Actress Sridevi: ஸ்ரீதேவியின் கண்களில் காதல் தேடும் போனி கபூர்! அந்த புகைப்படம் என்ன சொல்கிறது?
Actress Sridevi: மறைந்த நடிகையும் தன் மனைவியுமான ஸ்ரீதேவியின் நினைவுகளை தயாரிப்பாளர் போனி கபூர் அவரது சமூக உடகத்தில் பகிர்ந்துள்ளார்.

Actress Sridevi: தயாரிப்பாளர் போனி கபூர் அடிக்கடி தனது மறைந்த மனைவியான புகழ்பெற்ற நடிகை ஸ்ரீதேவியின் பழைய நினைவுகளைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் போனி கபூர் நேற்று ஞாயிற்றுக்கிழமை, தன் மனைவியுடனான அழகான பழைய புகைப்படத்தைப் பகிர்ந்து, அவரை எவ்வளவு மிஸ் செய்கிறார் என்பதை வெளிப்படுத்தினார்.
உண்மைக் காதல்
அந்தப் புகைப்படத்தில் இருவரும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பது போல் உள்ளது. புகைப்படத்துடன், "உண்மையான காதலை மறைக்க முடியாது" என்று போனி கபூர் கூறியுள்ளார். இவரது பதிவை பார்த்த ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர்.
எனக்கு பிடித்த ராணி
மேலும் போனி கபூர் ஸ்ரீதேவியின் புகைப்படத்தை பதிவிட்ட உடனேயே, ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் குவிந்தனர். ஒரு ரசிகர், "எனக்குப் பிடித்த ராணி, ஸ்ரீதேவி மேடம்" என்று எழுதியுள்ளார், மற்றொருவர் அவர்களை "சிறந்த ஜோடி" என்று கூறி பெருமைப்படுத்தினார்.
சமீபத்தில், போனி கபூர் ஸ்ரீதேவியின் மற்றொரு பழைய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார், அதில் அவர் கருப்பு நிற கவுனில் அழகாக சிரித்துக் கொண்டிருந்தார். அவரை நினைவுகூர்ந்து, "ஒரு உண்மையான ராணியின் நேர்த்தியும் கம்பீரமும்" என்று குறிப்பிட்டு தன் மனைவியை கொண்டாடி இருந்தார்.
மும்பையில் ஸ்ரீதேவி சதுக்கம்
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், போனி கபூர் தனது மகளுடன் சேர்ந்து, மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மும்பையில் ஒரு சதுக்கத்தைத் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மூத்த நடிகை ஷபானா ஆஸ்மியும் தொடக்க விழங்கில் கலந்து கொண்டார்.
ஸ்ரீதேவியின் சினிமா
ஸ்ரீதேவி 1963 இல் ஸ்ரீ அம்மாயங்கர் அய்யப்பன் என்ற பெயரில் பிறந்தார். பின் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து, 16 வயதினிலே, வறுமையின் நிறம் சிகப்பு, ஜானி. மூன்றாம் பிறை போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதை கொள்ளையடித்து கனவுக் கன்னியாக திகழ்ந்கார். பின் தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்தார்.
விருது நாயகி
அதைத் தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்ற ஸ்ரீதேவி சாந்தினி, லம்ஹே, மிஸ்டர் இந்தியா, சால்பாஸ், நாகினா, சத்மா மற்றும் இங்கிலீஷ் விங்கிலீஷ் போன்ற படங்களில் தன் முத்திரையை பதித்தார்.
பத்மஸ்ரீ விருது பெற்ற இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடப் படங்களிலும் தனது அசாதாரண நடிப்பால் தடம் பதித்தார். இவரது கடைசிப் படம் மாம். இந்தப் படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது ஸ்ரீதேவியின் மறைவிற்குப் பின் வழங்கப்பட்டது.
ஸ்ரீதேவி மறைவு
நடிகை ஸ்ரீதேவி 2018 பிப்ரவரி 24ம் தேதி அன்று துபாயில் ஒரு குடும்ப விழாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்தபோது இறந்தார். இவருக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் ஜான்வி கபூர் பாலிவுட் மட்டுமின்றி தென்னிந்திய படங்களிலும் நடித்து வருகிறார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்