Vijay: 'இமேஜ் மீது கவனமாக இருக்கிறார் விஜய்.. த்ரிஷாவுக்கு வாய்ப்பு இல்லை'- தனஞ்செயன்
Vijay: நடிகர் விஜய்யின் கட்சியில் த்ரிஷா இணைய உள்ளதாக வரும் வதந்திகள் குறித்து சினிமா பிரபலம் சித்ரா லட்சுமணன் மற்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோர் டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் விவாதித்தனர்.

Vijay: நடிகர் விஜய்யின் கட்சியில் த்ரிஷா இணைய உள்ளதாக வரும் வதந்திகள் குறித்து சினிமா பிரபலம் சித்ரா லட்சுமணன் மற்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோர் டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் விவாதித்தனர்.
சினிமாவை பயன்படுத்திய திமுக
தமிழக அரசியலில் சினிமாவையும் சினிமா கலைஞர்களையும் சரியாக பயன்படுத்திக் கொண்ட கட்சி என்றால் அது திமுக தான். அவர்களை நட்சத்திர பேச்சாளர்களாக்கி மேடையில் அலங்கரித்தாங்க.
திமுக வளர்ச்சியில் கலைஞருக்கு முக்கிய பங்கு இருக்கு. இவரைப் பின்பற்றி பல கட்சிகளும் சினிமாவை நல்லாவே பயன்படுத்திட்டு வர்றாங்க. அப்படி ஒரு வாய்ப்பு வந்தும் விஜய் அதை தவற விட்டுவிட்டார்.
வாய்ப்பை தவறவிட்ட விஜய்
விக்கிரவாண்டியில் விஜய் நடித்திய மாநாட்டில் விஜய்யை வைத்து படம் எடுத்த 39 இயக்குநர்கள் சேர்ந்து ஒரு கடிதம் எழுதினார்களாம். அதுல நாங்க எல்லாம் உங்களோட மாநாட்டுல கலந்துக்க ஆடைப்படுறோம். நீங்க அனுமதி கொடுத்த நாங்க அங்க வருவோம்ன்னு. ஆனா அத விஜய் மறுத்துட்டாரு.
அந்த 39 பேரும் மாநாட்டுல கலந்துகிட்டா அந்த மாநாடே பெரிய பேசுபொருளா மாறி இருக்கும். அது எவ்ளோ பெரிய வாய்ப்பாவும் அது அமைஞ்சிருக்கும். இவங்க எல்லாம் விஜய் உடைய விசுவாசிகள். அவங்க விஜய் கட்சிக்காக நிச்சயமாக உழைச்சிருப்பாங்க.
விஜயகாந்த் கட்சி ஆரம்பிச்ச போது கட்சி சார்பில்லாம எத்தனையோ சினிமா பிரபலங்கள் கலந்துகிட்டாங்க. அவரோட வெற்றிக்காகவும் பேசினாங்க. ஆனா, இதை ஏன் விஜய் பயன்படுத்திக்க தவறிட்டாருன்னும் தெரியல என்று சினிமா பிரபலம் சித்ரா லக்சுமணன் கூறினார்.
பாதிப்பு வரக்கூடாதுன்னு நெனச்சாரு
இதைக் கேட்ட தயாரிப்பாளர் தனஞ்செயன், விஜய் தன்னால் யாருக்குமே பாதிப்பு ஏற்படக் கூடாதுன்னு நினைக்குறாரு. சினிமா துறையில தொடர்ந்து பயணிக்குனும்ன்னா அரசியல் சார்ந்த பார்வை அவர் மீது விழுந்திடவே கூடாது. ஒருவேள ஒரு டைரக்டர் அந்த மீட்டிங்ல கலந்துகிட்டாங்கன்னா அவர கட்டம் கட்டவும் வாய்ப்பு இருக்கு. ஒருவேள அவங்களுக்கு கிடைக்குற வாய்ப்பு கிடைக்காமலும் போகலாம். அந்த எண்ணத்துல விஜய் இந்த மாதிரி பண்ணிருக்கலாம்.
விமர்சனம் வரும்
அதுமட்டும் இல்லாம விமர்சனம் எல்லாம் எப்படி வரும்ன்னா, விஜய் கட்சி ஆரம்பிச்ச பிறகு சினிமா ஆளுக்களுக்கு எல்லாம் பதவிய தூக்கி கொடுத்துட்டாருன்னு சொல்லிடுவாங்க. அதுக்காக தான் விஜய் சார் இதெல்லாம் தவிர்த்திட்டு வர்ராரு.
சில நாட்களாக வெளியாகும் சில செய்திகள் எல்லாம் நேரடியா த்ரிஷாவை விஜய்யுடன் தொடர்புபடுத்தி செய்திகள் வெளியாகி வருகிறது. முன்பெல்லாம் சோசியல் மீடியாவில் மட்டும் தான் இதுபோன்ற தகவல் எல்லாம் வெளியாகி வந்தது.
ஊர்ஜிதமான செய்தி
ஆனால், சில நாட்களாக தமிழின் முக்கிய செய்தித்தாள்களில் எல்லாம் இதுபோன்ற செய்திகள் அடிபடுகிறது. த்ரிஷா சினிமாவிற்கு முழுக்கு போட்டு, அரசியலில் களம் இறங்க உள்ளதாக செய்திகள் வெளிவருகிறது. இதனால், இது ஊர்ஜிதப்படுத்தப்பட்ட செய்தியாகவே மாறிவிட்டது என சித்ரா லட்சுமணன் கூறினார்.
சினிமாவுக்கு பிரேக்
ஆனால் இவை அனைத்தும் வதந்திகள் என தனஞ்செயன் கூறியுள்ளார். மேலும், த்ரிஷா தொடர்ந்து படம் நடிச்சுட்டு தான் இருக்காங்க, ஒருவேள அவங்க பிரேக் கேட்ருக்கலாம். இப்போ 5,6 படம் கையில இருக்கு. அந்த படத்தோட வேல எல்லாம் முடிஞ்சதும் பிரேக் கேட்ருப்பாங்க. ஆனா அவங்க அரசியலுக்கு போகனும்ன்னு நெனைக்க மாட்டாங்க.
பீக்ல இருக்காங்க
அவங்க முன்ன விட இப்போ தான் ரொம்ப பீக்ல இருக்காங்க. அவங்க இன்னைக்கே விஜய் சார் கட்சியில போய் சேரணும்ன்னு நெனக்க மாட்டாங்க என்றார்.
விஜய் சாரும் உடனடியா எல்லாம் முடிவு எடுக்க மாட்டார். ஒரு முடிவு என்ன எல்லாம் விளைவ ஏற்படுத்தும்ன்னு யோசிச்சு தான் அவர் முடிவெடுப்பார். எது விஜய்யோட இமேஜ்ன்னும் அவருக்கு தெரியும். அதுனால இப்போ த்ரிஷாவ கட்சியில சேக்க மாட்டாங்க.
த்ரிஷா ரொம்ப புரொபஷனலான ஆள். 20 வருஷமா அவங்க சினிமாவுல வெற்றிகரமாக இருக்காங்க. அவங்க சினிமாவ விட்டுட்டு போகுற ஆள் இல்ல என்றார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்