‘நடிகை ரம்பாவின் சொத்து மதிப்புதெரியுமா?’: உடைத்துப் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘நடிகை ரம்பாவின் சொத்து மதிப்புதெரியுமா?’: உடைத்துப் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு

‘நடிகை ரம்பாவின் சொத்து மதிப்புதெரியுமா?’: உடைத்துப் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு

Marimuthu M HT Tamil Published Mar 08, 2025 05:49 PM IST
Marimuthu M HT Tamil
Published Mar 08, 2025 05:49 PM IST

ராபர் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் தாணு, நடிகை ரம்பாவின் சொத்து மதிப்பினை பற்றி சொன்னது கோலிவுட்டில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

‘நடிகை ரம்பாவின் சொத்து மதிப்புதெரியுமா?’: உடைத்துப் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு
‘நடிகை ரம்பாவின் சொத்து மதிப்புதெரியுமா?’: உடைத்துப் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு

அதில் கலந்துகொண்ட திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு பேசுகையில், ‘கவிதா சகோதரி என் மகள் என்று கூட சொல்லலாம். அவர் மேடையில் பேசினால் தமிழில் புதிய வார்த்தைகள் வரும். இரண்டு தினங்களுக்கு முன், எனக்கு போன் செய்து தான் இந்தப் படத்தைத்தயாரித்து இருப்பதாகச் சொன்னார். இதை முதலிலேயே சொல்லியிருந்தால், நான் நிறைய மிச்சம் செய்து கொடுத்து இருப்பேனே எனச் சொன்னேன்.

பாக்யராஜ் சாரை என்றும் போற்றி மகிழக் கூடியவன். பக்கத்தில் இருக்கும் ரம்பாவின் கணவர் 2ஆயிரம் கோடி சொத்துக்கு அதிபதி. அவங்க இந்த மேடையில் உட்கார்ந்து இருக்கும்போது கண்கள் பனிக்கின்றது.

’ரம்பாவின் வரவு மீண்டும் நல்வரவாக இருக்கட்டும்’: கலைப்புலி எஸ். தாணு

கடந்த வாரம் ரம்பாவின் கணவர் இந்திரன் என்னிடம் வந்து, அப்பா என்னுடைய மனைவி உங்களுடைய ஆசீர்வாதத்தில் நல்லபடியாக வாழ்ந்திட்டு இருக்கிறோம். ஆனால், வீட்டிலேயே இருக்கிறது ரம்பாவுக்கு ஏதோ உறுத்தலாக இருக்கும்ன்னு நான் நினைக்கிறேன். அதை அவங்க சொல்லல. அதனால் ரம்பாவுக்கு திரும்பவும் வாய்ப்புக் கொடுக்கணும் என்று சொன்னார். உடனே, ‘ அதற்காக நீ ஒரு படம் எதுவும் எடுத்திடாதடா. நானே ஒரு நல்ல கம்பெனிக்குச் சொல்றேன்’ அப்படின்னு சொல்லியிருக்கிறேன். உன் வரவு மீண்டும் நல்வரவாக இருக்கட்டும்டா அம்மா. உன்னை அம்மான்னு சொல்றது மகளாக நினைத்துத்தான் நான் சொல்றேன்

அடுத்து அம்பிகா மேடம் இருக்காங்க. அம்பிகா மேடத்தை என் பணியில் நடிக்க வைக்க முயன்று முடியாமல் போய்விட்டது.

தியாகராஜன் சார், அவர் மகனை வண்ண வண்ணப் பூக்களில் நடிக்க என்கிட்ட வந்து கொடுத்து, அந்தப் படம் தேசிய விருது வாங்கக் காரணமாக விளங்கினார். பிரசாந்த் எங்க குடும்பத்தில் ஒருத்தர். இந்தப் படத்தின் கதாநாயகன் பெரிய நாயகனாக வர வாழ்த்துகிறேன்’’ என முடித்தார்,தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.

’தாணு சார் எங்க சொத்து மதிப்பை போட்டு உடைச்சிட்டார்’: நடிகை ரம்பா

நடிகை ரம்பா பேசுகையில், ‘நான் எங்களது சொத்து மதிப்பை ரொம்ப சீக்ரெட்டாக வைச்சிருந்தேன். தாணு சார் போட்டு உடைச்சிட்டார். பரவாயில்லை.

அடுத்து எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்குங்க. ரொம்ப வருஷம் கழிச்சு நிறைய நண்பர்களை பார்த்தது. எந்த படம் ஆகட்டும் யார் வந்தால் கூட, அதை ஜனங்க கிட்ட கொண்டு போறது பத்திரிகைகாரங்க தான். அப்படி ஒரு பத்திரிகையாளராக இருந்த கவிதா, புரொடியூசராக வந்து நின்னு இருக்காங்க. அது ரொம்ப பெருமையாக இருக்கு. நிறைய பெண்கள் தயாரிப்புப்பணிகளில் இருக்காங்க. ஆனால், கவிதா பத்திரிகையாளராக இருந்து கடுமையாக உழைச்சு, இந்த நிலைமைக்கு வந்தது எனக்குப் பெருமையாக இருக்கு. எல்லோரும் சொல்றாங்க. சின்னப் படம் பெரிய படம்ன்னு. எனக்கு அது எல்லாம் தெரியல. அது நல்ல படமான்னு தான் தெரிஞ்சது.

ராபர் படத்தின் ட்ரெய்லர் பார்த்தேன். இன்றைய ட்ரெண்ட்க்கு ஏற்றபடி இருந்தது. மியூஸிக் நன்றாக இருந்தது. எப்படி நல்ல படங்களுக்கு நீங்கள் ஆதரவு கொடுப்பீங்களோ, அப்படி இந்தப் படத்துக்கும் நீங்கள் ஆதரவு கொடுங்க’’ என பத்திரிகையாளர்களிடம் நடிகை ரம்பா கோரிக்கை வைத்தார்.