டேய் அஜித் இங்க வாடா... ஒருமையில் பேசி அசிங்கப்படுத்திய வடிவேலு.. தலைக்கு ஏறிய தன்மான பிரச்சினை.. - பாலாஜி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  டேய் அஜித் இங்க வாடா... ஒருமையில் பேசி அசிங்கப்படுத்திய வடிவேலு.. தலைக்கு ஏறிய தன்மான பிரச்சினை.. - பாலாஜி

டேய் அஜித் இங்க வாடா... ஒருமையில் பேசி அசிங்கப்படுத்திய வடிவேலு.. தலைக்கு ஏறிய தன்மான பிரச்சினை.. - பாலாஜி

Kalyani Pandiyan S HT Tamil
Dec 10, 2024 08:26 AM IST

ராஜா படத்தில் நடந்த சம்பவம் இது குறித்து அவர் பேசும் போது, "வடிவேலுவும், அஜித்தும் பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்திருக்கிறார்கள். ஆனால், ராஜா படத்தில் அவர்கள் இணைந்து நடிக்கும் பொழுது, படப்பிடிப்பில் வடிவேலு அஜித்தை இங்கே வாடா... அங்கே போடா... என்று பலமுறை ஒருமையில் பேசி இருக்கிறார். - பாலாஜி

டேய் அஜித் இங்க வாடா... ஒருமையில் பேசி அசிங்கப்படுத்திய வடிவேலு.. தலைக்கு ஏறிய தன்மான பிரச்சினை.. - பாலாஜி
டேய் அஜித் இங்க வாடா... ஒருமையில் பேசி அசிங்கப்படுத்திய வடிவேலு.. தலைக்கு ஏறிய தன்மான பிரச்சினை.. - பாலாஜி

ராஜா படத்தில் நடந்த சம்பவம்

இது குறித்து அவர் பேசும் போது, "வடிவேலுவும், அஜித்தும் பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்திருக்கிறார்கள். ஆனால், ராஜா படத்தில் அவர்கள் இணைந்து நடிக்கும் பொழுது, படப்பிடிப்பில் வடிவேலு அஜித்தை இங்கே வாடா... அங்கே போடா... என்று பலமுறை ஒருமையில் பேசி இருக்கிறார்.

கோபத்தில் அஜித்

இதை அமைதியாக முதலில் பார்த்துக் கொண்டிருந்த அஜித்திற்கு ஒரு கட்டத்தில், வடிவேலுவின் செயல்பாடுகளில் அதிருப்தி ஏற்பட்டுவிட்டது. இதையடுத்து அவர் இயக்குநரிடம் சென்று வடிவேலுவின் செயல்பாடுகள் சரியில்லை. அவரை கொஞ்சம் சரி செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்தார்.

இதனையடுத்து இயக்குநர் வடிவேலுவிடம் சென்று, சார் நீங்கள் பேசுவது ஹீரோவுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

அதனால் கொஞ்சம் உங்களது செயல்பாடுகளை குறைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.

அஜித்தை தொடர்ந்து வசை பாடி

கிட்டத்தட்ட 200, 300 பேர் இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு ஹீரோவை அப்படி ஒருமையில் பேசினால் யார் என்றாலும் கோபம் வருவது இயல்புதான். வடிவேலு படப்பிடிப்பில் சீனுக்கு தேவையில்லாத வகையில் எல்லாம் அஜித்தை தொடர்ந்து வசை பாடி இருக்கிறார். அன்றைய தினமே அஜித் இனிமேல் வடிவேல் உடன் இணைந்து பணியாற்றக் கூடாது என்று முடிவு செய்துவிட்டார்.

அதனை தொடர்ந்து அவர் வடிவேலுவை தன்னுடைய படங்களில் நடிக்காமல் பார்த்துக் கொண்டார். ரஜினிகாந்த் அப்படி அல்ல, ரஜினிகாந்த் தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்றாலும் அவர் மீது அவருக்கு அளவுக்கு அளவுக்கதிகமான நம்பிக்கை கிடையாது.

ரஜினிக்கு இல்லாத தைரியம்

அந்த காலத்தில் ட்ரெண்டிங்கில் யார் நடிகர்களாக கலக்கிக் கொண்டிருக்கிறார்களோ அவர்களை தன்னுடைய படங்களில் இருக்குமாறு பார்த்துக் கொள்வார். எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமென்றால், தேர்தல் சமயம் ஒன்றில் மனோரமா ரஜினிக்கு எதிராக பயங்கரமாக பேசினார். இருப்பினும் அதனை ரஜினி கண்டுகொள்ளாமல் அருணாச்சலம் திரைப்படத்தில் மனோரம்மாவை நடிக்க வைத்தார்.

அதுதான் ரஜினியின் கேரக்டர். ஆனால் அஜித் அப்படி கிடையாது. அந்த தன்னம்பிக்கையின் வழியில் தான் தன்னுடைய ரசிகர் மன்றத்தை கலைத்தார். ஆனாலும் அவருக்கு இன்றும் மிகப்பெரிய கூட்டம் இருக்கிறது." என்று பேசினார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.