குப்பை தொட்டிக்கு சென்ற படம்.. தொடரும் மனஸ்தாபம்? பாலாவின் 25 ஆண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்காத விக்ரம்
பாலாவை நம்பி கொடுக்கப்பட்டு குப்பை தொட்டிக்கு சென்ற படம், விக்ரமுக்கு மனஉளைச்சலை தந்தது. இதன் காரணமாக பாலாவிடம் மனஸ்தாபம் தொடர்ந்து வருவதாக தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியுள்ளார்.
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. அப்போது இயக்குநர் பாலா சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக பாலா 25 நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சூர்யா, சிவகுமார், சிவகார்த்திகேயன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பாலாவின் முதல் பட ஹீரோவும், அவரது நண்பருமான விக்ரம் பங்கேற்கவில்லை. முக்கியமான இந்த நிகழ்வில் விக்ரம் பங்கேற்காதது குறித்து பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வரும் நிலையில், பிரபல தயாரிப்பாளரான பாலாஜி பிரபு விக்ரம் - பாலா இடையே ஏற்பட்ட மனஸ்தாபம் குறித்து பேசியுள்ளார்.
நன்றி: அரம்நாடு
இதுதொடர்பாக தயாரிப்பாளர் பாலாஜி பிரபு அரம்நாடு என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "பாலாவின் முதல் படம் சேது மிக பெரிய அளவில் பேசப்பட்டது. விக்ரம் என்ற நடிகரை சீயான் விக்ரமாக மாற்றி அவருக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி கொடுத்தவர் பாலா.
பாலாவை அழைத்துக்கொண்டு சிவகுமார் சார் எங்கள் அலுவலகத்துக்கு வந்தார். நந்தா படத்தை ஆஸ்கர் மூவிஸ் தயாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதைக்கேட்டு அப்பாவும் சம்மதம் தெரிவிக்க படம் தொடர்பான டிஸ்கஷன்கள் போனது.
பாலாவால் கைவிடப்பட்ட நந்தா படம்
அப்போது படத்தின் கதையை பாலாவிடம் அப்பா கேட்டபோது. என் மனசில் என்ன இருக்கிறது என்பது எனக்கு தெரியாது, யோசிட்டு இருக்கேன் என்றார். எவ்வளவு பட்ஜெட் ஆகும் என கேட்டபோது, என்னால் எதுவும் சொல்ல முடியாது, எத்தனை நாள் ஷுட்டிங் செல்வேன் என தெரியாது. மனசில் படுவதை எடுப்பேன் என்று சொன்னார்.
இதைக்கேட்டு சிவகுமார் சாரிடம் போன் செய்து நான் அனைத்தையும் பிளான் போட்டு செய்பவன் என சொல்லி இந்த படம் செட்டாகாது என சொல்லிவிட்டார். பாலா தனது படங்களின் ஹீரோக்களின் உடல் உறுப்புகளில் ஏதாவது மாற்றம் செய்வதை வழக்கமாக கொண்டிருப்பார். மொட்டை அடிப்பது, மாறு கண்ணால் பார்ப்பது, பற்களில் கரை அடிப்பது என ஏதாவது வித்தியாசமாக செய்வார். அப்படி அவர் ஹீரோக்களை வருத்திய படங்களும் ஓடியுள்ளது. பாலாவின் லேட்டஸ்ட் படங்கள் நன்கு பேசப்பட்டாலும், வணிக ரீதியாக போகவில்லை
விக்ரம் - பாலா பஞ்சாயத்து
விக்ரம் தனது மகனை ஹீரோவாக ஆக்க நினைக்கிறார். சேது படம் மூலம் தனக்கும், நந்தா படம் சூர்யாவுக்கு லைஃப் கொடுத்தார் என்பதால் தனது மகன் துருவையும் வித்தியாசமாக புரொஜெக்ட் செய்து காட்டுவார் என நம்பியுள்ளார்.
ஆனால் எப்போதும் தான் உருவாக்கும் கதையை படமாக எடுக்ககூடியவர். ஆனால் அவரிடம் தெலுங்கு கதை ரீமேக் செய்ய கொடுத்து, அதை தனக்கு தெரிந்த வரை மாடர்னாக எடுத்தார். நடிகர்களை அழகாக காட்டாமல் அஷ்டகோணம் செய்து காட்டுவது தான் பாலாவின் ஸ்டைல்.
பாலா மேல் முழு நம்பிக்கையால் துருவ் நடித்த படத்தை பாலாவிடம் ஒப்படைத்ததோடு, ஷுட்டிங்கில் என்ன நடக்கிறது என்று கூட பார்க்காமல் இருந்துள்ளார் விக்ரம். சினிமா துறையிலேயே புகழ் பெற்ற இயக்குநர் இயக்கி காபி ரெடியாகி, பின்னர் வேண்டாம் என குப்பை தொட்டியில் போட்டார்கள். அந்த படத்தால் ஏற்பட்ட மனஸ்தாபம் பாலாவிடம் இன்னும் விக்ரமுக்கு தொடர்கிறது.
ஈகோ பிரச்னையால் விலகிய சூர்யா
சிவகுமார் மீது நல்ல மரியாதை பாலாவுக்கு உண்டு. விக்ரம் மகன் படம் கைவிடப்பட்டு, கெட்ட பெயர் ஏற்பட்ட நேரத்தில் வாய்ப்பு இல்லாமல் இருந்த பாலாவுக்கு ஒரு படம் பண்ணலாம் என சூர்யாவிடம் சிவக்குமார் தான் சொல்லியுள்ளார். அப்போது வணங்கான் படத்தை சொந்தமாக தயாரிக்க முடிவு செய்த நிலையில், ஷுட்டிங்கும் தொடங்கியது.
திருநெல்வேலி பக்கம் நடந்த ஷுட்டிங்கில் சூர்யா அங்கும் இங்குமாக ஓடவிட்டார். அப்போது ஸ்பாட்டில் வைத்து பாலாவிடம் கதை பற்றி சூர்யா கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதன் காரணமாக வணங்கான் படத்திலிருந்து வெளியேறினார்.
இப்போது படம் அருண் விஜய்யை வைத்து வணங்கான் உருவாகியுள்ளது. படம் விரைவில் வெளியாகி நன்றாக ஓட வேண்டும். ஆனால் சினிமாவில் நிரந்திர சண்டையும் கிடையாது, நிரந்திரமாக கட்டிப்பிடித்து நட்பு பாராட்டவும் மாட்டோம்" என்றார்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.
டாபிக்ஸ்