Dil Raju: 'பிளாப் ஆன படம் எல்லாம் சூப்பர் ஹிட்டுன்னு சொல்ற நிலமை இருந்தது!'- தில் ராஜு பேச்சால் சர்ச்சை
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Dil Raju: 'பிளாப் ஆன படம் எல்லாம் சூப்பர் ஹிட்டுன்னு சொல்ற நிலமை இருந்தது!'- தில் ராஜு பேச்சால் சர்ச்சை

Dil Raju: 'பிளாப் ஆன படம் எல்லாம் சூப்பர் ஹிட்டுன்னு சொல்ற நிலமை இருந்தது!'- தில் ராஜு பேச்சால் சர்ச்சை

Malavica Natarajan HT Tamil
Feb 02, 2025 11:47 AM IST

Dil Raju: தயாரிப்பாளர் தில் ராஜு சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது, பிளாப் ஆன படங்களை எல்லாம் சூப்பர் ஹிட்டுன்னு சொல்ல வேண்டிய நிலை இருந்ததாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Dil Raju:'பிளாப் ஆன படம் எல்லாம் சூப்பர் ஹிட்டுன்னு சொல்ற நிலமை இருந்தது!'- தில் ராஜு பேச்சால் சர்ச்சை
Dil Raju:'பிளாப் ஆன படம் எல்லாம் சூப்பர் ஹிட்டுன்னு சொல்ற நிலமை இருந்தது!'- தில் ராஜு பேச்சால் சர்ச்சை

இந்நிலையில், படக்குழு படத்தின் வெற்றியை கொண்டாட எண்ணி நேற்று ஹைதராபாத்தில் வினியோகஸ்தர்கள் நன்றி கூட்டம் நடத்தியது. இந்தக் கூட்டத்தில் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு பேசிய வார்த்தைகள் தான் தற்போது பேசுபொருளாகி உள்ளது. அவர் என்ன பேசினார் என்பதைக் காணலாம்.

சூப்பர் ஹிட் போஸ்டர்கள்

இந்த விழாவில் தில் ராஜு பேசிய போது,, “சாதாரணமா விநியோகஸ்தர்களுக்கு பிரேக் ஈவன் ஆனா தான் சூப்பர் ஹிட்னு சொல்லுற சூழ்நிலை இருக்கு. அவங்க நஷ்டப்படறப்போ கூட சினிமா சூப்பர் ஹிட் போஸ்டர்கள் வருது. கலாச்சாரம் மாறிடுச்சு. சினிமாத் துறையில 90 சதவீதம் தோல்விகள் இருக்கு. வெறும் 10 சதவீதம் மட்டும் வெற்றி இருக்குறது இந்தத் துறை. நம்ம விநியோகஸ்தர்கள் வெற்றி, தோல்விகள் எல்லாத்தையும் தாங்கிட்டு நம்மோட பயணத்தை தொடர்ந்துட்டு இருக்காங்க” என்றார்.

கதையே முக்கியம்

“படத்துக்கு பட்ஜெட் இல்லை, கதை தான் முக்கியம்னு ‘சங்கிராந்தி வஸ்துனானம்’ படத்தோட வெற்றி நிரூபிச்சிருக்கு. நாங்களும் முன்னாடி கதைய நம்பி சினிமா பண்ணினோம். ஆனா கடந்த நாலு ஐந்து வருஷமா கம்பினேஷன்ஸ நம்பி நஷ்டப்பட்டுட்டு இருந்தோம். மறுபடியும் இயக்குனர் அனில் ரவிபுடி வெற்றிக்கு ஒரு வழி காட்டினாரு. ‘சங்கிராந்தி வஸ்துனானம்’ படத்தோட வெற்றியோட ஒரு பாதை அமைச்சு கொடுத்தாரு. நம்ம நிறுவனத்துல இருந்து இன்னும் அற்புதமான படங்கள் வர இந்த வெற்றி எனர்ஜி கொடுத்துச்சு” என்றார்.

பாடம் கற்றுக் கொடுத்தது

சங்கிராந்தி வஸ்துனானம் படத்தோட வெற்றி தயாரிப்பாளராக எனக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்தது. எங்கேயோ விழுந்து கிடந்த எங்களைத் தூக்கி நிறுத்தி வச்சுது. மறுபடியும் அற்புதமான படங்கள் எடுப்போம். ரிசல்ட்ஸ் 100% வரும். வெங்கடேஷ் நட்பு மிக்க ஹீரோ. அவர் தயாரிப்பாளர்களுக்குக் கொடுக்குற மரியாதை அளவில்லாமல் இருக்கும். அதனால தான் அவரோட நாலு படங்கள் பண்ண முடிஞ்சது” என தில் ராஜு குறிப்பிட்டாரு.

வெற்றிய ரசிக்குறேன்

அனில் ரவிபுடி பேசிய போது, ‘சங்கிராந்தி வஸ்துனானம்’ படம் தன்னோட வாழ்க்கையில ஒரு அதிசயம். இந்த பிளாக்பஸ்டரை ரசிச்சுட்டு இருக்கேன். இந்த படத்தோட வெற்றியில பெரிய கிரெடிட் நடிகர் வெங்கடேஷ்க்கு கிடைக்கும். இந்த படத்தின் மூலமா நான் எப்பவும் கேள்விப்பட்டதில்ல, பார்த்ததில்லன்னு நினைச்ச இரண்டு விஷயங்கள் நடந்தது.

நூறு கோடி ஷேர்

ஆறு நாளுல 100 கோடி ஷேர் அடிச்சுச்சு. ரீஜனல் படத்துக்குப் பார்க்க முடியாதன்னு நினைச்ச 300 கோடி கிராஸ் நம்பரைப் பார்க்கப் போறேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு. அடுத்து பண்ணப் போற படங்கள் விஷயத்துல இயக்குனராக எனக்கு இருக்குற பொறுப்பு இன்னும் அதிகமாச்சு” என்றார்.

சர்ச்சை

இந்த நிகழ்ச்சியில், படங்களின் வெற்றி, தோல்வி அறிவிப்புகள் குறித்து தயாரிப்பாளர் தில் ராஜூ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர் எந்தப் படத்தை கூறுகிறார் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.