Suresh Kamatchi: 'பாலா நெனச்சத செய்யாம விட மாட்டாரு.. எல்லாம் போன பின்னாடி தான் கத்துக்க முடியுது'- சுரேஷ் காமாட்சி
Suresh Kamatchi: ஒரு தயாரிப்பாளரா எல்லா காசும் போனதுக்கு அப்புறம் தான் படத்த ரிலீஸ் பண்றது எப்படின்னு கத்துக்க முடிவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார்.

Suresh Kamatchi: பாலாவின் வணங்கான் படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி, அந்தப் படத்தின் வெற்றி பற்றியும், தமிழ் சினிமாவின் போக்கு குறித்தும் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில், தன் அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
வணங்கானுக்கு நல்ல ரெஸ்பான்ஸ்
வணங்கான் படம் தியேட்டரில் நல்லா ஓடிட்டு இருக்கு. நாங்க நெனைப்போம் நாம தயாரிக்குற எல்லா படமும் மக்களுக்கு பிடிக்கும்ன்னு. ஆனா ரியாலிட்டின்னு ஒன்னு இருக்கு. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியான படத்த விரும்புவாங்க. ஒரு படத்தோட வெற்றி ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம் மக்கள் குடுக்குற ரியாக்ஷன்ல தான் இருக்கு.
பெண்களுக்கு பிடிச்சிருக்கு
வணங்கான் படம் பெண்களுக்கு எல்லாம் பிடிக்குமான்னு யோசிச்சோம். ஆனா அவங்களுக்கு எல்லாம் பிடிச்சிருந்தது. அதில் சில அருவருப்பான காட்சிள் எல்லாம் இருந்தது. ஆனா அதை எல்லாம் அவங்க புரிஞ்சிட்டு ஏத்துகிட்டாங்க.