அடல்ட் கன்டென்ட்.. மேட்டரும் இருக்கு மெசேஜும் இருக்கு.. ஃபயர் பட விழாவில் பேசிய தயாரிப்பாளர் சிவா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அடல்ட் கன்டென்ட்.. மேட்டரும் இருக்கு மெசேஜும் இருக்கு.. ஃபயர் பட விழாவில் பேசிய தயாரிப்பாளர் சிவா

அடல்ட் கன்டென்ட்.. மேட்டரும் இருக்கு மெசேஜும் இருக்கு.. ஃபயர் பட விழாவில் பேசிய தயாரிப்பாளர் சிவா

Marimuthu M HT Tamil
Dec 08, 2024 12:39 PM IST

அடல்ட் கன்டென்ட்.. மேட்டரும் இருக்கு மெசேஜும் இருக்கு.. ஃபயர் பட விழாவில் பேசிய தயாரிப்பாளர் சிவா பேட்டியளித்திருக்கிறார்.

அடல்ட் கன்டென்ட்.. மேட்டரும் இருக்கு மெசேஜும் இருக்கு.. ஃபயர் பட விழாவில் பேசிய தயாரிப்பாளர் சிவா
அடல்ட் கன்டென்ட்.. மேட்டரும் இருக்கு மெசேஜும் இருக்கு.. ஃபயர் பட விழாவில் பேசிய தயாரிப்பாளர் சிவா

ஃபயர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சிவா பேசுகையில், ‘’ஒரு படம் ஆரம்பித்ததும் முதலில் போடுறதே ஊடக நண்பர்களுக்கு நன்றி என்று தான். அதனை சம்பிரதாயத்துக்கு செய்றதில்லை. உள்ளன்புடன் தான் செய்துகொண்டு இருக்கோம். அதனால் ஊடக நண்பர்களோடு எந்தவித மாற்றுக்கருத்தும் வருத்தமும் இல்லை. சமீபத்தில் வந்த அறிக்கையில் நிறைய விசயங்கள் சிலர் திரிக்கப்பட்டு,பேசப்பட்டது.

இப்போது ஓடிடி மற்றும் சேட்டிலைட் பிஸினஸ் இல்லாமல், 2018ல் இருந்ததுபோல், தியேட்டரை நம்பிதான் சினிமா என்ற நிலைக்கு வந்துவிட்டோம்.

தியேட்டருக்கு மக்கள் வந்து படம் பார்த்தால் சினிமா துறை பிழைக்கும். அதனுடைய அடிப்படையில் வாழ்க்கையைப் பற்றிய பயத்தினால் தான், காலையிலேயே தியேட்டரில் குறை சொல்வதை சீராக செய்யலாம். சில வார்த்தைகளை லாவகமாக கையாளலாம் என்பது தான் ஒழிய, சினிமா விமர்சனத்துக்கு எதிரானவர்கள் கிடையாது. ஊடகவியலாளர்கள் மீது பிரச்னை இல்லை. ஊடகம் என்ற போர்வையில் ஊடுருவியவர்கள் மீதுதான் பிரச்னை.

ஜே.எஸ்.கே. ஒரு நவீன ஹிட்லர்: தயாரிப்பாளர் சிவா

இப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஜே.எஸ்.கே ஒரு நவீன ஹிட்லர். நினைத்ததை செய்துமுடித்துவிடுவார். இந்த மாதிரி ஒரு அராஜகத்தைப் பெற்று வளர்த்த அம்மாவுக்கு அவார்டு கொடுக்கணும் என்பேன். மனைவிக்கும் அவார்டு கொடுக்கணும்.

ஃபயர் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கேவிடம் அடிப்படையில் அன்பு இருக்கும். திட்டமிடுதல் பிரமாதமாக இருக்கும். துணிச்சல் இருக்கும். ட்ரம்ப் முன்னாடியே கால்மேல் கால்போட்டுவைப்பார். அவருக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கை இருக்கு.

