K.Rajan Interview: ‘விஜயகாந்துக்கு நடந்தது பெரிய துரோகம்’ -கே.ராஜன் ஆவேசம்!
K.Rajan About vijayakanth: ‘அவர் ஒன்றும் அவ்வளவு பெரிய குடிகாரன் கிடையாது. அவரை விட குடிகாரன் எல்லாம் இருக்கிறான்’’ -கே.ராஜன்
தயாரிப்பாளர் கே.ராஜன், சமீபத்தில் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அதில் அவர் விஜயகாந்த் உடனான பழக்கம் குறித்தும், அவரது தனிப்பட்ட பழக்கம் குறித்தும் சில கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார். இதோ அந்த பேட்டி:
‘‘விஜயகாந்த்தின் அரசியல் சறுக்கலுக்கும், அவரது குடி பழக்கத்திற்கும் சம்மந்தம் இல்லை. ஞாயிற்று கிழமை மதியம் தான் அவர் குடிப்பார். ஷூட்டிங் ஸ்பார்ட்டில் குடிக்கிற ஆளு அவர் இல்லை. நான் அவரோடு குடிச்சிருக்கேன். ராதாரவி, நான், விஜயகாந்த் 3 பேரும் குடித்திருக்கிறோம்.
நடிகர் சங்கத்தில் விஜயகாந்த்துடன் 10 வருசம் ஒன்றாக இருந்திருக்கிறேன். எளிமையான மனிதர். குடி என்பது சாதாரணம். அது அவங்க ரிலாக்ஸ் அடைவதற்காக தான். ஷூட்டிங் இருந்தால், அதெல்லாம் 7 மணிக்கு தான். நடிகர் சங்கத்தில் எல்லாரிடமும் எளிமையாக பேசி, பழகி, அவர்கள் எல்லாரும் போன பிறகு தான் குடிப்பார்.
அவர் ஒன்றும் அவ்வளவு பெரிய குடிகாரன் கிடையாது. அவரை விட குடிகாரன் எல்லாம் இருக்கிறான். அரசியலுக்கு வந்ததும் முதல் துரோகம், அதிமுக கூட்டணியில் 21 எம்.எல்.ஏ.,கள் வந்ததில் தொடங்கியது. சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை பார்த்து நாக்கை மடித்தது, ஜெயலலிதாவை எதிர்த்து அப்படி செய்த ஒரே மாவீரன், அவர் தான். அந்தம்மா, அப்போ வைத்தது.
குளோஸ் பண்ணிடுறேன் என்று ஜெயலலிதா சொன்னார் , செய்தார். அவங்க ஒரு யானை. திட்டம் போட்டால் அழித்துவிடுவார்கள். அழித்தார்கள். விஜயகாந்த் கட்சியில் இருந்தவர்களை இழுத்தார்கள். அது பெரிய துரோகம். மொத்த துரோகம்.
இப்படி படிப்படியாக அவருக்கு துரோகம் செய்யப்பட்டது. அதில் அவர் மனம் நொந்து போனார். அப்புறம் உடல்நலம் கெட்டது, அரசியல் பின்னடை ஏற்பட்டது. விஜயகாந்த் அரசியலில் பின்னடைவு என்று கூறுகிறோம், நான் ஏதோ செய்யப் போகிறேன் என்று அரசியலுக்கு வந்த கமல், அடுத்தடுத்த தேர்தலில் பின்னடைவை தானே சந்தித்துள்ளார்.
விஜயகாந்திற்கு இருந்த மக்கள் செல்வாக்கு, கமலுக்கு இல்லை. தொண்டர்களை ரசிகர்களை விஜயகாந்த் அப்படி கவனித்தார். ஞாயிறு ஆனால், தி.நகரில் உள்ள அலுவலகத்தில் பிரியாணி தயார் செய்து, வெளியூர் ரசிகர்களுடன் போட்டோ எடுத்து, விருந்தளித்து அனுப்புவார். இப்போ வீட்டு வாசலில் வரும் ரசிகர்களை கூர்கா வைத்து விரட்டும் நடிகர்களுக்கு மத்தியில் விஜயகாந்த் கிரேட்.
அஜித், ரசிகர் மன்றத்தை கலைத்துவிட்டார். ஒரு ரசிகரையும் சந்திப்பது இல்லை. ரஜினியாவது ஏதாவது ஒரு நாள் சந்திக்கிறார். அஜித் யாரை பார்க்கிறார்? எந்த ரசிகரை பார்க்கிறார்? ஒரு ரசிகருக்காவது மோர் கொடுத்திருப்பாரா? ஆனால், அவர் ரசிகன் வெறித்தனமா தான் இருக்கான். மாதத்திற்கு ஒரு மாவட்ட ரசிகர்களை அவர் சந்திக்கலாமே. அதை சொன்னால், கோபித்துக்கொள்கிறார்கள்.
எம்.ஜி.ஆர்., கொட்டிக் கொடுத்தாரே. ஏழைகளை காப்பாற்றுங்கள். ரசிகர்களை மகிழ்வியுங்கள். கமலை ஒரு அரசியல்வாதியாக நான் பார்க்கவே மட்டேன். அவரது ஹேராம் படத்திற்கு என்னை பர்மா பஜார் அனுப்பிவிட்டு, என்னை போலீஸ் கைது செய்ய தேடும் போது, இயக்குனரும் தயாரிப்பாளருமான கோதண்டராமையா கமலுக்கு போன் செய்து சொல்கிறார். உங்களால் தான் அவரை போலீஸ் தேடுகிறது என்று.
அதற்கு அவர், ‘ராஜனை நான் அனுப்பவில்லையே’ என்று கமல் சொல்லியிருக்கிறார். ஆனால், அவர் தான் காலை 10 மணிக்கு எனக்கு போன் செய்து போகச் சொன்னார். இல்லை என்றால், நான் ஏன் ஹேராம் படத்திற்காக அங்கே போக வேண்டும்.,’’
என்று அந்த பேட்டியில் தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்துள்ளார்.
டாபிக்ஸ்