தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pudhiya Geethai: ரசிகர்களின் ஃபேவரைட்.. விஜய்க்கு சர்ச்சையை ஆரம்பித்து வைத்த புதிய கீதை!

Pudhiya Geethai: ரசிகர்களின் ஃபேவரைட்.. விஜய்க்கு சர்ச்சையை ஆரம்பித்து வைத்த புதிய கீதை!

Aarthi Balaji HT Tamil
May 08, 2024 06:30 AM IST

Pudhiya Geethai Movie: புதிய கீதை படத்தில் சாரதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த விஜய் நண்பர்களோட சேர்ந்து ஹோட்டல், ரியல் எஸ்டேட் போன்ற வேலைகளை செய்து குடும்பத்தை காப்பாற்றுவார்.

விஜய்க்கு சர்ச்சையை ஆரம்பித்து வைத்த புதிய கீதை
விஜய்க்கு சர்ச்சையை ஆரம்பித்து வைத்த புதிய கீதை

ட்ரெண்டிங் செய்திகள்

புதிய கீதை படத்தில் சாரதி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் விஜய். இப்படத்தில் சராதி புத்திசாலி, விளையாட்டு, படிப்பு என எல்லா விஷயமும் தெரிந்த திறமைவாய்ந்த நபராக இருப்பார். சாமியார் சாராதி 27 வயது வரை தான் உயிரோடு இருப்பார் எனக் கூற அந்த விதி எந்த அளவுக்கு சாரதி வாழ்க்கையில் விளையாடுது என்பது தான் இந்த படத்தின் கதை.

நல்லவங்களுக்கு நா சாரதி, கெட்டவங்களுக்கு தீ

இதில் தளபதியோட வசனம்.. நல்லவங்களுக்கு நா சாரதி, கெட்டவங்களுக்கு தீ.. சாரதீ இன்னும் விஜய் ரசிகர்கள் முனுமுனுக்கும் வசனங்களின் இதுவும் ஒன்று. அன்றைய காலத்தில் அனைவரின் ஃபேவரைட்டா இருந்த நடிகை மீரா ஜாஸ்மினுக்கு இது தமிழ்ல இரண்டாவது படம். பாலிவுட் நடிகை அமீஷா பட்டேலுக்கு இது முதல் தமிழ் படம். இப்படத்தில் விஜய் முற்றிலும் வேறு மாதிரி நடித்திருப்பார்.

இப்படத்தில் சாரதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த விஜய் நண்பர்களோட சேர்ந்து ஹோட்டல், ரியல் எஸ்டேட் போன்ற வேலைகளை செய்து குடும்பத்தை காப்பாற்றுவார்.

விஜய் ரியல் ஃலைப் நண்பன்

இப்படத்தில் ரெட்டியார் காதாபாத்திரத்தில் அசத்தி இருப்பார் மறைந்த நடிகர் கலாபவன் மணி. இப்படத்தில் கலாபவன் மணி வசனம் ரொம்ப பிரபலம். விஜய் ரியல் ஃலைப் நண்பனான நடிகர் சஞ்சீவ், இந்த படத்துல சாரதியோட நண்பனா நடிச்சிருப்பாரு. ராகவா லாரன்ஸ், இந்த படத்துல ஒரு பாட்டுக்கு கெஸ்ட் அப்பியரன்ஸ்ல வந்து ஆடியிருப்பாரு. இப்படத்தில் கருணாஸ், விஜய் நகைச்சுவை காட்சிகளும் எதார்த்தமா அனைவரும் ரசிக்கும்படி இருந்தது.

விஜய், யுவன் ஷங்கர் ராஜாவும் சேர்ந்து பணியாற்றிய ஒரே படம் இதுதான். இப்படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட். படத்தோட பாடல் ஹிட்டுக்கு யுவன் ஷங்கர் ராஜா காரணம். பின்னணி இசைக்கு கார்த்திக் ராஜா முக்கிய காரணம்.

”மனசே இள மனசே மலரும் பூ மனசே

மனதில் நினைத்ததெல்லாம் நடக்கும் நாள் இதுவே”

”வசியக்காரி வசியக்காரி வலைய வீசி போறாயே

வசியக்காரி வசியக்காரி வளைச்சு போட்டு போறாயே”

”என் ஜன்னல் வந்த காற்றை கேட்டேன்

என் கண்ணில் கண்ட பூவை கேட்டேன்”

”ஹே அண்ணாமல தம்பி இங்கே ஆட வந்தேண்டா

உங்க தளபதி நான் கானா பாட்டு பாட வந்தேண்டா” இந்த பாடல் அனைத்தும் இன்றும் அனைவரின் விருப்பபட்டியலில் இருக்கும்.

விஜய் படங்களின் பிரச்னைக்குப் பிள்ளையார் சுழி போட்டது புதிய கீதை படம் தான். கீதை எனப் படத்துக்குப் பெயர் வைக்க, இந்து அமைப்பினர் பிரச்னை செய்ய, படத்துக்குப் புதிய கீதை எனப் பெயர் மாற்றினார்கள்.

”நா நல்லது நினைச்ச நல்லா இருக்கேன்.. நீ கெட்டது நினைச்சேன் கொட்டு போயிருக்க விதைக்கிறது தான் முளைக்கும்.. நாம நினைக்குறது தான் நடக்கும்” என இப்படத்தில் சாரதி கடைசியாக பேசும் இந்த வசனம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. நல்லவர்கள் நம்மை சுற்றி இருந்தால், மரணம் கூட அவர்களை உயிர்ப்பிக்கும் என்ற விஷயத்தை இந்த படத்தோட கிளைமாக்ஸ் உணர்த்திருக்கும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point