Producer Dil Raj: 'ஐடி ரெய்டால் ஹார்ட் அட்டாக்கா?.. என்னம்மா உருட்டுறாங்க' - விவரம் சொன்ன தில் ராஜு
Producer Dil Raj: என் வீட்டில் நடந்த ஐடி ரெய்டால் என் அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்ததாக எல்லாம் பரப்பி விட்டனர் என தயாரிப்பாளர் தில் ராஜு வருத்தம் கொண்டார்.

Producer Dil Raj:ஐடி சோதனைகள் குறித்து தில் ராஜுவின் விளக்கம்: பிரபல தயாரிப்பாளர் தில் ராஜுவின் வீடு, அலுவலகங்களில் ஐடி அதிகாரிகள் நீண்ட நேரம் சோதனை நடத்தினர். இதுகுறித்து பல்வேறு வதந்திகள் பரவின. இந்நிலையில், நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தில் ராஜு இதுகுறித்து விளக்கமளித்தார்.
தெலுங்கு திரையுலக ஐடி ரெய்டு
தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த சில தயாரிப்பாளர்கள் மற்றும் பிரபலங்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனைகள் பரபரப்பை ஏற்படுத்தின. பிரபல தயாரிப்பாளர் தில் ராஜுவின் வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் மூன்று நாட்கள் இந்த சோதனை நீடித்தது. இதுகுறித்து பல்வேறு வதந்திகள் பரவின. இதையடுத்து நேற்று (ஜனவரி 25) செய்தியாளர் சந்திப்பில் தில் ராஜு இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்தார்.
வதந்திகளைப் பரப்ப வேண்டாம்
ஐடி அதிகாரிகள் தங்கள் வீடுகளில் சோதனை நடத்தியது குறித்து சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களில் பல்வேறு யூகங்கள் வெளியாகின. தங்களிடம் பணம், ஆவணங்களைப் பறிமுதல் செய்ததாக வந்த வதந்திகள் உண்மையில்லை. ஐடி அதிகாரிகள் எதையும் பறிமுதல் செய்யவில்லை. எங்கள் அனைவரிடமும் சேர்த்து ரூ.20 லட்சம் மட்டுமே இருந்தது அதுமட்டுமின்றி, அனைத்து கணக்குகளும் சரியாக இருந்தது என்றார்.
ஆச்சரியப்பட்ட அதிகாரிகள்
எங்களுடைய வெளிப்படைத் தன்மையைக் கண்டு ஐடி அதிகாரிகள் ஆச்சரியப்பட்டனர், அத்துடன் அவர்கள் எங்களின் கணக்கு வழக்கு நடைமுறைகளைக் கண்டு மகிழ்ச்சியும் அடைந்தனர். சோதனையின் போது எங்கள் கணக்கு வழக்கு எல்லாம் இப்படி அப்படி இருக்கும் என்று ஐடி அதிகாரிகள் நினைத்தார்கள். ஆனால், வருமான வரித் துறையே ஆச்சரியப்பட்டது. எங்களுக்கும் அவர்களுக்கும் இடையேயான ஒத்துழைப்பில் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். இருக்கும் விஷயங்கள் குறித்து தணிக்கையாளர்கள், ஐடி துறை அதிகாரிகள் தெளிவுபடுத்திக் கொள்வார்கள்”
யாரும் குறிவைக்கவில்லை
தெலுங்கு திரையுலகில் தன் மீது மட்டும் ஐடி சோதனை நடத்தப்படவில்லை. மேலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ், அபிஷேக் அகர்வால் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது என்று தில் ராஜு சுட்டிக்காட்டி, ஐடி சோதனைகள் என்பது ஒரு நடைமுறை தான். இதன் மூலம் தன்னை யாரும் குறிவைக்கவில்லை என்றார்.
அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக்
கடுமையான இருமல் காரணமாகத்தான் தனது அம்மாவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளேன், ஐடி சோதனையால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக சிலர் தவறான தகவலைப் பரப்பினர், அது உண்மையில்லை என்றார். அவரது உடல்நிலை தற்போது நன்றாக உள்ளது, இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார் என்றார். எந்த விஷயத்திலும் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று தில் ராஜு கேட்டுக் கொண்டார்.
படங்கள் கணக்கு
போஸ்டர்களில் அதிக வசூல் காட்டுவதால்தான் ஐடி சோதனை நடத்தப்பட்டது என்ற வாதத்திற்கு தில் ராஜு பதிலளித்தார். இது திரையுலகம் முழுவதும் விவாதிக்க வேண்டிய விஷயம் என்றார். அனைவரும் சேர்ந்து பேசுவோம் என்றார்.
கறுப்புப் பணம் எங்கே?
திரையுலகில் கறுப்புப் பணம் எங்கே உள்ளது, 90 சதவீத டிக்கெட்டுகள் ஆன்லைன் தளங்களில்தானே முன்பதிவு செய்யப்படுகின்றன என்றார். வெளிநாடுகளில் இருந்து வரும் வசூலில் இருந்து கறுப்புப் பணம் வருகிறது என்பதும் ஒரு யூகமே என்றார். தன் மீது 2008க்குப் பிறகு தற்போதுதான் ஐடி சோதனை நடத்தப்பட்டுள்ளது. திரையுலகைச் சேர்ந்த பலர் மீது தற்போது சோதனை நடத்தப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து சோதனைக்குப் பிறகு ஐடி அதிகாரிகள் வழங்கிய ஆவணங்களைக் காண்பித்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
பொங்கல் ரிலீஸ் படங்கள்
தில் ராஜு தயாரித்த கேம் சேஞ்சர், சங்கராந்திக்கு வஸ்துணம் ஆகிய திரைப்படங்கள் இந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகின. வெங்கடேஷ் நடித்த சங்கராந்திக்கு வஸ்துணம் திரைப்படம் எதிர்பார்ப்பை மீறி வசூல் செய்து வருகிறது. கேம் சேஞ்சர் திரைப்படத்தை தில் ராஜு சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் தயாரித்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்