புஷ்பா 2 திரைப்பட மரணம்: பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு துணையாக நின்ற தில் ராஜூ..
புஷ்பா 2 திரைப்படம் பார்க்க வந்து உயிரிழந்த பெண்ணின் கணவருக்கு திரைத்துறையில் வேலை வழங்கப்படும் என தயாரிப்பாளர் தில் ராஜ் கூறியுள்ளார்.
தெலுங்கானா திரைப்பட மேம்பாட்டுக் கழக (எஃப்.டி.சி) தலைவர் தில் ராஜு நேற்று (டிசம்பர் 24) தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்தார். பின்னர் சந்தியா தியேட்டர் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் காயமடைந்த குழந்தை ஸ்ரீதேஜை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தில் ராஜு, ரேவதியின் கணவர் பாஸ்கருக்கு சினிமாவில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்தார். அவர் குடும்பத்தை எல்லா வகையிலும் ஆதரிப்பதாக கூறினார்.
சினிமாத் துறையில் வேலை
முதலில் முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்த தில் ராஜு, பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஸ்ரீதேஜை சந்தித்தார். அப்போது பேசிய தில்ராஜ், குழந்தையின் உடல்நிலை இப்போது சீராக உள்ளது. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். ரேவதியின் கணவர் பாஸ்கர் தற்போது தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு திரையுலகில் நிரந்தர வேலை வாங்கித் தருகிறேன் என உறுதியளித்துள்ளார்.
பாலமாக இருப்பேன்
இதையே முதல்வரிடம் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார். ஓரிரு நாட்களில் திரையுலக தலைவர்களுடன் மீண்டும் முதல்வரை சந்திக்க உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், அல்லு அர்ஜுனையும் சந்திக்க உள்ளேன். அதன் பிறகு மீண்டும் ஊடகங்களிடம் பேசுவேன் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். மேலும் தான் திரையுலகிற்கும், அரசுக்கும் பாலமாக இருப்பேன் என்று கூறினார்.
உடல்நிலை தேறி வருகிறது
ஸ்ரீதேஜின் உடல்நிலை குறித்து பதிலளித்த தில் ராஜு, இரண்டு நாட்களுக்கு முன்பு வென்டிலேட்டர் உதவி இல்லாமல் அவர் தற்போது நலமாக உள்ளார். இப்போது அவர் மெல்ல மெல்ல குணமடைந்து வருகிறார் என்றார். மேலும், இந்த பிரச்சினையை விரைவில் தீர்க்க முயற்சிப்பதாக அவர் கூறினார். இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது, யாரும் வேண்டுமென்றே அதைச் செய்ய மாட்டார்கள் என்றார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு துணை
முன்னதாக, சந்தியா தியேட்டர் சம்பவத்தில் உயிரிழந்த ரேவதியின் குடும்பத்தினருக்கும், படுகாயமடைந்த குழந்தை ஸ்ரீதேஜ் குடும்பத்தினருக்கும் எல்லா வகையிலும் துணை நிற்போம் என்று தில் ராஜு தெளிவுபடுத்தியுள்ளார். அவர்களின் குடும்பப் பொறுப்பை தானே ஏற்றுக்கொள்வதாக அவர் கூறினார். அமெரிக்காவில் ஒரு முக்கியமான நிகழ்வு இருப்பதால் தன்னால் வர முடியவில்லை என்று அவர் கூறினார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ஸ்ரீதேஜிடம் அல்லு அர்ஜுன் ரூ.25 லட்சத்தையும் புஷ்பா 2 படக்குழுவினர் ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.
ரசிகை மரணம்
புஷ்பா 2 தி ரூல் முதல் காட்சியைப் பார்க்க அல்லு அர்ஜுன் திரையரங்குக்கு வந்தபோது ஏற்பட்ட நெரிசலி சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், அல்லு அர்ஜூனை தெலங்கானா போலீஸார் அதிரடியாக கைதுசெய்தனர். அதனைத்தொடர்ந்து அல்லு அர்ஜூன் சிக்கடபள்ளி ஜெயிலுக்கு மாற்றப்பட்டார்.
அல்லு அர்ஜூன் விடுதலை
இதற்கிடையே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அல்லு அர்ஜுன். தரப்பில் இருந்து உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கினார். ஆனாலும் அவர் நேற்று இரவு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் தற்போது விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்.
தெலங்கானா முதல்வர் குற்றச்சாட்டு
சினிமா பிரமுகர் ஒருவர்(அல்லு அர்ஜூன்) ஒரு நாள் சிறைக்குச் சென்றதற்கு, திரையுலக நபர்கள் அனைவரும் அவரைப் பார்க்க அவரது வீட்டிற்குச் சென்றனர். எ
ஆனால், அந்த சினிமா பிரமுகரில் ஒருவர் கூட மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கூட்டநெரிசலில் பாதிக்கப்பட்ட அந்த குழந்தையைச் சென்று பார்க்கவில்லை. இதனால் சினிமாவில் இருப்பவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எனககுத் தெரியவில்லை" என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.
விளக்கமளித்த அல்லு அர்ஜூன்
இது ஒரு விபத்து. இது யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. நிஜமாகவே அந்த ஃபேமிலிக்கு நடந்தது மிக மிக துரதிர்ஷ்டம். நான் ரொம்ப வேதனைப்படுறேன்னு சொல்றேன். அந்தச் சிறுவன் பற்றி ஒவ்வொரு சில மணிநேரங்களுக்கும் ஒருமுறை அப்டேட் கேட்டுட்டு இருக்கேன், அவனுடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுட்டு இருக்கிறதா தகவல் வருகிறது என அல்லு அர்ஜூன் விளக்கமளித்தார்.
டாபிக்ஸ்