‘அஜித் சார் எவ்ளோ சங்கட பட்டுருப்பாரு.. இது ஓவர் கான்ஃபிடன்ஸ் இல்ல.. நம்பிக்கை’- தயாரிப்பாளர் தனஞ்செயன்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘அஜித் சார் எவ்ளோ சங்கட பட்டுருப்பாரு.. இது ஓவர் கான்ஃபிடன்ஸ் இல்ல.. நம்பிக்கை’- தயாரிப்பாளர் தனஞ்செயன்

‘அஜித் சார் எவ்ளோ சங்கட பட்டுருப்பாரு.. இது ஓவர் கான்ஃபிடன்ஸ் இல்ல.. நம்பிக்கை’- தயாரிப்பாளர் தனஞ்செயன்

Malavica Natarajan HT Tamil
Dec 16, 2024 08:31 AM IST

கடவுளே அஜித்தே கோஷம் பலரை காயப்படுத்தும் என நினைத்து அதை வேண்டாம் என சொன்ன காரணத்திற்காகவே அஜித்தை இன்னும் பல லட்சம் பேருக்கு பிடிக்கும் என தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியுள்ளார்.

‘அஜித் சார் எவ்ளோ சங்கட பட்டுருப்பாரு.. இது ஓவர் கான்ஃபிடன்ஸ் இல்ல.. நம்பிக்கை’- தயாரிப்பாளர் தனஞ்செயன்
‘அஜித் சார் எவ்ளோ சங்கட பட்டுருப்பாரு.. இது ஓவர் கான்ஃபிடன்ஸ் இல்ல.. நம்பிக்கை’- தயாரிப்பாளர் தனஞ்செயன்

ஆனாலும், சில இடங்களில் அந்த கோஷங்கள் எழுந்து வரும் நிலையில், தயாரிப்பாளர் தனஞ்செயன் அஜித் குறித்து ஆகாயம் தமிழ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

சங்கடத்தை ஏற்படுத்தும் ரசிகர்கள் ஆர்வம்

அந்தப் பேட்டியில், அஜித்தின் இந்த அறிவிப்பை நான் மிகவும் வரவேற்கிறேன். அஜித்தின் ரசிகர்கள் ஒரு ஆர்வத்தில் சிலவற்றை செய்து விடுகின்றனர். ஆனால், அது அவருக்கு எவ்வளவு சங்கடத்தை தரும் என யாரும் நினைப்பதே இல்லை. ரசிகர்களின் இந்த செயல்கள் குறித்து சிலர் அஜித்திடமே புகார் செய்யும் நிலையும் வரலாம்.

அதுமட்டுமல்லாமல் அவர் புகழை எதிர்பார்க்கக்கூடிய நபரே இல்லை. அவர் எப்போதும் சொல்லக் கூடியது உன் குடும்பத்தையும், தொழிலையும் கவனமாக பார்த்துக் கொள். என் படத்தை பிடித்தால் பார் . அவ்வளவு தான் அவருடைய விருப்பமே.

அதிகரிக்கும் ரசிகர்கள்

அவர், தன் ரசிர்களை சுற்றி சுற்றி வர வைக்கவோ, அவர்களை கவர மிகவும் மெனக்கெடுபவரோ இல்லை. ஆனால், அவர் எனக்காக எதுவும் செய்ய வேண்டாம் என சொல்லச் சொல்ல அதை செய்யும் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

அஜித்தே கடவுளே கோஷம் வேண்டாம் எனக் கூறி அவர் வெளியிட்ட அறிக்கைக்கு பின் இன்னும் 10 லட்சம் பேருக்கு அவரை பிடித்துப் போய்விடும்.

புரிதல் ஏற்பட்டிருக்கும்

நடிகர் கமல் ஹாசன் கூட தன்னை யாரும் ஆண்டவர், உலக நாயகன் என அழைக்க வேண்டாம். என்னை கமல் ஹாசன் என அழைத்தால் போதும் என்று கூறியிருக்கிறார். காரணம், இத்தனை நாள் இவர்கள் இதை கவனித்திருக்க வாய்ப்பில்லை. பிஸியாக படங்களில் நடித்து வந்த இவர்கள் சோசியல் மீடியாவை பயன்படுத்தி இருக்க மாட்டார்கள். தற்போது அவர் ஓய்வில் இருக்கும் சமயத்தில் அவருக்கு வரும் மெசேஜ்களை எல்லாம் பார்க்கும் போது தான் இதுபற்றிய புரிதல் ஏற்படும்.

ரசிகர்களை கட்டுப்படுத்துவது அவசியம்

அஜித் சாருக்கு தெரியும். தனக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள் என்று. அதனால், இவர் அதற்காக பெரிதாக மெனக்கெட்டு தனியாக வேலை செய்ய வேண்டியது இல்லை. ரசிகர்களின் அன்பின் வெளிப்பாடுகள் அதிகமாக இருப்பதை கட்டுப்படுத்த அவர் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவது அவசியமாகிறது.

அஜித் சாருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு. என் தன் மேலும், தன்னை நம்பி கதை சொல்ல வந்த இயக்குநர் மேலும் அசைக்க முடியாத உறுதியை வைத்திருப்பார். இதை இரண்டையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தயாரிப்பாளர் வந்தால் நிச்சயம் படத்தில் நடிப்பார்.

அசைக்க முடியாத நம்பிக்கை

விவேகம் படம் ரிலீஸாகி படம் தோல்வியை சந்தித்தது. பார்க்கும் இடத்தில் எல்லாம் விமர்சனம் வந்தது. இந்த சமயத்தில் அஜித் சார், சிறுத்தை சிவாவிற்கு போன் செய்து நான் உங்ககிட்ட பேசணும். படம் ஓடலன்னு வருத்தத்தில் இருக்கீங்களா எனக் கேட்டார். பின், நாம் இருவரும் சேர்ந்து அடுத்த படம் பண்ணலாம் எனச் சொல்லியுள்ளார். மேலும், என்னிடம் இருந்து போகும் போது நீங்க வெற்றியுடன் தான் போக வேண்டும் எனக் கூறியுள்ளார். அந்த தைரியம் தான் அவரை ரசிகர்கள் கொண்டாட காரணமாக உள்ளது என்றார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.