Ghilli Movie: விஜய் எடுத்த அந்த முடிவு.. ரூட் போட்ட எஸ்.ஏ.சி.. தெலுங்கில் க்ளாஸ்.. தமிழில் மாஸ்! - கில்லி உருவான விதம்!
Ghilli Movie: விஜயும், அவரது அப்பாவான எஸ்ஏசியும் பார்த்தார்கள். அப்போது அந்த படம் விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டது. இதையடுத்து விஜய் அவரது அப்பாவிடம், ஒக்கடு உரிமையை நாம் வாங்கிவிடலாம் என்று கூறி இருக்கிறார். - கில்லி உருவான விதம்!
Ghilli Movie: கில்லித்திரைப்படம் உருவான விதம் குறித்து அந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
ஏ எம் ரத்தினம்தான் சரியாக இருப்பார்
அவர் பேசும் போது, “கில்லி திரைப்படம் தெலுங்கில் வெளியான ஒக்கடு திரைப்படத்தின் ரீமேக் ஆகும். அந்தத் திரைப்படத்தை விஜயும், அவரது அப்பாவான எஸ்ஏசியும் பார்த்தார்கள். அப்போது அந்த படம் விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டது. இதையடுத்து விஜய் அவரது அப்பாவிடம், ஒக்கடு உரிமையை நாம் வாங்கிவிடலாம் என்று கூறி இருக்கிறார். இந்த நிலையில்தான் எஸ்.ஏ.சி இந்த படத்தில் விஜயை சரியாக பொருத்தி, பிரமாண்டமாக எடுப்பதற்கு ஏ எம் ரத்தினம்தான் சரியாக இருப்பார் என்று கருதி, என்னை அழைத்தார்.
படத்தை பார்த்த பொழுது, படம் மிகவும் அதிக பொருட்செலவுடன் எடுக்கப்பட வேண்டிய படம் என்பதை நான் கணித்து விட்டேன் இதையடுத்து நான் எஸ்.ஏ.சி சாரிடம், விஜய் இந்த படத்தில் நடிக்கும் பொழுது, படம் நிச்சயமாக வெற்றி பெறும். ஆனால், இந்த படத்தின் வெற்றி, அவரது அடுத்த படத்திற்கு பேருதவியாக இருக்கும் என்பது தெரியும். ஆகையால், நீங்கள் எனக்கு இந்த படம் செய்தால், இரண்டு படங்களுக்கான கால்சீட்டை தாருங்கள்.. என்று கூறி, முடிவை நாளை சொல்கிறேன் என்று சொல்லி வந்தேன்.
