RIP Ramoji Rao: தயாரிப்பாளரும், ராமோஜி பிலிம் சிட்டியின் உரிமையாளருமான ராமோஜி ராவ் மறைவு!
RIP Ramoji Rao: ராமோஜி குழும நிறுவன தலைவர் ராமோஜி ராவ் (87) உடல்நலக் குறைவு காரணமாக இன்று ( ஜூன் 8 ) உயிரிழந்தார்.

RIP Ramoji Rao: பிரபல ஊடக அதிபரும், திரைப்பட அதிபருமானவர், ராமோஜி ராவ் (87). இவருக்கு கடந்த 5 ஆம் தேதி உயர் இரத்த அழுத்தம் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக அவர் ஹைதராபாத்தில் இருக்கும் நானக்ராம்குடாவில் உள்ள நட்சத்திர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
கைவிட்ட சிகிச்சை
மருத்துவர்கள் அவரது இதயத்தில் ஸ்டென்ட் பொருத்தி, ஐசியூவில் வென்டிலேட்டரில் வைத்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று ( ஜூன் 8 ) அதிகாலை 4. 50 மணிக்கு அவர் காலமானார்.
அவரது உடல் ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில் உள்ள இல்லத்திற்கு இறுதி சடங்கிற்காக கொண்டு செல்லப்படுகிறது. அவரின் மறைவு குடும்பத்தினர் மட்டுமில்லாமல் திரையுலகினர், அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.