அஜித், விஜய்க்கு இருக்க நட்பு கெட்டுப்போயிட கூடாது.. 10 மடங்கு ரீச் இருந்தாலும் இதெல்லாம் வேணாம்..- கலைப்புலி எஸ். தாணு
Ajith Vs Vijay: சச்சின் படத்தின் ரீரிலீஸ் செய்யப்படுவதால், அஜித் விஜய் என இருவருக்கும் உள்ள நட்பு கெடக் கூடாது என்பதற்காக மக்களிடம் ரீச் இருந்தும் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு கூறியுள்ளார்.

Ajith Vs Vijay: கோலிவுட்டில் சமீபத்தில் ரிலீஸான பெரிய பட்ஜெட் படங்கள் பெரிதாக ஹிட் கொடுக்காத நிலையில், நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படம் தற்போது ரிலீஸாகி, முதல் நாளிலேயே 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலைப் பெற்று மாஸ் காட்டி வருகிறது. இதை அஜித் ரசிகர்கள் எல்லாம் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில்தான், விஜய் ஜன நாயகன் படத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்ததால் சோகத்தில் இருந்த அவரது ரசிகர்களை சமாதானம் செய்யும் வகையில் சச்சின் படத்தின் ரீரிலீஸ் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சச்சின் ரீ ரிலீஸ்
முதலில், சச்சின் படம் கோடை காலத்தில் ரிலீஸ் செய்யப்படும் என மட்டுமே அறிவிக்கப்பட்டது. இதனால், நிச்சயம் இந்தப் படம் மே மாதத்தில் தான் ரிலீஸாகும் என பலரும் நினைத்திருந்தனர். ஆனால், இந்தப் படம் திடீரென ஏப்ரல் 18 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டதால், வின்டேஜ் விஜய்யை திரையில் காண பலரும் ஆராவாரம் செய்து வருகின்றனர், சின்ன வயதில் மிஸ் செய்த தியேட்டரிக்கல் மொமண்ட்ஸ்களை தற்போது நிச்சயம் மிஸ் செய்யக்கூசாது என உறுதியாக இருக்கின்றனர்.
இந்ந நிலையில், அஜித் படத்தின் ரிலீஸிற்கு சில நாட்களுக்கு பின், விஜய் படத்தை ரிலீஸ் செய்ததற்கான காரணம் என்ன, சச்சின் படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரசியமான தகவல்கள் போன்றநற்றை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தானு எஸ்எஸ் மியூசிக் யூடியூபிடம் பகிர்ந்து கொண்டார்.
கமர்ஷியலான டைரக்டர்
அந்த வீடியோவில், " சச்சின் படத்தோட கதைய ஜான் மகேந்திரன் என்கிட்ட வந்து சொன்னாரு. அவரு கமர்ஷியல் டைப் படமா தான் எல்லாமே பண்ணிட்டு இருந்தாரு. இது ஒகு குஷி டைப் படம். படம் முழுக்க முழுக்க கலகலகலன்னு போகுது. இதக் கேட்டதும் தம்பி ஜீவாகிட்ட அனுப்பி வச்சேன். அவரும் ரொம்ப குஜாலா இருக்கு சார் பண்ணலாம் அப்படின்னு சொன்னாரு. அப்புறம் அடுத்த நாளே படத்தோட வேலைய ஆரம்பிச்சிட்டோம்.
10 மடங்கு அதிக வேகம்
சச்சின் படத்தோட கதை கேக்கும் போதே ரொம்ப எண்டர்டெயின்மென்ட்டா இருந்தது. அப்படிப்பட்ட படங்களுக்கு எந்த காலத்துலயும் ரெஸ்பான்ஸ் இருக்கும். அந்த மாதிரி தான் இந்தப் படத்துக்கும். இப்போ, இந்தப் படம் முதல்ல ரிலீஸ் பண்ண வேகத்த விட 10 மடங்கு அதிக வேகத்துல மக்கள்கிட்ட ரீச் ஆகிருக்கு.
