ஜீவன் உண்மையிலேயே திருட்டுப்பையன் தான்.. செல்வா செய்த துரோகம்.. தயாரிப்பாளர் பாலாஜி பிரபு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஜீவன் உண்மையிலேயே திருட்டுப்பையன் தான்.. செல்வா செய்த துரோகம்.. தயாரிப்பாளர் பாலாஜி பிரபு

ஜீவன் உண்மையிலேயே திருட்டுப்பையன் தான்.. செல்வா செய்த துரோகம்.. தயாரிப்பாளர் பாலாஜி பிரபு

Marimuthu M HT Tamil
Nov 15, 2024 02:56 PM IST

ஜீவன் உண்மையிலேயே திருட்டுப்பையன் தான்.. செல்வா செய்த துரோகம் என தயாரிப்பாளர் பாலாஜி பிரபு குறித்த பேட்டியைக் காணலாம்.

ஜீவன் உண்மையிலேயே திருட்டுப்பையன் தான்.. செல்வா செய்த துரோகம்.. தயாரிப்பாளர் பாலாஜி பிரபு
ஜீவன் உண்மையிலேயே திருட்டுப்பையன் தான்.. செல்வா செய்த துரோகம்.. தயாரிப்பாளர் பாலாஜி பிரபு

தோட்டா படம் தோல்விக்குப் பின் பல கசப்பான நிகழ்வுகள் உள்ளன. தலைவாசல், அமராவதி ஆகியப் படங்களை இயக்கிய இயக்குநர் செல்வாவின் உதவி இயக்குநராக புதையல் என்கிற படத்திலும், சிஷ்யா படத்திலும் நான் பணியாற்றியிருக்கிறேன். அவருடைய நட்பு தொடர்புகொண்டு இருந்தது. பின், 2005ஆம் ஆண்டு, அவரது அலுவலகத்துக்கு என்னை அழைத்தார், இயக்குநர் செல்வா சார்.

அப்போது தான் கொஞ்சம் பண நெருக்கடியில் இருப்பதால், தனக்கு ஒரு லட்சம் ரூபாய் வேண்டும் என்று கேட்டார். அதன்பின், நானும் அப்பாவிடம் பேசி, ஒரு லட்சம் ரூபாயை பணத்தை வாங்கிட்டுப்போய் கொடுத்துட்டு வந்துட்டேன். பிறகு ஒரு வாரம் கழிச்சு, நான் அவரை மீட் பண்ணும்போது, பாலாஜி நாம் ஒரு புது படம் தொடங்கலாமா என தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கேட்டார். உடனே, அந்த முடிவை நான் எடுக்க முடியாது என்பதால், அப்பாவிடம் வந்து கேட்டேன். என் அப்பாவும் அவர் நல்ல இயக்குநர் என நினைத்து ஒத்துக்கிட்டார். மறுநாள், அவரை அப்பாவின் அலுவலகத்துக்கு வரவழைத்தோம்.

ஜீவன் இப்படி தான் தெரியும்:

அப்போது பரத்தை வைத்து பண்ணலாமான்னு செல்வா சார் கேட்டார். ஏனென்றால், அப்போது காதல் படத்தின் ஹிட்டுக்கு அப்புறம் அவர் பலருக்குத் தெரிந்தவராக இருந்தார். அப்போது கொஞ்சம் சரியாக வரல.

பிறகு, நான் தான் ஜீவனை அப்பாவிடம் பரிந்துரை செய்கிறேன். அப்போது, ஜீவன் ‘காக்க காக்க’ என்ற ஒரு படத்தில் வில்லனாக செய்திருக்கிறார். தவிர, அவர் என்னோட தம்பியோட கிளாஸ்மேட். அவங்க அண்ணன் கெளதம் என் கூடப் படிச்சவர். அதனால் ஃபேமிலி ஃபிரெண்ட்ஸ். அவரோட அப்போதைய பெயர், விக்கி.

அப்பாவும் என்னுடைய பரிந்துரைக்கு ஓ.கே.சொல்லிட்டார். ஜீவனுக்கு நான்கு லட்ச ரூபாய் சம்பளம் பேசி, பத்திரத்தில் கையெழுத்துப்போட்டுட்டார். அடுத்து ப்ரியாமணி போட்டோவை ஜான்ஸன் பி.ஆர்.ஓ. காட்டினார். பிறகு, செல்வா சாரும் ப்ரியாமணிக்கு ஓகே சொல்லிட்டாங்க. அப்போது அவரை நேரடியாக வரவழைத்து, ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம்பேசி, 50 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தோம். இப்படிதான், தோட்டா படத்தின் முக்கிய நடிகர்கள் முடிவு ஆனாங்க.

