Producer K Rajan: ‘காசு வாங்கிட்டு கண்டபடி பேசுற…உனக்கு என்ன தெரியும்’ - சவுக்கை பொளந்த ராஜன்!
அந்த நிகழ்ச்சியில் எல்லோருக்கும் பணமானது கொடுத்து விடப்பட்டது. கடைசியாக ஒரு சிலருக்கு பணம் கொடுக்க முடியவில்லை. அதற்கு காரணம் ஸ்பான்சர் தருகிறேன் என்று சொன்னவர்கள், அந்த நேரத்தில் தரவில்லை; அதுதான் காரணம். தொழிலாளர்களுக்கு எங்களுடைய ஆட்கள் என்றுமே துரோகம் செய்ய மாட்டார்கள்.
கா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கெடுத்த தயாரிப்பாளர் ராஜன் சவுக்கு சங்கரை சரமாரியாக விமர்சித்தார்.
மேடையில் அவர் பேசும் போது, “ உண்மையிலேயே நான் இதுவரை ஆண்ட்ரியாவை தமிழ் பெண் என்று நினைக்கவே இல்லை. உங்களது பிறந்த இடம் எது என்று கேட்டபோது, அவர் சென்னை தான் என்றார். அப்பா எங்கே வேலை பார்த்தார் என்று கேட்கும் பொழுது ஹைகோர்ட் என்றார்; சொன்ன உடனே ஒரு அடி தள்ளி உட்கார்ந்தேன்.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, தமிழ் நடிகர், நடிகைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்; பஞ்சம் வந்தால் மட்டும் பிற மொழிகளில் இருந்து நாம் கலைஞர்களை இங்கு கொண்டு வந்து கொள்ளலாம். அவர்களும் நம் சகோதரர்கள்தான். கலைஞர் நூற்றாண்டு விழாவானது சிறப்பாக நடைபெற்றது.
முதலில் அந்த நிகழ்ச்சி சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடப்பதாக இருந்தது. அதன் பின்னர் ஒரு சில காரணங்களுக்காக ரேஸ் கோர்ஸ்க்கு மாற்றப்பட்டது. குறுகிய காலத்தில் அப்படிப்பட்ட ஒரு மாற்று ஏற்பாட்டை செய்தது பெரிய விஷயம். நிகழ்ச்சியை சிரமத்திற்கு இடையே தான் நடத்தினார்கள்.
அந்த நிகழ்ச்சியில் எல்லோருக்கும் பணமானது கொடுத்து விடப்பட்டது. கடைசியாக ஒரு சிலருக்கு பணம் கொடுக்க முடியவில்லை. அதற்கு காரணம் ஸ்பான்சர் தருகிறேன் என்று சொன்னவர்கள், அந்த நேரத்தில் தரவில்லை; அதுதான் காரணம். தொழிலாளர்களுக்கு எங்களுடைய ஆட்கள் என்றுமே துரோகம் செய்ய மாட்டார்கள்.
தொழிலாளர்கள் நன்றாக இருந்தால், சினிமா நன்றாக இருக்கிறது என்று அர்த்தம். ஆனால் சிலர் காசு கொடுத்து சில சவுக்குகளை பேச வைக்கிறார்கள். அவருக்கு ஒன்றுமே தெரியாது; ஆனால் அவர்தான் பணம் வாங்கி கொடுத்த புரோக்கர் போல கலைஞர் விழாவை பற்றி பேசி இருக்கிறார். கலைஞர் கேட்ட போதெல்லாம் எங்களுக்கு உதவி செய்தவர், எங்களுக்காக நிலத்தை கொடுத்தவர். அதற்காக இந்த திறைஉலகம் அவருக்காக நன்றி கடன் பட்டிருக்கிறது.
அந்த கடனுக்காக தான் அந்த நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது அன்று மழை வேறு. ஆனால் சங்கர் யாரிடமோ நீ கூலி வாங்கிக் கொண்டு இப்படி பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நிகழ்வில் முதல்வர் மு க ஸ்டாலின் ஹைதராபாத்தில் உள்ள ராமாஜிராவ் ஃபிலிம் சிட்டி போல, அதைவிட பிரமாண்டமாக, படப்பிடிப்பு நடத்துவதற்கு இடத்தை அமைத்து தருவதாக அந்த நிகழ்வில் உறுதி கொடுத்தார்.
இவ்வளவு எல்லாம் செய்த முதல்வரை யாரோ காசு கொடுத்தார் என்பதற்காக கண்டபடி பேசுகிறார் சங்கர். முதல்வரை திறமையே இல்லாதவர் என்றும் அவர் பதவியை உதயநிதி ஸ்டாலினிடம் கொடுத்து விட்டு செல்ல வேண்டும் என்றும் பேசுகிறார்;நான் கேட்கிறேன்.. அதை சொல்வதற்கு நீ யார்.. உனக்கு என்ன தகுதி இருக்கிறது அதைப்பற்றி எல்லாம் பேச... கலைஞரைப் பற்றி பேசுவதற்கு அவருக்கு அருகதை இல்லை” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்