நட்புக்கு பாதிப்பு வரக் கூடாது
இந்தப் படத்த குட் பேட் அக்லிக்கு போட்டியா எல்லாம் ரிலீஸ் பண்ண நினைக்கல. ஒரு துறையில ரெண்டு பேர் சரிசமமா பயணிச்சிட்டு இருக்கும் போது அவங்களால அந்தத் துறை நல்லா இருக்கணும்ன்னு தான் நான் நினைப்பேன் . அதே சமயத்துல அவங்க நட்புக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுட கூடாதுன்னு கவனமா இருப்பேன். அந்த தன்மையில தான் சச்சின் பட ரிலீஸை தள்ளி வச்சேன்.
தியேட்டரில் கொண்டாட்டம் தான்
மக்கள்கிட்ட சச்சின் படத்துக்கு வரவேற்பு இருக்கு. அதை நான் மிகைப்படுத்தி பேச விரும்பல. இந்தப் படம் ரிலீஸ் ஆகும்போது 5 வயசு பசங்க எல்லாம் கண்டிப்பா தியேட்டருக்கு எல்லாம் போய் பாத்திருக்க மாட்டாங்க. 10 வயசுக்குள்ள இருந்தவங்க பாத்தாங்களா அப்படின்னாலும் கேள்விக் குறி தான். அப்படிப்பட்டவங்க இன்னைக்கு 25, 30, 35 வயசானதுக்கு அப்புறம் விஜய் படதத் தியேட்டர்ல பாக்குறது கொண்டாட்டம் தான்.
பிளசண்டான படம்
இன்னைக்கு விஜய்யோட வேகம் 100 மடங்கு அதிகமா இருக்கு. அதனால இப்போ பாத்தாலும் அந்தப் படம் பிளசண்ட்டா இருக்கும். அதே மாதிரி இந்தப் படத்த இந்த காலத்து டெக்னிக் எல்லாம் யூஸ் பண்ணி மெருகேத்திருக்கோம். 4கே ல படத்த டிஜிட்டலைஸ் பண்ணிருக்கோம். சவுண்ட் குவாலிட்டி மாத்திருக்கோம்.
குஷியான தேவி ஸ்ரீ பிரசாத்
நேத்துக் கூட தேவி ஸ்ரீ பிரசாத் போன்ல படத்த பாத்துட்டு எப்போ பண்ண போறிங்கன்னு குஷியா கேட்டாரு. கண்டிப்பா பிரீமியர் ஷோ போடுவோம்ன்னு சொன்னப்ப, நான் ஹைதராபாத்துல இருப்பேன். எனக்கு போன பண்ணுங்க. நான் நிச்சயம் வருவேன்னு சொல்லி குஷி ஆகிட்டாரு. நான் இந்தப் படத்த நிச்சயம் பாக்கணும். ரசிகர்கள் கொண்டாட்டத்தோட பாக்கணும்ன்னு சொல்லி உணர்ச்சிவசப்பட்டாரு.
இதெல்லாம் மறக்க முடியாது
இந்தப் படம் ரிலீஸ் ஆன சமயத்துல படம் வெற்றி அடைஞ்சு லாபம் வந்துச்சு. அதுல கொஞ்சம் காச எடுத்துட்டு போய் எஸ்.ஏ.சந்திரசேகர் சார்கிட்ட கொடுத்தேன். அப்போ அவரு, லாபம் கிடைச்சதுன்னு நெனச்சி சந்தோஷம் படுங்க சார். எனக்கு இதெல்லாம் வேணாம் அப்படின்னு காச திருப்பி கொடுத்தாரு. அந்தப் படத்த பத்தி இது ஒரு மறக்க முடியாத நினைவு.
இந்தப் படத்தோட ஷீட்டிங் ஊட்டியில எடுத்துட்டு இருக்கும் போது, சுனாமி வந்தது. அப்போ ஆர்ட் டிபார்ட்மெண்ட்ல வேலை பாத்த 6 பேர் காணாம போயிட்டாங்க. அப்போ அவங்களுக்காக நாங்க ஷூட்டிங் ஸ்பாட்டலயே மௌன அஞ்சலி எல்லாம் செலுத்துனோம். அப்புறம் இந்தவங்களோட குடும்பத்துக்கு பெப்சி மூலமா 2 லட்சம் நிவாரணம் கொடுத்தோம்." என்றார்.
