தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Puranaanooru Suriya Updates On Puranaanooru As 'Time Is Needed Even Today' Amid Ganguva Teaser Protest

Puranaanooru: கங்குவா டீசர் எதிர்பார்ப்புக்கு இடையில் ‘நேரம் தேவைப்படுகிறது’ என புறநானூறு குறித்து சூர்யா புது அப்டேட்

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 19, 2024 08:49 AM IST

Puranaanooru: சூர்யாவின் 43 ஆவது படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்க இருப்பதும் அந்த படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா ஆகியோர் நடிக்க இருப்பதும் தெரியவந்தது. மேலும் இந்த படத்திற்கு புறநானூறு என்று பெயர் வைக்கப்பட்டு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஜிவி பிரகாஷ் இசை அமைக்க உள்ளார்.

சூர்யா-சுதா
சூர்யா-சுதா ( Sudha Kongara / Twitter)

ட்ரெண்டிங் செய்திகள்

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிய‘கங்குவா’படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். கங்குவா திரைப்படம் வரும் ஏப்ரல் 19ம் தேதி மாதம் திரைக்கு வரும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படம் 38 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று மாலை 4.30 மணிக்கு கங்குவா டீசர் வெளியாக உள்ளது. இது சூர்யா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே சூர்யாவின் 43 திரைப்படமான புறநானூறு குறித்தான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்தது. நடிகர் சூர்யா அதை தன் எக்ஸ் தளத்தில் அறிவித்திருந்தார். அதன் படி, சூர்யாவின் 43 ஆவது படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்க இருப்பதும் அந்த படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா ஆகியோர் நடிக்க இருப்பதும் தெரியவந்தது. மேலும் இந்த படத்திற்கு புறநானூறு என்று பெயர் வைக்கப்பட்டு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசை அமைக்க உள்ளார். அது அவருக்கு 100 ஆவது படம் ஆகும்.

இந்த படத்தை, சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஆனால் நீண்ட நாட்களாக படம் குறித்த எந்த அப்பேட் இல்லாமல் இருந்த நிலையில் படம் ட்ராப் ஆகி விட்டதா என்ற கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்தது.

இந்நிலையில் இதுகுறித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.

அதில், " புறநானூறு படத்திற்காக இன்றும் நேரம் தேவைப்படுகிறது. இந்த கூட்டணி மிகவும் ஸ்பெஷல் ஆனது. இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. எங்களது பெஸ்ட் கொடுக்க விரும்புகிறோம். விரைவில் இந்த படத்தை தொடங்குவோம்" சூர்யா குறிப்பிட்டு இருக்கிறார்.

முன்னதாக இந்த படத்தில் மதுரையில் சூர்யா மாணவராக வரும் தோற்றம் தொடர்பான காட்சிகள் எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மாணவராக வரும் சூர்யா அரசியலுக்குள் இறங்குவது தொடர்பான காட்சிகளும் இதில் இடம் பெறுகிறதாம்.

இந்த படத்தின் கதை 1950 முதல் 1965 வரையிலான காலக்கட்டத்தில் நடக்ககூடியதாம். அப்போது தமிழ்நாட்டில் நிலவிய ஹிந்தி எதிர்ப்பு சம்பவங்களை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

படத்தில் சூர்யா படிப்பின் முக்கியத்துவதை பேசும் கதாபாத்திரமாக நடிக்கிறாராம். சென்னையிலும் படப்பிடிப்பு நடக்க இருக்கும் நிலையில், அந்த கால சென்னையை தத்ரூபமாக கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த படத்தை, சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. முன்னதாக சூர்யாவுடன் சுதா சூரரைப்போற்று திரைப்படத்தில் இணைந்திருந்தார். அந்தப்படம் பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்றதோடு, தேசிய விருதைகளையும் வென்றது குறிப்பிடத்தக்கது!

ஏற்கனவே வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள வாடிவாசல் படமும் இழுத்தடிக்கப்பட்டு வருவதால் இது சூர்யாவின் பயணத்தில் ஒரு சிறிய தள்ளாட்டமாகவே பார்க்கப்படுகிறது. ஆனாலும் படத்தின் வசூல் இதை எல்லாம் பின்னுக்கு தள்ளும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்