‘டாட்டா காட்டிய விஜய்.. 10 லட்சம் கேட்ட அஜித்.. விரட்டியடிக்கப்பட்ட சூர்யா..பிதற்றி வந்த பிரசாந்த்’- ஜீன்ஸ் கை வந்த கதை!
‘நாங்கள் அஜித்தை தொடர்பு கொண்டு படம் எடுக்க பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்பொழுது அஜித் படத்திற்கு சம்பளமாக 10 லட்சம் கேட்டார். அவர் கேட்ட சம்பளம் எங்களுக்கு மிகவும் அதிகமாக தெரிந்தது. - பாலாஜி பிரபு!
பிரசாந்திற்கு ஜீன்ஸ் படம் கிடைத்த கதையை பாலாஜி பிரபு பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, ‘விஷ்ணு படத்திற்கு பிறகு விஜயை வைத்து நாங்கள் ஒரு படம் எடுப்பதாக இருந்தது. ஆனால், காலப்போக்கில் அது தள்ளிக்கொண்டே சென்று கொண்டிருந்தது.
இந்த நிலையில் நேராக எஸ்.ஏ சந்திரசேகரிடம் நானும் எங்கள் அப்பாவும் சென்று, விஜயின் தேதி எங்களுக்கு மிகவும் தூரமாக கிடைக்கிறது. ஆகையால் அதை கொஞ்சம் சரி செய்து கொடுக்குமாறு கேட்டோம். உடனே அவர் விஜய் மாதிரியே தற்போது ஒரு பையன் வளர்ந்து வருகிறான். அவன் பெயர் அஜித்;
அவனை வைத்து நீங்கள் இந்த இடைவெளியில் ஒரு படத்தை எடுத்து விட்டு வாருங்கள் என்று சொன்னார். இதையடுத்து நாங்கள் அஜித்தை தொடர்பு கொண்டு படம் எடுக்க பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்பொழுது அவர் படத்திற்கு சம்பளமாக 10 லட்சம் கேட்டார். அவர் கேட்ட சம்பளம் எங்களுக்கு மிகவும் அதிகமாக தெரிந்தது.
சூர்யாவின் முயற்சி
அவர் பல கஷ்டங்களில் இருந்ததால், அந்த கஷ்டங்களை எல்லாம் இந்த பணத்தை வைத்து சரி செய்து விடலாம் என்று திட்டமிட்டு இருந்தார். ஆனால் அவ்வளவு பணத்தை எங்களால் அவருக்கு அப்போது கொடுக்க முடியவில்லை. இதையடுத்து நாங்கள் வேறு நடிகரை முயற்சி செய்யலாம் என்று சொல்லி, சூர்யாவை முயற்சி செய்தோம். சூர்யாவும் அந்த படத்திற்கான ஆடிஷனுக்கு வந்திருந்தார்.
ஆனால் சில காரணங்களால் அவர் அந்த ஆடிஷனில் தேர்வாகவில்லை. அதனை தொடர்ந்து அப்போது மார்க்கெட் சரிந்து இருந்த பிரசாந்தை நாங்கள் முயற்சி செய்தோம். பிரசாந்த் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். சம்பளமும் பேசப்பட்டது. ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் படத்திற்கான பூஜையில் பிரசாந்த் கலந்துகொள்ளவில்லை. இது அப்பாவுக்கு கடும் கோபத்தை உருவாக்கிவிட்டது. இருப்பினும், அன்றைய நாள் பூஜையை நடத்தினார்.
2 நாட்கள் கழித்து பிரசாந்தும், அவரது தந்தை தியாகராஜனும் வீட்டிற்கு வந்தார்கள். வந்தவர்கள் பிரசாந்துக்கு ஜீன்ஸ் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பிரசாந்தின் கால்ஷீட்டை கிட்டதட்ட 3 வருடங்கள் சங்கர் கால்ஷீட் கேட்டிருக்கிறார். அந்த மூன்று வருடங்களிலும், வெளிநாடுகளிலும் படப்பிடிப்புகள் நடக்க இருக்கிறது.
தியாகராஜன் வைத்த கோரிக்கை
அதனால் நம்முடைய படத்தை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு, இந்த படத்தில் பிரசாந்த் நடிப்பதற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டார் அத்தோடு மட்டுமில்லாமல், இப்போது போடப்பட்ட பூஜைக்கான செலவு 2 லட்சத்தோடு சேர்த்து கூடுதலாக 2 லட்சம் சேர்த்து மொத்தம் 4 லட்சமாக உங்களுக்கு தந்து விடுகிறேன். பிரசாந்தை உங்களது பையன் போல நினைத்து இந்த உதவியை செய்ய வேண்டும் என்று தியாகராஜன் கேட்டுக்கொண்டார்.
இதை கேட்ட அப்பா நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் பணத்திற்காக இதை நான் செய்யவில்லை; நீங்கள் பிரசாந்த் என் மகன் போல் நினைத்து செய்யுங்கள் என்று சொல்லும்பொழுது, எனக்கு அந்த கூடுதல் 2 லட்சம் தேவையில்லை; செலவான 2 லட்சத்தை மட்டும் நீங்கள் கொடுத்து விடுங்கள் என்று சொன்னார்; அதன் பின்னர் தான் பிரசாந்த் ஜீன்ஸ் படத்தில் நடித்தார்
டாபிக்ஸ்