எதை தைரியமாகப் போனிலேயே பேசி வேலையை முடிக்கும் திறமை கொண்டவர். அந்த அராஜகத்துக்குள்ள ஒரு ஆளுமை இருக்கும். அன்பு இருக்கும்.

இந்தப் படத்தை ஒரு நண்பராக இல்லாமல், தயாரிப்பாளராக பாராட்டுத் தெரிவிக்கிறேன். அவ்வளவு பிளானிங், சொன்ன தேதி, சொன்ன பட்ஜெட்டில் படத்தை எடுத்து முடிச்சார். இப்போது பேசும்போதுதான் தெரியுது, அந்தப் பாடலை ஒரு இரவில் எடுத்துமுடித்திருக்கிறார். ஏனென்றால் பாடல் அவ்வளவு நல்லாயிருந்தது. அவ்வள்வு ஷாட்ஸ், ஃபிரேமிங், மூவிங் எல்லாமே நல்லா இருந்தது. அதை செய்த ஒளிப்பதிவாளருக்கு நன்றி. ஜே.எஸ்.கேவின் செயல்படுத்தும் தன்மை அப்படி இருக்கும். இரண்டு நாட்கள் நடிக்கப்போனேன். டக் டக்குனு எடுத்துட்டுப்போயிட்டே இருங்க அப்படி சொல்லிட்டார். அப்படி எல்லாமே பிளானிங்குடன் செயல்படுத்தக்கூடியவர், ஜே.எஸ்.கே.

புதுப்படம் செய்யுறதுக்குண்டான சின்ன சங்கோஜமோ, சந்தேகமா, விவாதித்து எடுக்கக் கூடிய தன்மையோ எதுவுமே இல்லை. எல்லாவற்றையும் மனதில் வைத்துக்கொண்டு, பிரமாதமாக வொர்க் செய்தார்.

படத்தில் லாஜிக் இருக்கு - தயாரிப்பாளர் சிவா

அந்த வகையில் படத்தைப் பார்க்கும்போதுமே தெரிஞ்சது. தொடர்ச்சியில்லை, லாஜிக் இல்லை அப்படின்னு ஒரு காட்சிகூட இல்லை. எப்படி இப்படி யோசிச்சீங்கன்னு ஆச்சரியமாக இருந்தது.

அது ஒரு அடல்ட் கன்டென்ட், இருந்தாலுமே மெசேஜ் இருக்கிற கதையில் மேட்டர் இருக்காது. மேட்டர் உள்ள கதையில் மெசேஜ் இருக்காது. இரண்டுமே இருக்கிறது என்பது ஒரு அழகான விஷயம். ரொம்பநாள் ஆச்சு இப்படி ஒரு இன்ட்ரெஸ்டிங்கான படம் பார்த்து, நல்லாயிருக்கும் ஒருவிதத்தில். கண்டிப்பாக தியேட்டரில் நல்ல வருவாய் ஈட்டும் படமாக இருக்கும்.

இது தியேட்டருக்கான படம். ஒரு அருமையான மெசேஜோட பண்ணியிருக்கார். இப்படம் கமர்ஷியலாகப் பெரிய வெற்றி அடையும். இந்தப் படத்தின் கேமராமேன் சதீஷ், சமீபகாலமாக நல்ல ஒரு ஒளிப்பதிவாளர். நான் யார்கூட பேசினாலும் சதீஷுக்கு ஒரு வாய்ப்பு கேட்டுட்டு வருவேன் .

இந்தப் படத்தில் எல்லாபேருமே தமிழ் பேசும் கதாநாயகிகள். எல்லாபேருமே அற்புதமாக கோப்ரேட் பண்ணியிருக்காங்க. ஹீரோவின் வாய்ஸ் அருமையாக இருக்கு. தமிழ் சினிமாவில் பெரிய இடம் இருக்கு, பாலாஜி முருகதாஸ். ஒரு பட்ஜெட்டில் செய்த படம் ஒரு மாபெரும் வெற்றிக்கு உதாரணம் கிடைக்கும்'' என்றார்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.