளவு வசூல் பெறப்பட்டுள்ளது. 19 நாளில் புஷ்பா திரைப்படம் கைப்பற்றிய வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.
19 ஆம் நாளில் புஷ்பா 2 பாக்ஸ் ஆபிஸ் வசூல்
பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்களை வெளிப்படுத்தும் Sacnilk.com கூற்றுப்படி, புஷ்பா 2 ஆரம்ப மதிப்பீடுகளின்படி ரூ.12.25 கோடியை வசூலித்தது என்று கூறுகிறது. இதுவரை படத்தின் குறைந்தபட்ச ஒரு நாள் வசூல் இதுவாகும். புஷ்பா 2 டிசம்பர் 4 ஆம் தேதி அதன் பிரீமியர் காட்சியின் போது ரூ. 10.65 கோடியையும், அதன் தொடக்க நாளில் ரூ. 164.25 கோடியையும் வசூலித்தது. இப்படம் இந்தியாவில் முதல் வாரத்தில் ரூ.725.8 கோடியையும், இரண்டாவது வாரத்தில் ரூ.264.8 கோடியையும் வசூலித்தது. படத்தின் மொத்த வசூல் ரூ. 1074.85 கோடி.
18 ஆம் நாளில் புஷ்பா 2 பாக்ஸ் ஆபிஸ் வசூல்
பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்களை வெளிப்படுத்தும் Sacnilk.com கூற்றுப்படி, படி, புஷ்பா 2 ரிலீசான 18வது நாளில் இந்தியாவில் மட்டும் ரூ. 1227.8 கோடி வசூலித்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், உலக அளவில் வெளியிடப்பட்ட புஷ்பா திரைப்படம் 18வது நாளான நேற்று சுமார் ரூ.1467.8 கோடி வசூலை ஈட்டியுள்ளது. புஷ்பா 2 திரைப்படம் வார இறுதி நாள்களில் அதிகப்படியான வசூல்களைக் குவித்து வருகிறது.
இருப்பினும், கடந்த சில நாட்களாக புஷ்பா 2 படத்தின் வசூல் வேகம் குறைந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
புஷ்பா படத்தின் அடுத்த அப்டேட்
கடந்த டிசம்பர் 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான புஷ்பா 2 படம் ரூ.1,100 கோடிக்கு மேல் வசூல் செய்து ரூ.1,200 கோடியை நெருங்கி வருகிறது. ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் கேரியரில் சிறந்த படமான புஷ்பா 2வை அவரது ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், படத்தை 3டி வெர்ஷனில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
அல்லு அர்ஜூன் வீட்டில் கல்வீச்சு
இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள அல்லு அர்ஜுன் வீடு தாக்கப்பட்டது. வீட்டின் வளாகத்தில் இருந்த பூந்தொட்டிகளை சிலர் அடித்து நொறுக்கினர். அவர்கள் மேலும் வீட்டின் மீது தக்காளிகளை வீசி நீதிக்கான கோஷங்களை எழுப்பினர். இதையறிந்த போலீசார் 8 பேரை கைது செய்தனர். அவர்கள் உஸ்மானியா பல்கலைக் கழகத்தை சேர்ந்த மாணவ அமைப்பினர் தலைவர்கள் என்று கூறப்பட்டு வரும் நிலையில், இதை போலீசார் இன்னும் உறுதி செய்யவில்லை.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்