Thalapathy Vishal: ‘நான் மெண்டல் கிடையாது.. விஜயை பார்த்து காப்பி அடிச்சேனா?’- கிடுக் கேள்விக்கு படக் பதில் சொன்ன விஷால்
இன்று அவர் உங்கள் முன் தளபதியாய் மாறி நிற்கிறார் என்றால், அதற்கு அவருடைய தன்னபிக்கைதான் காரணம். அவர் எப்படி உங்களுக்கு ஒரு உந்து சக்தியாக இருக்கிறாரோ, அதே போல எனக்கும் அவர் உந்து சக்தியாக இருக்கிறார்.

நாடாளுமன்ற தேர்தலின் போது வாக்களிக்க சைக்கிளில் வந்தது ஏன்? அதற்கு முன்னதாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது, விஜய் சைக்கிளில் வந்தார். அதைப்பார்த்து காப்பி அடித்தீர்களா? உள்ளிட்ட கேள்விகளுக்கு விஷால் பதில் அளித்திருக்கிறார்.
இது குறித்து திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் கலந்து கொண்ட விஷால் பேசும் போது, “ ஒரு நடிகனுக்கு வெற்றி என்பது சாதரண விஷயம் கிடையாது. அதற்கு எவ்வளவு போராட வேண்டும் என்பது எனக்குத் தெரியும். விஜய்க்கு ஆரம்பத்தில் அவ்வளவு விமர்சனங்கள் வந்தன. இன்றைக்கு 150 கேமராக்கள் என் முன் இருக்கின்றன. ஆனால், அன்று ஒரு பத்திரிகையில் அவரைப்பற்றி மிகவும் கேவலமாக எழுதி இருந்தார்கள்.
ஆனால் அவர் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், தன்னுடைய தன்னம்பிக்கை மூலமாக, தான் எங்கு சென்று நிற்பேன் என்று எனக்குத் தெரியும் என்று உழைத்தார்.
இன்று அவர் உங்கள் முன் தளபதியாய் மாறி நிற்கிறார் என்றால், அதற்கு அவருடைய தன்னபிக்கைதான் காரணம். அவர் எப்படி உங்களுக்கு ஒரு உந்து சக்தியாக இருக்கிறாரோ, அதே போல எனக்கும் அவர் உந்து சக்தியாக இருக்கிறார்.
அந்த இடத்தில் அவருக்கு பதிலாக, வேறு யாராவது இருந்திருந்தால், நிச்சயமாக மனதளவில் கண்டிப்பாக பாதிக்கப்படுவார்கள். சைக்கிளில் போன விஷயத்தை பொருத்தவரை, அவர் சைக்கிளில் சென்றதை நான் பார்த்திருக்கிறேன்.
ஆனால் நான் அவரைப்பார்த்து கண்டிப்பாக செல்ல வில்லை. என்னிடம் கார் இல்லை. வீட்டில் அப்பா அம்மாவிற்கு ஒரு வண்டி இருக்கிறது. அவ்வளவுதான். மீதி வண்டிகள் அனைத்தையும் நான் விற்று விட்டேன்.
இன்று இருக்கும் ரோடு கண்டிஷனுக்கெல்லாம், என்னால் மூன்று வருடத்திற்கு ஒரு முறை சஸ்பென்ஷனை மாற்ற முடியாது. என்னிடம் காசும் இல்லை. இப்படித்தான் ரத்னம் படப்பிடிப்பு சமயத்தில், காரைக்குடியில் இருந்து திருச்சிக்கு ஷிஃப்ட் ஆனோம். நான் சைக்கிளில் பாட்டுக்கேட்டுக்கொண்டு வந்தேன். இதைப்பார்த்த ஹரி சார்... என்ன இவன்.. வெயிட்டைக்குறைக்கச் சொன்னால், ஓவராக பண்ணிக்கொண்டிருக்கிறான் என்று சொன்னார். காரணம் அங்கிருந்து அங்கு வருவதற்கு கிட்டத்தட்ட 84 கிலோ மீட்டர் ஆகும்.
அப்படி செய்யும் பொழுது, என்னுடைய மனது ரிலாக்ஸ் ஆகிறது. இன்று மனநலத்தை பார்த்துக்கொள்வது என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. ஓப்பனாக சொல்கிறேன். நான் மனநலத்திற்காக சிகிச்சைக்கு செல்கிறேன். அப்படியானால் நான் மெண்டலா என்று கேட்காதீர்கள்.
நான் என்னுடைய உடல் மட்டுமல்லாமல், என்னுடைய மூளையையும் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் நிறைய பேர் இன்று மனநலத்திற்கு சிகிச்சைக்குப் போனாலே, நம்மை மெண்டல் என்று நினைப்பார்கள் என்று நினைக்கிறார்கள். உங்களுக்கு ஒரு கஷ்டம் வந்தது என்றால், அதை வெளியே யாரிடமாவது ஷேர் செய்து கொள்ளுங்கள். அதை மனதிற்குள்ளே வைத்துக்கொண்டால் அது தவறு.” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்