தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Producer B Nagi Reddy 20th Birth Anniversary Is Being Observed Today.

Nagi Reddy: தொட்டதெல்லாம் வெற்றி.. தயாரிப்பாளர் நாகிரெட்டியின் சிறந்த நட்பு

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 25, 2024 06:30 AM IST

தயாரிப்பாளர் பி. நாகிரெட்டியின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

தயாரிப்பாளர் பி. நாகிரெட்டி
தயாரிப்பாளர் பி. நாகிரெட்டி

ட்ரெண்டிங் செய்திகள்

நாகிரெட்டியின் தந்தை வெங்காயம் வியாபாரம் செய்யக்கூடியவர். சிறிய அளவில் கிடையாது பெரிய அளவில் ஏற்றுமதி இறக்குமதி செய்யக்கூடியவர். தனது 18 வயதில் நாகிரெட்டி தந்தையும் தொழிலில் ஈடுபட்டார் ஒருமுறை வெங்காயம் ஏற்றுச் சென்ற கப்பல் கடலில் மூழ்கி மிகப்பெரிய நட்டத்தை சந்தித்தார். அதற்குப் பிறகு ஒரு அச்சகத்தை தொடங்கினார். அதில் ஆந்திர ஜோதி என்ற மாத இதழை வெளியிட்டார்.

தெலுங்கில் குழந்தைகளுக்காக சொந்த மாமா என்ற இதழை தொடங்கினார். அதன் பின்னர் அதனை அம்புலி மாமா என்ற பெயரில் தமிழில் வெளியிட்டார். அது மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அம்புலி மாமா என்ற இதழில் எழுத்தாளர் சக்கரபாணி கதை எழுதி வந்தார். அப்போது நாகிரெட்டியோடு அவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.

சினிமாவில் களமிறங்க நினைத்த இருவரும் வடபழனி அருகே வாகினி ஸ்டுடியோவை தொடங்கினார்கள். இங்கு எடுக்கப்பட்ட படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியை கண்டன. அதற்குப் பிறகு நாகிரெட்டி விஜயா ப்ரொடக்ஷன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். நாகிரெட்டியின் மகள் பெயர் விஜயா அவருடைய பெயரிலேயே தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.

முதலிலேயே பாதாள பைரவி என்ற படத்தை தயாரித்தனர். தமிழ் மற்றும் தெலுகு என இரண்டு மொழிகளிலும் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இரண்டாவது கதாநாயகியாக சிறிய வேடத்தில் இந்த திரைப்படத்தில் சாவித்திரி நடித்து மிகப்பெரிய புகழ்பெற்றார்.

அதற்குப் பிறகு ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரி இவர்கள் இருவரையும் வைத்து மிஸ்ஸியம்மா என்ற திரைப்படத்தை தயாரித்துக் கொடுத்தார் அது மாபெரும் வெற்றி படமாக நாகிரெட்டிக்கு அமைந்தது. அதற்குப் பிறகு பத்து ஆண்டுகள் தமிழ் சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்த நாகிரெட்டி எங்கள் வீட்டுப்பிள்ளை திரைப்படத்தை தயாரித்தார். சொல்லவே தேவையில்லை தமிழ்நாடு திரையரங்குகள் முழுவதும் ஹவுஸ் புல் போர்டு தான்.

இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இந்த படத்தை தயாரித்தார் நாகி ரெட்டி. அதற்குப் பிறகு எம்ஜிஆரை வைத்து நம் நாடு திரைப்படத்தை தயாரித்தார் அந்த திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்தார்.

வாகினி ஸ்டுடியோ, விஜயா வாகினி ஸ்டுடியோவாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு பிரம்மாண்டமாக மாறியது. தென்கிழக்கு ஆசிய பகுதிகளிலேயே இதுதான் மிகப்பெரிய ஸ்டுடியோவாக திகழ்ந்து வந்தது. ஆரம்பத்தில் கைகோர்த்த நாகிரெட்டி, சக்கரபாணி நட்பு கடைசிவரை தொடர்ந்து.

அப்போது இருந்த காலகட்டத்தில் தென்னிந்திய நடிகர் முழுவதும் சென்னையில் தான் படத்தை எடுப்பார்கள். ஏனென்றால் அனைத்து ஸ்டுடியோக்கலும் சென்னையில் தான் இருந்தது. அப்போது ஆந்திர பிரதேசத்தின் முதலமைச்சர் ஆக இருந்த சஞ்சீவ் ரெட்டி, ஆந்திராவில் ஸ்டுடியோ அமைக்க நாகி ரெட்டியிடம் கேட்டனர்.என்னை வாழவைத்த தமிழ்நாட்டை விட்டு நான் வரமாட்டேன் என கூறிவிட்டார்.

சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக மாறுதல் ஏற்பட வெளிப்புற காட்சிகள் எடுக்கத் தொடங்கினர். அதனால் ஸ்டுடியோவின் வேலை குறைந்துவிட்டன. அனைத்து ஸ்டுடியோக்களும் மூடப்பட்ட நிலையில் தனது வாகினி ஸ்டுடியோவை மக்களுக்கு பயனுள்ளதாக மாற்றுவதற்காக விஜயா மருத்துவமனை மற்றும் திருமண மண்டபம் ஒன்றை கட்டினார் நாகிரெட்டி.

திரைப்படத் துறையில் பல்வேறு பதவிகளை வகித்து வந்த நாகிரெட்டிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டன. சென்னையில் வாழ்ந்து வந்த இவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி காலமானார்.

இந்தியா முழுவதும் இருந்த சூப்பர் ஸ்டார்களை வைத்து வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர் நாகி ரெட்டி. இன்று அவரது இருபதாவது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. சினிமாவின் முன்னேற்றத்தில் இவருக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு என்று கூறினால் அது மிகையாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்