சர்ச்சைகளுக்கு மத்தியிலும் எகிறும் புஷ்பா 2 பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன்! 21 ஆவது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
புஷ்பா 2 பாக்ஸ் ஆபிஸ் வசூல்: புஷ்பா 2 தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்து வருகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அதிவேகமாக ரூ.1,700 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

அல்லு அர்ஜுனை சுற்றியும் புஷ்பா 2 படத்தை சுற்றியும் கடந்த சில நாட்களாகவே பல சர்ச்சைகள் சென்று கொண்டிருக்கின்றன. இருப்பினும் இத்தனை பிரச்சனைகளை எதிர்க் கொண்டாலும் புஷ்பா 2 படத்தின் கலெக்சனில் எந்த தொய்வும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து சாதனைகளை முறியடித்து வருகிறது. டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் டிசம்பர் 25 வரை வெறும் 21 நாட்களில் ரூ .1700 கோடி வசூலை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதிவேகமாக சாதனை படைத்த இந்திய படம் என்ற பெருமையை பெற்றது.
புஷ்பா 2.வின் 21 நாட்களில் ரூ .1705 கோடி
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் புஷ்பா 2 பாக்ஸ் ஆபிஸில் ஒருபோதும் இல்லாத வசூலை வாரிக் குவித்து வருகிறது. இந்த படம் 21 நாட்களில் உலகளவில் ஏறத்தாழ ரூ.1705 கோடி வசூலித்துள்ளதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் வியாழக்கிழமை (டிசம்பர் 26) தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதன் மூலம் நடிகர் பிரபாஸின் பாகுபலி 2 படத்தின் உலக வசூல் சாதனையை புஷ்பா 2 நெருங்கியுள்ளது.
2024 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படங்களின் சாதனைகளில் இந்த படம் முதல் இடத்தில் இருந்து வருகிறது. இந்திய சினிமாவில்மற்ற படங்களின் சாதனையை தொடர்ந்து முறியடித்து வருகிறது. புஷ்பா 2 தி ரூல் ரூ .1700 கோடி வசூலித்த முதல் இந்திய திரைப்படமாகும். 21 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.1705 கோடி வசூல் செய்துள்ளதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தெரிவித்துள்ளது. பாகுபலி 2 உலகம் முழுவதும் ரூ.1788 கோடி வசூல் செய்து இருந்தது. புஷ்பா 2 அந்த சாதனையை மிக விரைவில் முறியடிக்கும் என்று தெரிகிறது.