புது பையன் என்று நகையாடிய இளையராஜா.. வாயை பிளக்க வைத்த மணிரத்னம்.. பகல் நிலவில் பந்தாடிய சினிமா படை! - தியாகராஜன்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  புது பையன் என்று நகையாடிய இளையராஜா.. வாயை பிளக்க வைத்த மணிரத்னம்.. பகல் நிலவில் பந்தாடிய சினிமா படை! - தியாகராஜன்!

புது பையன் என்று நகையாடிய இளையராஜா.. வாயை பிளக்க வைத்த மணிரத்னம்.. பகல் நிலவில் பந்தாடிய சினிமா படை! - தியாகராஜன்!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 08, 2025 08:33 AM IST

பகல் நிலவு படத்தில் நான் கமிட் ஆவதற்கு முன்பாக மணிரத்னம் இயக்கிய இரண்டு திரைப்படங்களையும் நான் பார்த்திருந்தேன்; அந்த திரைப்படங்களில் அவர் வைத்திருந்த ஷாட்ஸ், அவர் காட்சிகளை எடுத்திருந்த விதம் உள்ளிட்டவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. - தியாகராஜன்!

புது பையன் என்று நகையாடிய இளையராஜா.. வாயை பிளக்க வைத்த மணிரத்னம்.. பகல் நிலவில் பந்தாடிய சினிமா படை! -  தியாகராஜன்!
புது பையன் என்று நகையாடிய இளையராஜா.. வாயை பிளக்க வைத்த மணிரத்னம்.. பகல் நிலவில் பந்தாடிய சினிமா படை! - தியாகராஜன்!

அவர் பேசும் போது, ‘நானும் மணிரத்னமும் ஒன்றாக படித்தவர்கள்; அதனால் எங்களுக்குள் நல்ல பழக்கம் இருந்தது. பகல் நிலவு படத்தில் நான் கமிட் ஆவதற்கு முன்பாக அவர் இயக்கிய இரண்டு திரைப்படங்களையும் நான் பார்த்திருந்தேன்; அந்த திரைப்படங்களில் அவர் வைத்திருந்த ஷாட்ஸ், அவர் காட்சிகளை எடுத்திருந்த விதம் உள்ளிட்டவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

பகல் நிலவு

அதனைத் தொடர்ந்து தான் நான் மணிரத்னத்தை பகல் நிலவு படத்தில் நான் கமிட் செய்தேன்; அந்தப் படத்தின் பொழுது, நாங்கள் எல்லோருமே குடும்பம் போல பழகி வந்தோம். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் எங்களுக்கு எந்தவித அழுத்தத்தையும் கொடுக்கவில்லை. ஆனால் அவருக்கு என்ன வேண்டுமோ அதை வாங்குவதில் மிகவும் பிடிவாதமாக இருந்தார்.

 

உறுத்தலாக இருந்தது

அந்த படம் வெளியாகி, ஓரளவு நன்றாகவே ஓடியது; படத்திற்கு நல்ல விமர்சனங்களும் வந்தன. அந்தப் படத்தில் நடந்த மிக முக்கியமான சம்பவத்தை நான் இங்கு பகிர வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த காலத்தில் இளையராஜா ஒரு படத்தில் கமிட் ஆவதும், அவரது நேரத்தை நமக்கு கொடுப்பதும் மிக மிக கடினம்; இந்த நிலையில் நான் பகல் நிலவு படத்திற்கு அவரை கமிட் செய்ய சென்றபோது, என்ன.. புது பையனை அழைத்து வந்திருக்கிறீர்கள்.. இவன் எப்படி எடுப்பானோ என்று கேட்டார். ஆனாலும், நான் முயற்சி செய்கிறேன் என்று சொன்னார். அவர் எனக்கு அப்படி கேட்டது உறுத்தலாக இருந்தது. அவரை எப்படியாவது சமாதானம் செய்து நம்பிக்கையை கொண்டு வர வேண்டும் என்று நினைத்தேன்.

மிரண்ட ராஜா

இந்த நிலையில், மணிரத்னத்தின் அனுமதி வாங்கி, அவர் ஷூட் செய்த பாடல்களை லெனின் சாரை வைத்து எடிட் செய்து, ராஜா சாருக்கு காண்பிக்க வேண்டும் என்று அதற்கான வேலைகளைச் செய்தேன். மதிய வேளையில் அவர் சாப்பிட்டு வரும்பொழுது, அவர் பாடல்களை பார்ப்பதற்காக இரண்டு பாடல்களையும் பிரசாத் ஸ்டுடியோவில் லோட் செய்து ரெடியாக வைத்திருந்தேன்.

இளையராஜா வந்தார்; நான் விஷயத்தை சொன்னேன் அவர் உடனே எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது என்று அதை தட்டிக் கழிக்க முயன்றார். இந்த நிலையில், கங்கை அமரன் சாரும் பாஸ்கர் சாரும் அதை கொஞ்சம் பார்த்து விடேன் என்று சொல்ல, அவர் பார்த்தார்; பாடல் ஓடிக் கொண்டிருக்கும் பொழுதே, வெளியே இசைக்குழுவில் பணிபுரிந்த அனைவரும் உள்ளே வந்து பாடலைப் பார்த்தார்கள்.

மீண்டும் பாடலை திருப்பி போடச் சொல்லிக்கேட்டார்கள்; ராஜா சார் பையன் மிகப் பிரமாதமாக எடுத்து இருக்கிறானே நல்ல டைரக்டர் போல இருக்கிறது என்று சொன்னார்.’ என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.