'ஸ்ரீதேவி இன்னும் என்னுடன் இருக்கிறார்.. என்னை ஊக்குவிக்கிறார்'- போனி கபூர் உருக்கம்
ஸ்ரீதேவி இன்னும் என்னுடன் என்னைச் சுற்றி தான் இருக்கிறார். அவர் உடல் எடையைக் குறைக்க என்னை ஊக்குவித்து வருகிறார் என தயாரிப்பாளர் போனி கபூர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் பிறந்து, குழந்தை நட்சத்திகரமாக சினிமாவிற்குள் நுழைந்தவர் ஸ்ரீதேவி, பின் இவர் கே. பாலச்சந்தரின் மூன்று முடிச்சு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின், கமல் ஹாசன், ரஜினிகாந்த் போன்ற முன்னணி தமிழ் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த அவர், பின்னாளிஸ் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
விருதுகளை குவித்த நடிகை
தன் நடிப்புத் திறமையால் பல மொழி மக்களையும் கவர்ந்த ஸ்ரீதேவி மாநில அரசின் விருதுகள், பிலிம்பேர் விருதுகள், பத்ம ஸ்ரீ போன்ற விருதுகள் வழங்கப்பட்டது.
படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீதேவி இந்தித் திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூரை கடந்த 1996ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஜான்வி, குஷி என 2 மகள்களும் உள்ளனர்.
ஹோட்டலில் மரணம்
இவர் 2018ம் ஆண்டு துபாயில் குடும்ப நிகழ்ச்சிக்காக சென்றிருந்த சமயத்தில் ஹோட்டல் அறையிலேயே உயிரிழந்தார். இது இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, போனி கபூர் தன் மனைவி ஸ்ரீதேவி குறித்த நினைவுகளை பகிர்ந்துள்ளார். நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், தனது உடல்நிலை பராமரிப்பு குறித்தும் உடல் எடை கட்டுப்பாடுகள் குறித்தும் தன் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
ஸ்ரீதேவியை நினைவு கூர்ந்த போனி கபூர்
அப்போது, "உடல் எடையை குறைப்பது குறித்த சிந்தனைகளை என் மனைவி தான் விதைத்தார். உடல் எடையை குறைக்கும் முயற்சியில் அவள் எப்போதும் என் பின்னாலே இருந்து ஊக்குவித்தாள். அவள் எப்போதும் சுகாதார உணர்வுடன் இருப்பார். நான் எப்போதும் அவளுடன் வாக்கிங் செல்வது வழக்கம். நான் அவளுடன் ஜிம்முக்கும் செல்வேன்.
மறைந்த மனைவி குறித்து எமோஷனல்
ஸ்ரீதேவி எப்போது சாப்பிட வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பவர். ஆனால், நான் அதை செய்ய முயற்சித்தேன். என்னால் முடிந்தவரை முயற்சித்தேன்.
ஸ்ரீதேவி இன்னும் என்னைச் சுற்றி இருப்பதாக உணர்கிறேன், உடல் எடையைக் குறைக்க என்னை ஊக்குவிக்கிறார். ' வெயிட் குறையும்'னு சொல்லிக் கொண்டிருக்கிறார் என்றார்.
மறைந்த பின்னும் தேசிய விருது
நடிகை ஸ்ரீதேவி இந்திய மொழிகளில் 300 படங்களை நடித்துள்ளார். அவரது 300வது படம் தான் மாம். இது அவரின் கடைசி படமாகும். இந்தப் படத்தில் நடித்ததற்காக ஸ்ரீதேவிக்கு அவர் மறைந்த பின் தேசிய விருதும் வழங்கப்பட்டது.
சினிமாவிற்குள் வந்த மகள்கள்
ஸ்ரீதேவியை பின்பற்றி அவரது இரண்டு மகள்களும் சினிமாவை பின்பற்றி வருகின்றனர். இவர்களில் ஜான்வி கபூர் தடக் திரைப்படம் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானார். பின் ஹிந்தி திரைப்படங்களில் மட்டும் நடித்து வந்த அவர், தேவாரா 1 படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவிற்குள் தன் காலடியை வைத்தார்.
இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு மகளான குஷி ஜோயா அக்தரிண் தி ஆர்ச்சீஸ் எணும் படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்,
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்