தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Producer Boney Kapoor Has Announced That The Song Chilla Chilla From Thunivu Will Be Released On December 9

Thunivu: டிச.9ல் ‘சில்லா சில்லா’ பாடல் ரிலீஸ்: ஒரு வழியாக அறிவித்த போனிகபூர்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Dec 05, 2022 07:20 PM IST

Thunivu ChillaChilla Song: பொங்கல் ரேஸில், நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்துடன் துணிவு நேருக்கு நேர் மோதவிருக்கும் நிலையில், வாரிசு படத்திலிருந்து இரு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

துணிவு படத்தில் அஜித்
துணிவு படத்தில் அஜித்

ட்ரெண்டிங் செய்திகள்

ஆனால், தயாரிப்பாளர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வராமல் இருந்தது. இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் பாடலாசிரியர் ஆகியோரிடம் எல்லாம் ‘சில்லா சில்லா’ பாடல் குறித்த அப்டேட்டுகளை ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் தான், டிசம்பர் 9 ம் தேதி சில்லா சில்லா பாடல் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் முறைப்படி அறிவித்துள்ளார். தயாரிப்பாளரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து , இசையமைப்பாளர் ஜிப்ரான் உள்ளிட்டோர் அந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர்.

பொங்கல் ரேஸில், நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்துடன் துணிவு நேருக்கு நேர் மோதவிருக்கும் நிலையில், வாரிசு படத்திலிருந்து இரு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தான், துணிவு படத்தின் முதல் சிங்கள் எப்போது வரும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, ஒரு வழியாக பாடல் அப்டேட்டை தந்துள்ளார் போனிகபூர். இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்