விஜயகாந்திடமும் திமிர்த்தனம் காட்டிய தங்கர்பச்சான்.. ஷாக் டிரிட்மென்ட் கொடுத்த விஜயகாந்தின் நண்பர்கள்.. பாலாஜி பிரபு
விஜயகாந்திடமும் திமிர்த்தனம் காட்டிய தங்கர்பச்சான்.. ஷாக் டிரிட்மென்ட் கொடுத்த விஜயகாந்தின் நண்பர்கள் என தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தகவல் தெரிவித்தார்.
விஜயகாந்திடமும் திமிர்த்தனம் காட்டிய தங்கர் பச்சானும், அவருக்கு விஜயகாந்த் கொடுத்த வைத்தியத்தைப் பற்றியும் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மீடியா சர்க்கிள் யூட்யூப் சேனலுக்கு தயாரிப்பாளர் பாலாஜி பிரபு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘’ சின்னபுள்ள என்கிற படம் சின்னிஜெயந்த் மற்றும் ரேவதி நடிப்பில் வந்துச்சு. இந்த படம் சின்ன பட்ஜெட்டில் பண்ணப்பட்ட படமாக இருந்தாலும் பேசப்பட்ட படமாக இருந்துச்சு. பெரிய பொருளாதார வெற்றிப்படம்னு சொல்லமுடியாது. இந்தப் படத்தில் அந்த இயக்குநர் பெயர் கே. பாஸ்கரன்னு வரும். சின்னபுள்ள படம் சரியாகப் போகாததால், சென்டிமென்ட்டாக பாரதி எனப் பெயரை மாற்றிக்கொண்டு, மறுமலர்ச்சி கதையை இயக்க முயற்சிக்கிறார். அப்போது அந்தப் படத்தின் கதை ராசு படையாச்சி.
இந்தக் கதையை அவர் படமாக்கும் முன்பே நான் கேட்டிருக்கிறேன். அந்தக் கதையை செதுக்கி செதுக்கி எழுதியிருப்பார். சீன் பை சீன் அழகாக விவரிப்பார். இந்தக் கதையை விஜயகாந்த் சாரை வைத்து எடுக்கணும்னு நினைக்கிறார். இரண்டு வருஷமாக அவரது வீடு, அலுவலகம் என வாசலில் போய் நிற்பார். நான் சின்னபுள்ளனு ஒரு படம் எடுத்திருக்கேன் சார்னு சொன்னால்கூட, வாட்ச் மேன் கூட, விஜயகாந்த் சாரை பார்க்க அனுமதிக்கிறது இல்லை.
விஜயகாந்தை வைத்து படமெடுக்கும் வைராக்கியத்தை நிறைவேற்றிய இயக்குநர்:
அந்தக் கதைக்கு ரொம்ப ஆளுமையான ஹீரோ வேணும். அதனால் தொடர்ந்து விஜயகாந்த் சார் வீடு, அலுவலகம்னு போய் நின்று முயற்சிக்கிறார். ஒரு நாள் விஜயகாந்த் சார் வாட்ச் மேன், அவரை வீட்டுக்குள் அனுமதிக்காமல் கீழே பிடிச்சு தள்ளிவிட்டிருக்கிறார். அப்போது ரோட்டில் இருந்து எழுந்த அந்த டைரக்டர் இதே விஜயகாந்த் சாரை வைத்துப் படம் பண்ணுவேன்னு ஒரு வைராக்கியத்தோடு எழுந்துபோயிட்டார். அதன்பின், தான்,அப்படி ஒரு ஆளுமையான நடிகர்னு யோசிக்கும்போது அவரது மனதில் வந்தவர் தான், மம்முட்டி சார்.
அவரை எப்படியோ சூட்டிங் ஸ்பாட்டில் கதைசொல்லி இம்ப்ரெஸ் செய்திட்டார், டைரக்டர் பாரதி. அப்படி எடுத்த படம் தான், மறுமலர்ச்சி. சீன் பை சீன் இந்த படம் நல்ல படம் என்று பலர் கவனிக்குறாங்க. அந்தப் படத்துடைய இயக்குநரை தேடுறாங்க. நான்கைந்து நடிகர்கள்கிட்டயிருந்து படம் செய்யலாம்ன்னு முயற்சிகள் நடக்குது. ஆனால், டைரக்டர் பாரதி சாருக்கு பிடிக்கல.
