Tamil News  /  Entertainment  /  Priyanka Deshpande Mom Latest Interview About Her Bad Face Of Life And Struggle

Priyanka deshpande: ‘அவ எடுத்த அந்த தப்பான முடிவு.. ரொம்ப ரொம்ப வருத்தம்.. அந்த வலி! - பிரியங்கா அம்மா!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 15, 2024 04:42 AM IST

வீட்டில் ஒரு அப்பா இருந்து எப்படி குடும்பத்தை நடத்துவாரோ அதேபோல பிரியங்கா குடும்பத்தை கொண்டு சென்றாள். அவளுக்கும் எனக்கும் நிறைய சண்டைகள் வரும். ஆனால் அவள் அவளை போல அக்கறை காட்ட யாராலும் முடியாது

பிரியங்கா
பிரியங்கா

ட்ரெண்டிங் செய்திகள்

அப்பா போன பிறகு குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற மும்முனைப்போடு சின்னத்திரையில் கால்பதித்த அவர், இன்று தவிர்க்க முடியாத ஆளுமையாக மாறியிருக்கிறார். 

இதற்கிடையே தன்னுடைய காதலர் பிரவீன் குமாரை கடந்த 2016ம் ஆண்டு கரம் பிடித்தார். அதன் பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டதாக சொல்லப்படுகிறது.  

இந்த நிலையில் பிரியங்காவின் அம்மா அண்மையில் எஸ்.எஸ். மியூசிக் சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் பேசும் போது, “ அவள் சிறிய வயதில் இருந்து நிறைய கஷ்டங்களை சந்தித்து இருக்கிறாள். என்னுடைய கணவர் நான் மிகவும் இளம் வயதாக இருக்கும் பொழுதே என்னுடைய கணவர் என்னை விட்டு சென்று விட்டார். யாரும் எங்களுக்காக உதவி செய்ய முன்வரவில்லை. 

பிரியங்காவை பொருத்தவரை அவள் சிறு வயதிலிருந்து மிகவும் பொறுப்பானவளாகவே இருந்தாள். அவள் சம்பாதிக்கும் பணமானது அப்படியே நேராக என்னுடைய வங்கிக் கணக்குக்குதான் வரும். தற்போது அவள் சம்பாதிக்கும் பணம் அவளது வங்கிக் கணக்கிற்கு வருகிறது

வீட்டில் ஒரு அப்பா இருந்து எப்படி குடும்பத்தை நடத்துவாரோ அதேபோல பிரியங்கா குடும்பத்தை கொண்டு சென்றாள். அவளுக்கும் எனக்கும் நிறைய சண்டைகள் வரும். ஆனால் அவள் அவளை போல அக்கறை காட்ட யாராலும் முடியாது.அவ்வளவு அக்கறையாக பார்த்துக் கொள்வாள். அவளைப் போல பெருந்தன்மையான இதயம் எனக்கு கூட இல்லை.

அவள் கடந்து வந்த பாதையை பார்க்கும் பொழுது நான் உண்மையில் வருத்தம் அடைகிறேன். கடவுள் எல்லாவற்றையும் ஒருவருக்கு கொடுத்து விடமாட்டார். அவரை நாம் நினைக்க வேண்டும் இல்லையா? பிரியங்கா குறித்த வேதனை எனக்கு இருக்கிறது. 

அதுவும் கூடிய சீக்கிரத்தில் சரியாகும் என்று நம்புகிறேன். அவள் வாழ்க்கையில் ஒரு தவறை செய்திருக்கிறாள்.அந்த தவறை அவள் மீண்டும் செய்யக்கூடாது. அவள் மிகச் சரியானதை தேர்வு செய்ய வேண்டும்” என்று பேசினார். 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.