Priyanka deshpande: ‘ஆமா உன்னை வெளியஅனுப்பனும்;வன்மத்தை கக்கிய பிரியங்கா - வெளியானது பகீர் ஆடியோ!
Priyanka deshpande: பிரியங்கா மணிமேகலையை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து நீ வெளியே போக வேண்டும் என்று பேசிய ஆடியோ வைரல் ஆகி வருகிறது.

Priyanka deshpande: ‘ஆமா உன்னை வெளியஅனுப்பனும்;வன்மத்தை கக்கிய பிரியங்கா! - வெளியானது பகீர் ஆடியோ!
பரபரப்பை ஏற்படுத்திய மணிமேகலை:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணி மேகலை வெளியேறிய நிலையில், அதற்கான காரணத்தை அவர் தன்னுடைய யூடியூப் சேனலில் விரிவாக பேசி இருந்தார்.
அந்த வீடியோவில் அவர் மறைமுகமாக பிரபல தொகுப்பாளினி பிரியங்காவை குறிப்பிட்டு, அவரின் ஆதிக்கம் காரணமாகவே, நான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினேன் என்று கூறி இருந்தார். இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது குக் வித் கோமாளி படப்பிடிப்பில் இருவரும் சண்டை யிட்டது தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.