தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Priyanka Deshpande Emotional Interview About Her Brother Rohit Newborn Baby Iha

Priyanka deshpande: ‘அவதான் என்னோட முதல் குழந்தை.. அவளுக்காக எது வேணும்னாலும்..’ -பிரியங்கா எமோஷனல்!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 08, 2024 08:15 AM IST

“ அவள் மகிழ்ச்சியை அள்ளித் தருபவள். எங்களது குடும்பத்தையே தலைகீழாக திருப்பியவள்.” - பிரியங்கா!

பிரியங்கா பேட்டி!
பிரியங்கா பேட்டி!

ட்ரெண்டிங் செய்திகள்

அப்பா போன பிறகு குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற மும்முனைப்போடு சின்னத்திரையில் கால்பதித்தவர், தவிர்க்க முடியாத ஆளுமையாக மாறினார். 

கடந்த 2016ம் ஆண்டு தன்னுடைய காதலர் பிரவீன் குமாரை கரம் பிடித்த பிரியங்கா, கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். இப்படி வாழ்க்கையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்த இவருக்கு, அவரின் சகோதரர் மகளான ஈகாவின் வருகை, பெரும் ஆறுதலாக மாறியிருக்கிறது. இது குறித்து அவர் அண்மையில் வாவ் லைஃப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார். 

இது குறித்து அவர் பேசும் போது, “ என்னுடைய வாழ்க்கையில் நேர்ந்த சில விஷயங்கள் என்னுடைய அம்மாவை மிக மிக கஷ்டப்படுத்தி விட்டது. ஏன் என் மகளுக்கு இப்படி எல்லாம் நடக்கிறது என நொந்து கொண்டதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். 

அவர் 34 வயதிலிருந்து தன்னந்தனியாக வாழ்கையில் போராடியிருக்கிறார். எங்களுக்காக அவர் அவருடைய குடும்பத்தாரை எதிர்த்து நின்று இருக்கிறார். சண்டை போட்டு இருக்கிறார். ஒரு நாள் என்னுடைய தம்பி அவளுடைய மனைவி கர்ப்பமாக இருக்கிறாள் என்று வந்து சொன்னான். அந்த சமயத்தில் நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமிட் ஆகி இருந்தேன்.

இதனையடுத்து அவன் ஒரு கடிதத்தில் அவனுடைய குழந்தை எழுதுவது போல,  “நீ இங்கு வருவதற்குள் வயிற்றில் இருக்கும் நான் கொஞ்சம் வளர்ந்திருப்பேன். அப்போது என்னை வந்து பார் என்று எழுதியிருந்தான்.” அதை நான் பிக்பாஸ் வீட்டிற்குள் மிகவும் பத்திரமாக வைத்து இருந்தேன். அவள் பெயர் இகா. அவள் மகிழ்ச்சியை அள்ளித் தருபவள். எங்களது குடும்பத்தையே தலைகீழாக திருப்பியவள். 

அண்மையில்,சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சிக்கு நானும் அம்மாவும் சென்று இருந்தோம். ஆனாலும் நாள் ஒன்றுக்கு மூன்று முறை வீடியோ காலில் பேசிவிடுவோம். நாங்கள் அவளிடம் சீக்கிரமாக வந்து விடுகிறோம் வந்து விடுகிறோம் என்று சொல்லும் பொழுது, அவள் கம் கம் என்று சொல்வாள். 

அதற்காகத்தான், அந்த அன்பிற்காகத்தான் நாங்கள் இவ்வளவு ஏங்குகிறோம். அவள் பார்ப்பதற்கு அப்படியே என்னை போலவே இருப்பாள். அதனால் அவளை நான் என்னுடைய குழந்தையாகவே பார்க்கிறேன். அவளுக்காக எது வேண்டும் என்றாலும் நான் செய்வேன்” என்று பேசினார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்