எங்களோட படத்தயாரிப்புப் பணிகள் அறிந்து, ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் சார், ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில், அதாவது, படத்துக்குண்டான பட்ஜெட்டை நான் கொடுத்திடுறேன்கிற மாதிரி பேசி, ஒரு லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்திட்டார். அப்போது நாங்கள் தோட்டா படத்துக்கு கொடுத்த பட்ஜெட் 1.25 கோடி ரூபாய்.

ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் செய்த திருகுவேலை:

படம் தொடங்கப்போகிறோம். அப்போது, அவரைப் போய் பார்க்கும்போது, நான் வேறு பெரிய படங்கள் செய்திட்டு இருக்கேன் சார். நீங்கள் தற்போதைக்கு ஃபைனான்ஸ் எல்லாம் வாங்கி, இதை முடிங்க, அப்படின்னு சொல்கிறார். மேலும், நான் இரண்டாவது செட்யூலில் கலந்துக்கிறேன் அப்படி சொல்கிறார். அடுத்து 18 நாட்கள் வெளியே பணம் வாங்கி செய்தோம். பின் இரண்டாவது செட்யூலுக்குப் போகும்போதும், உதவி செய்யலை.

ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனுக்கு முன்னாடியே, நாங்கள் ஆஸ்கர் மூவிஸ் அப்படிங்கிற பேனரில் இயக்குறது அவருக்குப் பிடிக்கல. ஆனால், கூட பயணிப்பதுபோலே, உதவி செய்யமாட்டியிறார். இதனால், 7 முதல் 8 மாதம் படம் டிராப் ஆகிடுச்சு. இதற்கிடையே ஜீவன், நான் அவன் இல்லைன்னு படம் பண்ணி ஹிட், திருட்டுப்பயலே பண்ணி ஹிட். பிரியாமணி, பருத்திவீரன் படத்தில் ஹிட். செல்வாவும் நான் அவன் இல்லை படம் இயக்கி ஹிட். அப்போது சில நண்பர்கள் நிதியுதவி பண்ண வருகிறார்கள். நான் திரும்பவும் செல்வா சாரிடம் போய், ‘தோட்டா’ படத்தை டேக் ஆஃப் செய்ய கேட்கப்போகிறேன். எந்தப் படம் அப்படின்னு கேட்கிறார்.

அப்பாவை பார்க்க இயக்குநர் செல்வா மறுத்துவிட்டார். 18 நாட்கள் முடிந்தபிறகு, 60 லட்சம் ரூபாய் செலவாகிடுச்சுன்னு சொல்லும்போது, நீங்கள் என்னவேண்டுமென்றால் பண்ணுங்க அப்படின்னு சொல்லிட்டார். அதன்பின், ஜீவனும் செல்வாவும் பேசி வைச்சுக்கிட்டு, படம் பண்ணக்கூடாதுன்னு முடிவில் இருக்காங்க. ஜீவனிடம் தனிப்பட்ட முறையில்போய்ப் பேசும்போது ரூ.2 கோடி சம்பளம் கேட்கிறார். படம் பண்ணக்கூடாது என்பதற்காக. வேறு வழியில்லாமல், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஜீவன் மற்றும், செல்வா மேல் புகார்கொடுத்திட்டோம். சிவசக்தி பாண்டியன் சார் மற்றும் சங்கத்தின் முயற்சியால், கால்ஷீட் வாங்குறோம். இதனால், இரண்டுபேரும் கோபமாகி, எவ்வளவு செலவு இழுத்துவிட முடியுமோ, அவ்வளவு இழுத்துவிட்டாங்க. ஐந்து பாட்டு எடுக்க மட்டும் 1.25 கோடி ரூபாய் இழுத்துவிட்டாங்க. இப்படி படத்தை இழுத்து இழுத்து ரூ.4 கோடிக்குக் கொண்டு வந்திட்டாங்க. ரூ.3 கோடிக்கு தான் வியாபாரம் ஆச்சு. ஒரு கோடி ரூபாய் அந்தப்படத்தில் நஷ்டம்’’ என பாலாஜி பிரபு கூறி முடித்தார்.

நன்றி: மீடியா சர்க்கிள் யூட்யூப் சேனல்

பொறுப்புத்துறப்பு: இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.