Jani Master: அந்தப் பொன்னு விஷயம்.... புஷ்பா டேரக்டருக்கு எல்லாமே தெரியும்... குண்டைத் தூக்கிப் போட்ட ஜானி மாஸ்டர்
Jani Master: தன் மீது புகார் செலுத்திய பெண் குறித்து புஷ்பா பட இயக்குநர் சுகுமாருக்கு முன்கூட்டியே அனைத்து விஷயங்களும் தெரியும் என பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜானி மாஸ்டர் கூறி புதிய புயலைக் கிளப்பியுள்ளார்.
தமிழ், தெலுங்கு மொழி திரைப்படத்தில் தன்னுடைய வித்யாசமான நடன அசைவுகள் மூலம் மக்கள் கவனத்தை பெற்றவர் ஜானி மாஸ்டர். இவரின் நடனத்தை பாராட்டி இந்திய அரசு அவருக்கு தேசிய விருதையும் வழங்கியது.
பாலியல் புகார்
இந்த நிலையில் தான், இவரிடம் உதவி நடன இயக்குநராக பணியாற்றி வந்த 21 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இந்தப் புகாரை ஏற்ற ஹைதராபாத் போலீசார், தலைமறைவாக இருந்த ஜானி மாஸ்டரை கைது செய்தனர். இதன் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து ஜானி மாஸ்டருக்கு நான்கு நாள் போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்போது அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்ததோடு, அடிப்படை ஆதரமற்றது எனவும் கூறியுள்ளாராம்.
நான் நிரபராதி
இந்நிலையில், தெலுங்கில் வெளிவரும் பிரபல பத்திரிகை ஒன்றில், இந்த விவகாரம் குறித்து ஜானி மாஸ்டர் தெரிவித்த கருத்துகள் வெளியானது. அதில், என்னால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக பெண் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. அவள் ஒரு நிகழ்ச்சி மூலம் எனக்கு அறிமுகமானார்.
மைனராக இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அவர் பொய் சொல்கிறார். அவருடைய திறமையை அடையாளம் கண்டு எனக்கு உதவி நடன இயக்குநராக சேர்த்துக்கொண்டேன். ஆனால், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பாதிக்கப்பட்ட பெண் என்னை மனரீதியாக டார்ச்சர் செய்தார். பலமுறை மிரட்டலும் விடுத்தார்.
எனக்கு எதிராக சதி நடக்கிறது. யாரோ பின்னால் இருந்து எனக்கு எதிராக சதி வேலை செய்கிறார்கள். எனது வளர்ச்சியை தாங்கி கொள்ள முடியாமல் இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளார்கள்" என விசாரணையின் போது அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இப்படி இருக்க தற்போது ஜானி மாஸ்டர் தெரிவித்த வேறு சில கருத்துகளும் வெளியாகியுள்ளது. அதில், இந்திய அளவில் பெரும் வெற்றி பெற்ற புஷ்பா திரைப்பட இயக்குநர் சுகுமாறன் பெயரை இழுத்துள்ளார்.
விவகாரத்திற்குள் வந்த புஷ்பா டேரக்டர்
அப்போது, புஷ்பா படத்தின் படப்பிடிப்பின் போது, அந்தப் பெண் என்னை மிகவும் டார்ச்சர் செய்தார். தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார்.
இதனால் , மனதளவில் வேதனையடைந்த நான், புஷ்பா பட இயக்குநர் சுகுமாறிடம் கூறினேன். இந்த விஷயத்தில் அவரும் எனக்கு உதவி செய்தார். அந்தப் பெண்ணிடம் சுகுமாரும் பல அறிவுரைகளை வழங்கினார். ஆனால், அந்தப் பெண் அவற்றை எல்லாம் ஏற்பதாகவே தெரியவில்லை. தன் முடிவில் உறுதியாகவே இருந்தார். அதற்கு நான் சம்மதம் தெரிவிக்காமல் இருந்ததால் தான் என் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் எனக் கூறியுள்ளார்.
ஆவேசமான மனைவி
தன் கணவர் மீதான பெண் ஒருவரின் இந்த புகாருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஜானி மாஸ்டர் மனைவி ஆயிஷா, இதுதொடர்பாக அளித்த பேட்டியில், "அந்தப் பெண் 16 வயதில் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு அருவருப்பானது. அதில் துளி அளவும் உண்மை இல்லை. பாதிக்கப்பட்டதாக கூறும் அவர் உரிய ஆதாரத்தை வெளிப்படுத்தி, தன் கணவர் மீதான குற்றச்சாட்டை நிரூபித்து விட்டால், நான் உடனே என் கணவரை விட்டு பிரிந்துவிடுவேன்" என்று ஆவேசமாக கூறினார்.