சந்தானத்திற்கு தனி காமெடி ராக்.. அமைதியாக சுந்தர் சி பார்த்த வேலை.. தியேட்டரை விட்டு வெளியேறிய வடிவேலு - பாலாஜி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சந்தானத்திற்கு தனி காமெடி ராக்.. அமைதியாக சுந்தர் சி பார்த்த வேலை.. தியேட்டரை விட்டு வெளியேறிய வடிவேலு - பாலாஜி!

சந்தானத்திற்கு தனி காமெடி ராக்.. அமைதியாக சுந்தர் சி பார்த்த வேலை.. தியேட்டரை விட்டு வெளியேறிய வடிவேலு - பாலாஜி!

Kalyani Pandiyan S HT Tamil
Dec 09, 2024 08:51 PM IST

பழைய வடிவேலுவை அவரால் மீண்டும் கொண்டுவர முடியவில்லை என்பதே இங்கு நிதர்சனமான உண்மை. அரண்மனை படம் என்று நினைக்கிறேன் - பாலாஜி!

சந்தானத்திற்கு தனி காமெடிட் ராக்.. அமைதியாக சுந்தர் சி பார்த்த வேலை.. தியேட்டரை விட்டு வெளியேறிய வடிவேலு - பாலாஜி!
சந்தானத்திற்கு தனி காமெடிட் ராக்.. அமைதியாக சுந்தர் சி பார்த்த வேலை.. தியேட்டரை விட்டு வெளியேறிய வடிவேலு - பாலாஜி!

இது குறித்து அவர் பேசும் போது, "சுந்தர் சி யும், நடிகர் வடிவேலுவும் பல்வேறு படங்களில் இணைந்து பணியாற்றினர். இதற்கிடையே வடிவேலு அரசியலில் இறங்க, அதில் அவருக்கு எதிர்பார்த்த பலன் இல்லை. கிட்டத்தட்ட பத்து வருடங்கள் இடைவெளி எடுத்துக்கொண்டார்.

ஒருவர் மார்க்கெட்டில் இருக்கும் பொழுது, தன்னுடைய மார்க்கெட்டை சரிவர பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், வடிவேலுக்கு அந்தப் பத்து வருட இடைவெளி அதை கொடுக்கவில்லை. இப்போது அவர் மீண்டும் நடிக்க வந்து என்னவெல்லாம் முயற்சி செய்து பார்க்கிறார். ஆனால், பழைய வடிவேலுவை அவரால் மீண்டும் கொண்டுவர முடியவில்லை என்பதே இங்கு நிதர்சனமான உண்மை. அரண்மனை படம் என்று நினைக்கிறேன்.

அமைதியாக செய்தார்.

அந்த படத்தில் வடிவேலுவை சுந்தர் சி கமிட் செய்திருந்தார். ஆனால், அதில் இன்னொரு வேலையையும் அவர் அமைதியாக செய்தார். அது என்னவென்றால், வடிவேலுவின் காமெடிகள் ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க, இன்னொரு ட்ராக்கில் சந்தானத்தை வைத்து மற்றொரு காமெடி டிராக்கை அவர் எழுதி எடுத்துவிட்டார். இது வடிவேலுக்கு தெரியாது. அந்தப் படத்தை வடிவேலு திரையில் பார்க்கும்பொழுது அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுவிட்டது.

கோபத்தின் உச்சிக்கு

இதையடுத்து கோபத்தின் உச்சிக்கு சென்ற அவர், படத்தின் பாதியிலேயே வெளியே கிளம்பி சென்று விட்டார். அதில், என்னை காமெடியனாக கூப்பிட்டு விட்டு, இன்னொரு காமெடியை வைத்து ட்ராக் எழுதி எடுத்தால் அதை எப்படி என்னால் ஒத்துக்கொள்ள முடியும். என்பதுதான் வடிவேலுவின் வாதம். வடிவேலு இன்று அப்படி அல்ல, ஆரம்பத்திலிருந்து அவர் அப்படியானவர்தான். நீங்கள் விவேக் படங்களை எடுத்துப் பார்த்தால்,.அதில் எக்கச்சக்க நடிகர்கள் இருப்பார்கள்.

ஆனால்,வடிவேலு படத்தில் காமெடி தொடர்பான காட்சிகளில் அவரின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும். எவ்வளவு பெரிய கூட்டம் இருந்தாலும், அதில் தான் தனியாக தெரிய வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார் வடிவேலு.

அவர் ஒரு சிறந்த கலைஞன் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது. ஆனால், அவர் யாருக்கும் தானாக முன்வந்து உதவி செய்ய மாட்டார். உன்னுடன் இருப்பவர்களை பார்த்துக் கொள்ள மாட்டார். " என்று பேசினார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.