ஆச்சரியமாக விஜயகாந்த் சார் ஆபிஸில் இருந்து போன் வருது. அன்றைக்கு விஜயகாந்த் சாருக்குப் படம் பண்ணனும் வைராக்கியம் எடுத்தோம். இப்போது போன் வருது என நினைத்துக்கொண்டே, பேசுறார், இயக்குநர் பாரதி. கதையிருந்தால் சொல்லச் சொல்லி கேட்குறாங்க.
நான் வந்து பார்க்குறேன்னு சொல்கிறார், டைரக்டர் பாரதி. எந்த வீட்டின் வாசலில் இருந்து துரத்தி அடிக்கப்பட்டாரோ, அந்த வீட்டுக்குள் காரில் போய் இறங்குகிறார். அப்ப சொன்ன கதை தான், கள்ளழகர். அடுத்து விஜயகாந்த் சார், படம் தயாரிக்க ரோஜா கம்பைன்ஸ் காஜா மொய்தீனை பார்க்கச் சொல்கிறார். அப்போது அவரிடம்போய், சார் நான் என் முதல் பட தயாரிப்பாளருக்குத்தான் படம் செய்வேன்னு மரியாதை நிமித்தமாகச் சொல்லிட்டு வந்துவிடுகிறார். இந்த விஷயம் விஜயகாந்த் சார் காதுக்குப் போய், தயாரிப்பாளர் ஹென்றிக்கு கால்ஷீட் தருகிறார். கள்ளழகர் அருமையான ஸ்கிரிப்ட். ஆனால், படம் ஆவரேஜாக தான் போச்சு. மறுமலர்ச்சி, கள்ளழகர் ஆகிய இரண்டு படங்களிலும் தங்கர் பச்சான் தான் ஒளிப்பதிவாளர்.
கள்ளழகர் சூட்டிங் ஸ்பாட்டில் தங்கர்பச்சான் செய்த சேட்டை:
கள்ளழகர் படத்தினுடைய பாடல்காட்சி வடமாநிலத்தில் எடுக்கப்போறாங்க. அப்போது விஜயகாந்த் சார் காதில் விழுற மாதிரி, ‘ இந்த தமிழ் சினிமாவில் தான், 60 வயசுக்கும் மேல் இருக்குறவங்களை தான் ஹீரோவாகப் போட்டு எடுக்குறாங்க. இவங்க எல்லாம் ஹீரோன்னா அவங்களை எடுக்க ஒரு மூடே வரமாட்டியுதுன்னு சொல்லியிருக்கார்’, உடனே அதை கண்டுக்காம விஜயகாந்த் சார் போய்ட்டார்.
அடுத்து அந்த யூனிட், குலு மணாலி போகுது. கண்ணாடி கிளாஸில் செய்யப்பட்ட ரூமில் தங்கர் பச்சான் தூங்கிட்டு இருந்திருக்கார். நைட் கரண்ட் ஆஃப் செய்துட்டு, ஒரு பத்து பதினைச்சு பேர் கம்பளியைப் போட்டுக்கிட்டு, தங்கர்பச்சான் ரூமை தட்டியிருக்காங்க, ‘கதவைத் திறங்க’னு பயமுறுத்தியிருக்காங்க. பின்னாடி வந்தும் கதவைத் தட்டியிருக்காங்க. இவர் கதவையே திறக்கலையாம். இப்படி ஒரு இரண்டுமணி நேரம் போயிருக்கு. மறுநாள் சூட்டிங் ஸ்பாட்டில், ‘என்ன தங்கர் நல்லா தூங்குனீங்களான்னு’ கேட்டிருக்கார். உடனே, தெரியாமல் வார்த்தையை விட்டுட்டேன் ஸாரி கேட்டிருக்கார், தங்கர். உடனே போங்க போங்கனு சொல்லிட்டார், விஜயகாந்த்’’ என முடித்தார், தயாரிப்பாளர் பாலாஜி பிரபு.
நன்றி: மீடியா சர்க்கிள்
டாபிக்ஸ்