Good Bad Ugly movie: குட் பேட் அக்லி படம் 2 மணி நேர ரோலர் கோஸ்டர்.. புகழ்ந்து தள்ளிய புரொடியூர்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Good Bad Ugly Movie: குட் பேட் அக்லி படம் 2 மணி நேர ரோலர் கோஸ்டர்.. புகழ்ந்து தள்ளிய புரொடியூர்

Good Bad Ugly movie: குட் பேட் அக்லி படம் 2 மணி நேர ரோலர் கோஸ்டர்.. புகழ்ந்து தள்ளிய புரொடியூர்

Malavica Natarajan HT Tamil
Published Apr 14, 2025 03:00 PM IST

Good Bad Ugly movie: நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தை 2 மணி நேர ரோலர் கோஸ்டர் போல இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளதாக தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி கூறியுள்ளார்.

Good Bad Ugly movie: குட் பேட் அக்லி படம் 2 மணி நேர ரோலர் கோஸ்டர்.. புகழ்ந்து தள்ளிய புரொடியூர்
Good Bad Ugly movie: குட் பேட் அக்லி படம் 2 மணி நேர ரோலர் கோஸ்டர்.. புகழ்ந்து தள்ளிய புரொடியூர்

இந்த நிலையில், ஹைதராபாத்தில் குட் பேட் அக்லி படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இதில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் குட் பேட் அக்லி படத்தின் தயாரிப்பாளரான நவீன் யெர்னேனி படத்தையும், படக்குழுவினரையும் பாராட்டி பேசியுள்ளார்.

நிறைய அனுபவம் தந்த படம்

அப்போது, "இந்தப் படம் நிறைய அனுபவத்த கொடுத்தது. நாங்க தயாரிச்ச நிறைய படம் தெலுங்குல பிளாக் பஸ்டர் ஹிட் ஆகிருக்கு. இந்தப் படத்த நாங்க சென்னைல இருக்க ரோஹினி தியேட்டர்ல பாத்தோம். அந்த படம் முடிஞ்சது. அப்போ நாங்க எல்லாம் தியேட்டரோட பால்கனில நிக்கிறோம். அங்க இருந்த மக்கள் எல்லாம் எங்கள கொண்டாடுறாங்க. கடவுளையே தியேட்டர்ல பாத்த மாதிரி அத்தனை கொண்டாட்டம். அந்தக் காட்சி எல்லாம் என் வாழ்க்கையில என்ன நடந்தாலும் மறக்கவே மறக்காது.

இதயத்தில் இருந்து பேசுவார்

இது எல்லாமே நடந்தது எங்களோட ஹீரோ அஜித்தால தான். இந்தப் படத்த கொடுத்த ஆதிக்குக்கு ரொம்ப நன்றி. இதவிட பெருசா அவர் வேற எதையும் எதிர்பார்த்திருக்க மாட்டாரு,.

அஜித் சாரப் பத்தி சொல்லனும்ன்னா அவரு ரொம்ப சிம்பிள். அவர் ரொம்ப உண்மையானவர். இதயத்தில இருந்து தான் எப்போவும் பேசுவாரு. அவரோட சேர்ந்து படம் பண்ணினது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். அவரோட சேர்ந்து இன்னும் நிறைய படம் பண்ணனும்ன்னு ஆசைப்படுறோம்.

100% தயாரிப்பாளர்களோட டைரக்டர்

ஆதிக் தயாரிப்பாளர்கள் எதிர்பார்ப்பை 100 சதவீதம் பூர்த்தி செய்யும் ஒரு டைரக்டர். இந்தப் படத்த அவரு 95 நாள்லயே முடிச்சு கொடுத்தாரு. நாங்க எதாவது வேணுமான்னு கேட்டா கூட அவரு எங்களுக்கு எந்தவிதமான பிரஷ்ஷரும் கொடுத்தது இல்ல. நாங்க ஆதிக் மாதிரியான டைரக்டர்ஸ தான் எதிர்பாக்குறோம். இந்தப் படத்துல எங்களோட சேர்ந்து வேலை செஞ்ச ஜி.வி. பிரகாஷ், பிரியா வாரியர், சுனில்ன்னு எல்லாருக்கும் ரொம்ப நன்றி.

2 மணி நேர ரோலர் கோஸ்டர்

வழக்கமா ஒரு சினிமாவுல ரோலர் கோஸ்டர் மாதிரியான ஒரு அனுபவம் வரப் போகுதுன்னா 2 நிமிஷம் 3 நிமிஷம் தான் இருக்கும். ஆனா இந்தப் படம் 2 மணி நேர ரோலர் கோஸ்டர் படமா இருக்கு. தமிந்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மட்டும் இல்ல உலகம் முழுவதும் கடந்த 4 நாளா படத்துக்கான கொண்டாட்டங்கள் எல்லாம் பார்க்க முடியுது. இது மிகப்பெரிய ஹிட் பிளாக் பஸ்டர். இன்னும் பல நாள் தியேட்டர்ல கொண்டாடப்படும்.

போன் பண்ணி புகழ்ந்த பிரபு

ஆதிக்கோட மாமனார் பிரபு எனக்கு போன் பண்ணினாரு, எங்க அப்பா சிவாஜி, ராமா நாயுடுக்காக வசந்த மாளிகை படம் பண்ணினாரு. என் மருமகன் ஆதி உங்களுக்காக குட் பேட் அக்லி கொடுத்திருக்காருன்னு சொன்னாரு.

அஜித்தோட ரசிகர்கள் எல்லாம் அடுத்த 3 படத்தையாவது மைத்ரி மூவிஸ் பண்ணனும்ன்னு சொல்றாங்க. எல்லாம் கூடி வந்தா பண்ணலாம் என சொல்லி, படக்குழுவினருக்கும் டிஸ்டிபியூட்டருக்கும் நன்றி" சொன்னார்.

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், 2017ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். காட்சி (விஷூவல்), டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பெரியார் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற இவர், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சினிமா, புகைப்படத்தொகுப்பு சார்ந்த செய்திகளில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார்.
Whats_app_banner